Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Lemon Peel Use: எலுமிச்சைத் தோலை வீணாக்காதீர்கள்.. இப்படி யூஸ் பண்ணா! வீடு பளபளக்கும்!

Lemon Peel Reuse: எலுமிச்சைத் தோல்களில் உள்ள இயற்கை எண்ணெய்கள் மற்றும் வைட்டமின் சி நமது சருமம், முடி மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இந்த தோல்கள் பாக்டீரியாக்களை அழிக்கவும், துர்நாற்றத்தை விரட்டவும், பொருட்களை பளபளப்பாக வைக்கவும் உதவுகின்றன. இதனால்தான் வீட்டு வேலைகளுக்கு அவற்றை அடிக்கடி பயன்படுத்துவது நல்ல பலனை தரும் என்று கூறப்படுகிறது. 

Lemon Peel Use: எலுமிச்சைத் தோலை வீணாக்காதீர்கள்.. இப்படி யூஸ் பண்ணா! வீடு பளபளக்கும்!
எலுமிச்சைத் தோல்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 13 Feb 2026 17:17 PM IST

எலுமிச்சை ஒவ்வொரு வீட்டு சமையலறையிலும் (Kitchen) தினமும் பயன்படுத்தும் ஒரு உணவு பொருளாகும். லெமன் சாதம், லெமன் டீ, ப்ரைடு சிக்கனுக்கு புத்துணர்ச்சியைச் சேர்ப்பதாக இருந்தாலும் சரி, எலுமிச்சை எல்லா இடங்களிலும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், நம்மில் பெரும்பாலோர் எலுமிச்சை சாற்றைப் பிழிந்த பிறகு, அதன் தோலை குப்பைத் தொட்டியில் வீசுகிறோம். எலுமிச்சைத் தோல்கள் (Lemon Peel) சாற்றைப் போலவே பயனுள்ளதாக இருக்கும். அவற்றில் உள்ள இயற்கை எண்ணெய்கள், வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் பல நன்மைகளை தரும். எலுமிச்சையின் தோல்களை கொண்டு சுத்தம் செய்தல், ஆரோக்கியம் மற்றும் அழகு உள்ளிட்ட பல சிறிய வீட்டுப் பணிகளை எளிதாக்கவும், பணத்தை மிச்சப்படுத்தவும் எலுமிச்சைத் தோல்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.

எலுமிச்சைத் தோல்களில் உள்ள இயற்கை எண்ணெய்கள் மற்றும் வைட்டமின் சி நமது சருமம், முடி மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இந்த தோல்கள் பாக்டீரியாக்களை அழிக்கவும், துர்நாற்றத்தை விரட்டவும், பொருட்களை பளபளப்பாக வைக்கவும் உதவுகின்றன. இதனால்தான் வீட்டு வேலைகளுக்கு அவற்றை அடிக்கடி பயன்படுத்துவது நல்ல பலனை தரும் என்று கூறப்படுகிறது.

ALSO READ: சத்தான காலை உணவு வேணுமா? இதை ட்ரை பண்ணுங்க!

எலுமிச்சை தோல்களை மீண்டும் பயன்படுத்துவதற்கான வழிகள்:

குளிர்சாதன பெட்டியில் உள்ள நாற்றத்தை நீக்கும்

நாம் சமையலறையில் சமைக்கும் பலதரப்பட்ட உணவுகளை மிச்சம் ஆகும்போது, அதனை ஃப்ரிட்ஜில் வைக்கிறோம். இதனால் ஃப்ரிட்ஜை திறக்கும்போது விசித்திரமான வாசனையை வெளிப்படுத்தும். இதுபோன்ற சூழ்நிலையில், எலுமிச்சை தோல்களில் சிறிது பேக்கிங் சோடாவை நிரப்பி ஃப்ரிட்ஜில் வைக்கலாம். இது ஒரு இயற்கையான வானையை வெளிப்படுத்தி துர்நாற்றத்தை உறிஞ்சி, ஃப்ரிட்ஜை புதிய வாசனையுடன் வைத்திருக்கும்.

சரும பராமரிப்பு:

சருமத்தை எப்போது பளபளப்பாக வைக்க எலுமிச்சைத் தோல்களை வெயிலில் காய வைத்து, பொடியாக அரைத்து, பின்னர் ரோஸ் வாட்டர் அல்லது தயிரில் கலந்து ஃபேஸ் பேக்காகப் பூசவும். இது உங்கள் சருமத்தைப் பிரகாசமாக்குவது மட்டுமல்லாமல், அதன் பளபளப்பையும் அதிகரிக்கும். இவ்வாறு செய்வது முகத்தில் ஏற்படும் எண்ணெய் பசை அல்லது மந்தமான சருமத்தை நீக்கி நன்மை பயக்கும்.

லெமன் தோல்களை பயன்படுத்தி டீ:

உங்கள் டீக்கு சுவை சேர்க்க விரும்புவோர் எலுமிச்சைத் தோல்களை வெயிலில் காய வைத்து ஒரு ஜாடியில் போட்டு வைக்கவும். அதன்படி, நீங்கள் தினசரி டீயை போடும்போது, காய்ந்த எலுமிச்சை தோலின் சில துண்டுகளைச் சேர்க்கவும். இது டீக்கு இயற்கையான சுவையையும் நுட்பமான நறுமணத்தையும் சேர்க்கும். இது உங்கள் மன அழுத்தத்தையும் போக்கும்.

ALSO READ: முட்டைக்கோஸில் இருந்து புழுக்களை அகற்றுவது எப்படி..? 3 எளிய ஹேக்குகள் இதோ!

உங்கள் வீட்டைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க, காய்ந்த எலுமிச்சைத் தோல்களை ஒரு சிறிய மூட்டையில் கட்டி, அலமாரி, பை அல்லது ஷூ ரேக்கில் வைக்கலாம்.இது துர்நாற்றத்தை உறிஞ்சி, அந்த இடம் முழுவதையும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.