Health Tips: தினமும் ட்ரை ப்ரூட்ஸ் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ஏன் முக்கியம்? அதிகளவில் சாப்பிட்டால் என்ன நடக்கும்?
Dry Fruits Benefits: பல்வேறு வகையான ட்ரை ப்ரூட்ஸ்களை தொடர்ந்து சாப்பிடுவது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதாவது, நோய்களை எதிர்க்கும் திறன் அதிகரிக்கும். இதனால், உங்கள் சளி மற்றும் காய்ச்சல் அடிக்கடி ஏற்படாது. பல்வேறு வகையான ட்ரை ப்ரூட்ஸ்கள் இதயத்தைப் பராமரிக்கின்றன.
பல்வேறு வகையான ட்ரை ப்ரூட்ஸ்களை (Dry Fruits) தினமும் சிறிய அளவில் சாப்பிடலாம். அதன் நன்மைகள் ஏராளம். பாதாம், வால்நட், முந்திரி, வேர்க்கடலை, பிஸ்தா, திராட்சை, பேரீச்சம்பழம் (Dates) போன்ற இவை அனைத்தையும் நீங்கள் ஏதோ ஒரு வகையில் எடுத்து கொள்வீர்கள். இருப்பினும், நீங்கள் ஒவ்வொரு நாளும் ட்ரை ப்ரூட்ஸ்களை சாப்பிட்டால், அளவு குறித்து மிகவும் கவனமாக இருப்பது முக்கியம். இல்லையெனில், அது பல்வேறு உடல்நல பிரச்சனைகளை உண்டாக்கும். இப்போது ட்ரை ப்ரூட்ஸ்களை தினமும் சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
பல்வேறு வகையான ட்ரை ப்ரூட்ஸ்களில் பல வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே, நீங்கள் ஒவ்வொரு நாளும் ட்ரை ப்ரூட்ஸ்களை சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், உங்கள் உடலில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பற்றாக்குறை இருக்காது.
ALSO READ: தினமும் ஒரு கைப்பிடி பூசணி விதைகள்.. ஆரோக்கிய அட்வைஸ் தரும் மருத்துவர் சிவசுந்தர்!




பாதாமின் நன்மைகள்:
காலையில் வெறும் வயிற்றில் தினமும் 2-3 பாதாமை சாப்பிடலாம். முந்தைய நாள் இரவு ஒரு கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீரில் ஊறவைக்கவும். மறுநாள் சாப்பிடுவதற்கு முன் அதை உரித்து எடுத்து கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் பாதாம் சாப்பிடுவது உங்கள் சருமத்தையும் முடியையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும், ஏனெனில் இதில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. மேலும் பாதாம் சாப்பிடுவது மூளையை சுறுசுறுப்பாகவும், கூர்மையாகவும், கவனத்தைவும் அதிகரிக்கிறது. மேலும், இது உங்கள் உடல் ஆற்றலையும் அதிகரிக்கிறது.
தினமும் ட்ரை ப்ரூட்ஸ்களை சாப்பிடும் பழக்கம் நாள் முழுவதும் உங்களுக்கு அதிக ஆற்றலை வழங்கும். நீங்கள் அலுவலகத்திற்கு செல்லும்போதோ அல்லது கல்லூரி செல்லும்போதோ ஒரு பாக்ஸில் ட்ரை ப்ரூட்ஸ்களை ஸ்நாக்ஸாக கொண்டு செல்லலாம். இதை அவ்வபோது ஸ்நாக்ஸாக சிறிது சிறிதாக எடுப்பதால் ஆற்றலை வழங்குவது மட்டுமின்றி, வயிற்றை நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை தரும். பேரீச்சம்பழம் மற்றும் பாதாம், இந்த இரண்டு ட்ரை ப்ரூட்ஸ்களையும், ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய அளவு சாப்பிடும்போது, உங்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைக்க உதவும். இந்த பட்டியலில் நீங்கள் உலர் திராட்சையையும் சேர்க்கலாம். இந்த உலர் திராட்சையில் ஊறவைத்த தண்ணீரைக் குடிப்பது கூட பல நன்மைகளைத் தரும்.
நோய் எதிர்ப்பு சக்தி:
பல்வேறு வகையான ட்ரை ப்ரூட்ஸ்களை தொடர்ந்து சாப்பிடுவது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதாவது, நோய்களை எதிர்க்கும் திறன் அதிகரிக்கும். இதனால், உங்கள் சளி மற்றும் காய்ச்சல் அடிக்கடி ஏற்படாது. பல்வேறு வகையான ட்ரை ப்ரூட்ஸ்கள் இதயத்தைப் பராமரிக்கின்றன. இந்த உணவுகள் தோல் மற்றும் கூந்தலுக்கும் முக்கியம். ட்ரை ப்ரூட்ஸ்களை சாப்பிடும் பழக்கம் எடையை குறைக்க பயனுள்ளதாக இருக்கும்.
ALSO READ: உங்களுக்கு புரதக் குறைபாடு உள்ளதா? இந்த 10 சூப்பர்ஃபுட்கள் சரி செய்யும்!
ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய அளவு ட்ரை ப்ரூட்ஸ்களை சாப்பிடும் பழக்கம் தொற்றுநோய்களைத் தவிர்க்க உதவுகிறது. இந்த ட்ரை ப்ரூட்ஸ்கள் உடலுக்கு சரியான ஊட்டச்சத்தையும் வழங்குகின்றன. ட்ரை ப்ரூட்ஸ்களை தண்ணீருக்கு பதிலாக பாலில் ஊறவைத்தும் சாப்பிடலாம். இருப்பினும், நீங்கள் அதிகமாக ட்ரை ப்ரூட்ஸ்களை சாப்பிட்டால், வயிற்று வலி, பிற வயிற்று பிரச்சினைகள், அஜீரணம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே, தினமும் உலர் பழங்களை சாப்பிடும்போது கவனமாக இருப்பது நல்லது. இல்லையெனில், உங்கள் உடல்நலம் மோசமடையக்கூடும்.