Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ChatGPT : சாட்ஜிபிடி மூலம் Black & White புகைப்படத்தை Colour-ஆக மாற்றுவது எப்படி?.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

Turning Black and White Photo Into Colour | செயற்கை நுண்ணறிவு அம்சமான சாட்ஜிபிடியில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. அந்த வகையில் சாட்ஜிபிடியை பயன்படுத்தி கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படங்களை வண்ணமாக மாற்றலாம். இந்த நிலையில், சாட்ஜிபிடி மூலம் கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படங்களை வண்ணமாக மாற்றுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ChatGPT : சாட்ஜிபிடி மூலம் Black & White புகைப்படத்தை Colour-ஆக மாற்றுவது எப்படி?.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 21 May 2025 21:18 PM

தற்போது உள்ள தொழில்நுட்ப (Technology) அம்சங்கள் மற்றும் வசதிகள் எல்லாம் நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் இல்லை. தற்போது இருக்கும் தொழில்நுட்ப வசிகள் எல்லாம் கடைசி 50 ஆண்டுகளில் உருவானவையாக உள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன்னதாக கலர் கேமராக்கள் கூட இருந்திருக்கவில்லை. இதனால் தான் 70களில் எடுத்த திரைப்படங்கள் அனைத்தும் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். கலர் கேமராக்கள் இல்லாததால் அப்போது எடுத்த புகைப்படங்கள் எல்லாம் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் காரணமாக அனைவரது வீட்டிலும் குறைந்தபட்சம் ஒரு கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படமாவது இருக்கும். அந்த புகைப்படங்களை வண்ணங்களுடன் நீங்கள் பார்க்க விரும்பினால், ஆயிரக்கணக்கில் எல்லாம் செலவு செய்ய வேண்டாம். மிக சுலபமாக சாட்ஜிபிடி (ChatGPT) உதயிடன் கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படங்களை வண்ணங்கள் நிறைந்த புகைப்படங்களாக மாற்றிவிடலாம்.

அசத்தல் அம்சங்களை கொண்டுள்ள சாட்ஜிபிடி

செயற்கை நுண்ணறிவின் (AI – Artificial Intelligence) மிக முக்கிய அம்சமாக உள்ளது தான் சாட்ஜிபிடி. சாட்ஜிபிடி மூலம் பல சுவாரஸ்யமான விஷயங்களை மிக எளிதாக செய்து முடிக்க முடியும். இதன் காரணமாக பலரும் தங்களது அன்றாட வாழ்வில் சாட்ஜிபிடியை அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். சாட்ஜிபிடியால் உருவாக்கப்பட்ட ஜிப்லி (Ghibli) புகைப்படங்கள் கூட இணையத்தில் மிகவும் பிரபலமாகி வந்தது. இவ்வாறு பல அம்சங்களை கொண்ட சிறந்த அம்சமாக சாட்ஜிபிடி உள்ளது. இந்த நிலையில், சாட்ஜிபிடியை பயன்படுத்தி கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படங்களை வண்ணங்கள் நிறைந்ததாக மாற்றுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சாட்ஜிபிடியை பயன்படுத்தி கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படங்களை கலராக மாற்றுவது எப்படி?

  1. அதற்கு முதலில் சாட்ஜிபிடிக்கு செல்ல வேண்டும்.
  2. அங்கு நீங்கள் எந்த புகைப்படத்தின் நிறத்தை மாற்ற விரும்புகிறீர்களோ அதனை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  3. பிறகு, அந்த புகைப்படத்தில் என்ன என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும்.
  4. குறிப்பாக உடைகள் எந்த நிரத்தில் இருக்க வேண்டும், புகைப்படத்தில் இருப்பவர்கள் எந்த நிறத்தில் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் குறிப்பிட வேண்டும்.
  5. கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படத்தை கலராக மாற்றுவதற்காக நீங்கள் என்ன என்ன செய்ய விரும்புகிறீர்களோ அவற்றை எல்லாம் பதிவிட்ட பிறகு அதற்கான பணியை தொடங்க வேண்டும்.
  6. நீங்கள் உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில் உங்களின் கருப்பு வெள்ளை புகைப்படத்தை சாட்ஜிபிடி வண்ணங்கள் மிகுந்ததாக மாற்றி தந்துவிடும்.

மேற்குறிப்பிட்ட இந்த முறையை பின்பற்றி மிக சுலபமாக உங்கள் கருப்பு வெள்ளை புகைப்படத்தை வண்ணங்கள் மிகுந்ததாக மாற்றிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.