My Lord: சசிகுமாரின் மனிதம் ஜெயித்ததா? மை லார்ட் படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!
My Lord Movie Reviews: தமிழில் இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்திலும், சசிகுமார் நடிப்பிலும் இன்று 2026 பிப்ரவரி 13ம் தேதியில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் மை லார்ட். இந்த படமானது எமோஷனல் மற்றும் வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்திருக்கும் நிலையில், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் மற்றும் இயக்குநராக இருப்பவர் சசிகுமார் (Sasikumar). இவரின் நடிப்பில் தமிழில் வித்தியாசமான கதைக்களத்தில் படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் தற்போது இவர் மாறுபட்ட ஜானர் கதையை தேர்ந்தெடுத்துவருகிறார். அந்த விதத்தில் கடந்த 2025ம் ஆண்டில் வெளியான டூரிஸ்ட் பேமிலி (Tourist Family)படமானது சூப்பர் ஹிட் வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து இந்த 2026ம் ஆண்டில் வெளியான படம்தான் மை லார்ட் (My Lord). இந்த படத்தை பிரபல இயக்குநர் ராஜு முருகன் (Raju Murugan) இயக்க, ஒலிம்பியா பிளீஸ் என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரபல கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சார் (Chaitra J Achar) நடித்துள்ளார். இந்த ஜோடியானது இப்படத்தின் மூலம் முதல் முறையாக இணைந்திருக்கும் நிலையில், வரவேற்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று 2026 பிப்ரவரி 13ம் தேதியில் இப்படம் வெளியாகியுள்ள நிலையில், திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த எக்ஸ் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.




இதையும் படிங்க: ரஜினிகாந்த் சொன்ன வார்த்தை.. மேடையில் நெகிழ்ச்சியாக பேசிய அபிஷன் ஜீவிந்த்!
மை லார்ட் திரைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த எக்ஸ் விமர்சனங்கள் குறித்த பதிவு:
#MyLord Review : Engaging Human Drama!
My Rating : 3.25/5
First and foremost it is not a courtroom drama. A simple and emotional human story about dignity & empathy in typical #RajuMurugan style with hard-hitting dialogues.
Highlight is an outstanding and sincere award winning… pic.twitter.com/ACLZtDxNxB
— Sreedhar Pillai (@sri50) February 13, 2026
இந்த மை லார்ட் திரைப்படமானது ஒரு வழக்கமான கதைக்களத்தில் இல்லை. இப்படத்தை இயக்குநர் ராஜு முருகன் அவரின் ஸ்டைலில் தெரிவித்திருக்கிறார். கடுமையான வசனங்கள், எழிமையான உணர்ச்சிற்ப்பூர்வம் என அவரின் கதையை சிறப்பாகவே தெரிவித்துள்ளார். இப்படத்தின் மைய கருவானது கிட்னி மோசடியை பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மை லார்ட் திரைப்படத்தில் நடிகர்களின் நடிப்பு எப்படி இருக்கு :
#MyLord 3.5/5 An engaging family drama with a strong message and impactful performances from @SasikumarDir and #ChaithraJAchar in the lead. Strong supporting cast, powerful dialogues and import of kindness & human emotions makes this film a sure watch for families.… pic.twitter.com/W0daMhy89R
— sridevi sreedhar (@sridevisreedhar) February 12, 2026
இந்த படத்தில் சசிகுமார் தனது ஆழ்ந்த உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தியிருக்கிறார். இப்படத்தின் மூலம் அவருக்கு விருதுகள் கிடைத்தாலும் ஆச்சர்யமில்லை. அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை சைத்ரா ஜே ஆச்சார் என்பவரும் தனது நடிப்பை சிறப்பாக காட்டியுள்ளார்.
மை லார்ட் படத்தின் கதை என்ன ? திரையரங்கு சென்று பார்க்கலாமா?
இந்த மை லார்ட் படமானது தமிழ்நாட்டில் கிராமப்புறத்தில் சட்டவிரோத கிட்னி மோசடியின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது, அங்கு கடன்பட்ட மக்கள் தங்கள் சிறுநீரகத்தை விற்க தரகர்களால் ஈர்க்கப்படுகிறார்கள் அது குறித்து இப்படத்தின் கதை அமைந்துள்ளது.
இதையும் படிங்க: முதல் முறையாக அதை முயற்சிக்கிறேன்.. டி55 பட கதை இதுதான் – மாரி செல்வராஜ் பேச்சு!
மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் ஷேன் ரோல்டனின் இசையும் படத்தில் ஒரு தூணாக இருக்கிறது. ஆக மொத்தத்தில் இந்த மை லார்ட் படமானது விழிப்புணர்வு, எமோஷனல் மற்றும் நீதி தொடர்பான கதைக்களத்தில் அமைந்துள்ளது. நிச்சயமாக அனைவரும் திரையரங்கு சென்று பார்க்கும் படமாக மை லார்ட் படம் உள்ளது.