AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிப்ரவரியில் அறிமுகமாகும் சாம்சங்கின் அட்டகாசமான 5 கேட்ஜெட்டுகள்!

Five New Samsung Gadgets To Introduce | சாம்சங் நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட கேட்ஜெட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில் 2026, பிப்ரவரி மாதத்தில் ஐந்து புதிய கெட்ஜெட்டுகளை அறிமுகம் செய்ய உள்ளது.

பிப்ரவரியில் அறிமுகமாகும் சாம்சங்கின் அட்டகாசமான 5 கேட்ஜெட்டுகள்!
சாம்சங் கேலக்ஸி எஸ்26
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 04 Feb 2026 15:17 PM IST

உலக அளவில் அதிக பயனர்களை கொண்ட டெக் நிறுவனமாக சாம்சங் (Samsung) உள்ளது. இந்த நிறுவனத்திற்கு இந்தியாவிலும் ஏராளமான பயனர்கள் உள்ளனர். இதன் காரணமாக சாம்சங் இந்தியாவில் பல்வேறு புதிய புதிய அட்டகாசமான அம்சங்களை கொண்ட செயலிகள் மற்றும் கருவிகளை அறிமுகம் செய்து வருகிறது. ஸ்மார்ட்போன்கள், ஏர்பாட்கள், வாட்சுகள் உள்ளிட்ட கேட்ஜெட்டுகளை சாம்சங் தொடர்ந்து அறிமுகம் செய்து வரும் நிலையில், விரைவில் இந்தியாவில் ஐந்து அட்டகாசமான கேட்ஜெட்டுகளை அறிமுகம் செய்ய உள்ளது. அவை என்ன என்ன, அவற்றின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

5 அட்டகாசமான கேட்ஜெட்டுகளை அறிமுகம் செய்ய உள்ள சாம்சங்

கடந்த சில நாட்களாக சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ் சீரீஸ் (Galaxy S Series) தொடர்பான தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், சாம்சங் நிறுவம் கேலக்ஸி எஸ் சீரீஸ் உடன் 5 சேர்த்து அட்டகாசமான கேட்ஜெட்டுகளை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 25, 2026 அன்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தில் நடைபெற உள்ள சாம்சங் நிகழ்ச்சியில் இந்த கேட்ஜெட்டுகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : கூகுள் குரோமை பயன்படுத்த வேண்டாம்.. பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஆப்பிள்!

கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா

மற்ற ஸ்மார்ட்போன்களை விடவும் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் இந்த கேலக்ஸி எஸ் 26 அல்ட்ரா ஸ்மார்ட்போனை (Galaxy S26 Ultra Smartphone) அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.9 இன்ச் QHD + AMOLED டிஸ்பிளே மற்றும் குவால்கம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 பிராசசர் ஆகிய அம்சத்துடன் அறிமுகமாக உள்ளது.

கேலக்ஸி எஸ் 26

இந்த கேலக்ஸி எஸ் 26 ஸ்மார்ட்போனில் (Galaxy S26 Smartphone) 6.3 இன்ச் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 50 மெகாபிக்சல் கேமரா, 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா, 10 மெகாபிக்சல் 3எக்ஸ் டெலிபோட்டோ லென்ஸ் ஆகிய அம்சங்களுடன் அறிமுகமாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி 4,300 mAh ஆக் உயர்த்தப்பட உள்ளது.

இதையும் படிங்க : விரைவில் வாட்ஸ்அப்பில் வர உள்ள கட்டண முறை.. அதிர்ச்சியில் பயனர்கள்!

கேலக்ஸி எஸ்26 பிளஸ்

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஸ்மார்ட்போன் (Galaxy S26 Plus Smartphone) 6.7 இன்ச் AMOLED டிஸ்பிளே உடன் அறிமுகமாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அடிப்படை மாடலை போலவே இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4,900 mAh பேட்டரி அம்சத்துடன் அறிமுகமாக உள்ளது.

கேலக்ஸி வாட்ச் 9, வாட்ச் அல்ட்ரா 2

சாம்சங் நிறுவனம் இந்த கேலக்ஸி வாட்ச் 9 மற்றும் வாட்ச் அல்ட்ரா 2 ஆகிய கேட்ஜெட்டுகளையும் அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us