Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Google : Weak Password-களை இனி கூகுளே மாற்றிவிடும்.. புதிய அம்சம் அறிமுகம்!

Google's Latest Security Feature | பயனர்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் கூகுள் நிறுவனம் பல புதிய அறிவிப்புகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பலவீனமான பாஸ்வேர்டுகளால் ஏற்படும் சிக்கல்களை குறைக்கும் வகையில் புதிய ஆடோமெட்டிக் பாஸ்வேர்டு அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் என்ன சிறப்பு அம்சங்கள் உள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Google : Weak Password-களை இனி கூகுளே மாற்றிவிடும்.. புதிய அம்சம் அறிமுகம்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 21 May 2025 18:11 PM

தொழில்நுட்ப வளர்ச்சியின் (Technology Development) காரணமாக பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பல வகையான செயலிகள் (Apps) மற்றும் இணையதளங்களை (Websites)  பயன்படுத்துகின்றனர். இவற்றை பயன்படுத்தும்போது பயனர்கள் பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு பயனர் ஐடி (User ID) மற்றும் பாஸ்வேர்டு (Password) அளிக்கும் படி அறிவுரை வழங்கப்படும். இந்த சமயத்தில் பெரும்பாலான நபர்கள் மிகவும் சாதாரனமான மற்றும் எளிதில் கண்டுபிடிக்க கூடிய பாஸ்வேர்டுகளை பயன்படுத்துகின்றனர். இது பயனர்களின் பாதுகாப்பு சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. எனவே இதற்கு தீர்வு காணும் வகையில், கூகுள் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பலவீனமான பாஸ்வேர்டுகளை அமைக்கும் பயனர்கள்

சில செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு செட் செய்ய வேண்டும். இந்த சூழலில் பெரும்பாலான நபர்கள் மிகவும் சுலபமான மற்றும் பாதுகாப்பாற்ற பாஸ்வேர்டுகளை செட் செய்கின்றனர். குறிப்பாக பெரும்பாலான நபர்கள் 1234 என பாஸ்வேர்டு வைப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. மேலும், பலர் பாஸ்வேர்டு என்பதையே பாஸ்வேர்டாக வைத்திருப்பதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது. இவ்வாறு மிக எளிமையான பாஸ்வேர்டுகளை வைப்பதன் மூலம் கணக்குகள் சுலபமாக ஹேக் செய்யப்பட்டு தகவல்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டு இருந்தது.

பலவீனமான பாஸ்வேர்டுகள் – கூகுள் நிறுவனம் புதிய அறிவிப்பு

இவ்வாறு சுலபமான மற்றும் பலவீனமான பாஸ்வேர்டுகளை அமைப்பதை பயனர்கள் வழக்கமாக கொண்டுள்ள நிலையில், அதற்கு தீர்வு அளிக்கும் வகையில் கூகுள் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பயனர்கள் அமைக்கும் பலவீனமான மற்றும் சுலபமான பாஸ்வேர்டுகள் இனி தானாகே மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. கூகுள் பாஸ்வேர்டு மேனேஜரில் (Password Manager) தான் இந்த புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த அம்சம் மூலம் ஒரே கிளிக்கில் உறுதியான மற்றும் பாதுகாப்பான பாஸ்வேர்டுகள் உருவாக்கப்படும். இதன் காரணமாக பயனர்கள் பலவீனமான பாஸ்வேர்டுகள் மூலம் தங்களது தகவல்களை இழக்கும் நிலை ஏற்படாது.

கூகுளின் இந்த புதிய அம்சம் பலவீனமான பாஸ்வேர்டுகளை தானாகவே உறுதியானதாக மாற்றிவிடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், பயனர்களின் அனுமதியின்றி அது மேற்கொள்ளப்படாது என்று கூறப்பட்டுள்ளது. எனவே, உறுதியான பாஸ்வேர்டை பெற விரும்பும் நபர்கள் கூகுளின் இந்த அம்சத்தை பயன்படுத்தி உறுதியான மற்றும் பாதுகாப்பான பாஸ்வேர்டை பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐகூ 10 ப்ரோ பிளஸ் அறிமுகம் - சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
ஐகூ 10 ப்ரோ பிளஸ் அறிமுகம் - சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?...
Pomegranate: தினமும் மாதுளையை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் !
Pomegranate: தினமும் மாதுளையை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் !...
வெறும் ரூ.210 முதலீடு செய்து மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் பெறலாம்!
வெறும் ரூ.210 முதலீடு செய்து மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் பெறலாம்!...
அப்துல் கலாமாக நடிக்கும் தனுஷ் - இயக்குநர் யார் தெரியுமா?
அப்துல் கலாமாக நடிக்கும் தனுஷ் - இயக்குநர் யார் தெரியுமா?...
புயல் காரணமாக நடுவானில் விமானம் சேதம் - பயத்தில் அலறிய பயணிகள்
புயல் காரணமாக நடுவானில் விமானம் சேதம் - பயத்தில் அலறிய பயணிகள்...
டெல்லியில் கனமழை! மின் தடை.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
டெல்லியில் கனமழை! மின் தடை.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!...
ஏஸ் முதல் நரிவேட்ட வரை... இந்த வார தியேட்டர் ரிலீஸ் லிஸ்ட் இதோ!
ஏஸ் முதல் நரிவேட்ட வரை... இந்த வார தியேட்டர் ரிலீஸ் லிஸ்ட் இதோ!...
ரயிலில் இருந்து எறியப்பட்ட சூட்கேஸ்.. திறந்தால் இளம் பெண் உடல்..!
ரயிலில் இருந்து எறியப்பட்ட சூட்கேஸ்.. திறந்தால் இளம் பெண் உடல்..!...
ஆரோக்கியத்துக்கு சிறந்தது க்ரீன் டீயா? பிளாக் டீயா?
ஆரோக்கியத்துக்கு சிறந்தது க்ரீன் டீயா? பிளாக் டீயா?...
20 வருசமா ஹீரோயினா இருப்பது பெருசு - த்ரிஷாவை புகழ்ந்த விஜய்
20 வருசமா ஹீரோயினா இருப்பது பெருசு - த்ரிஷாவை புகழ்ந்த விஜய்...
சாட்ஜிபிடி மூலம் Black & White புகைப்படத்தை Colour-ஆக மாற்றலாம்!
சாட்ஜிபிடி மூலம் Black & White புகைப்படத்தை Colour-ஆக மாற்றலாம்!...