Health Tips: ஒரு நாளைக்கு எவ்வளவு முந்திரி சாப்பிடலாம்..? யார் யார் சாப்பிடக்கூடாது..?
Cashews Side Effects: முந்திரி பருப்பு கலோரிகளையும் கொழுப்பையும் கொண்டுள்ளது. இதன் காரணமாக, இந்த ட்ரை ப்ரூட்ஸை அதிகமாக உட்கொள்வது எடை அதிகரிக்க வழிவகுக்கும். மேலும், அதிக அளவு முந்திரி பருப்புகளை உட்கொள்வது குடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். முந்திரி அதிகமாக சாப்பிடுவது வயிற்று உப்புசம், வாயு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
முந்திரி (Cashews) ஒரு ஊட்டச்சத்து நிறைந்த ட்ரை ப்ரூட்ஸாகும். முந்திரி சாப்பிடுவது அதன் பரந்த அளவிலான ஊட்டச்சத்துக்கள் காரணமாக ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. இருப்பினும், சில சூழ்நிலைகளில் அதிகப்படியான முந்திரி எடுத்து கொள்வது, சிலர் சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். சிலருக்கு முந்திரி சாப்பிடுவது உடல்நல பிரச்சனைகளை (Health Issues) ஏற்படுத்தும். எனவே, இதய பிரச்சனைகள் அல்லது சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள் முந்திரி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
ஊட்டச்சத்து நிறைந்த முந்திரி சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். எந்த ஒரு உணவுப் பொருளையும் அதிகமாக உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.அந்தவகையில், ஒரு நாளைக்கு எவ்வளவு முந்திரி சாப்பிட வேண்டும், அதிகமாக முந்திரி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகளை என்ன..? யார் யார் சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாதவை.. இது ஆரோக்கியத்தை கெடுக்கும்..!




ஒரு நாளைக்கு எத்தனை முந்திரி சாப்பிடலாம்?
தினமும் தோராயமாக 4 முதல் 8 முந்திரி சாப்பிடலாம். முந்திரியில் கணிசமான அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் சுகாதார நிபுணர்கள் பெரும்பாலும் அவற்றை உட்கொள்ள பரிந்துரைக்கின்றனர். தகவலுக்கு, இந்த ட்ரை ப்ரூட்ஸ் மிதமாக உட்கொள்வதன் மூலம், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்தலாம்.
முந்திரி பருப்பு கலோரிகளையும் கொழுப்பையும் கொண்டுள்ளது. இதன் காரணமாக, இந்த ட்ரை ப்ரூட்ஸை அதிகமாக உட்கொள்வது எடை அதிகரிக்க வழிவகுக்கும். மேலும், அதிக அளவு முந்திரி பருப்புகளை உட்கொள்வது குடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். முந்திரி அதிகமாக சாப்பிடுவது வயிற்று உப்புசம், வாயு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்தப் பிரச்சனையைத் தவிர்க்க, இந்த ட்ரை ப்ரூட்ஸ் உங்கள் தினசரி உணவுத் திட்டத்தில் மிதமான அளவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ALSO READ: எஃகு பாத்திரங்களில் இந்த உணவுகளை வைக்கிறீர்களா..? இது வயிற்று பிரச்சனையை உண்டாக்கலாம்!
யார் யார் முந்திரியை சாப்பிடக்கூடாது..?
- சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக நோயாளிகள் முந்திரியை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவற்றில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரக நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். அதிக பொட்டாசியம் அளவுகள் சிறுநீரக செயல்பாட்டில் அழுத்தத்தை அதிகரிக்கும்.
- முந்திரி பருப்புகளில் கலோரிகள் மற்றும் கொழுப்பு இரண்டும் அதிகமாக உள்ளன. இது சர்க்கரை நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, சர்க்கரை நோயாளிகள் அவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவை அதிக சர்க்கரை மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்.
- முந்திரி பருப்பில் கொழுப்பு இருப்பதால், அதை அதிகமாக உட்கொள்வது கொழுப்பின் அளவை அதிகரிக்கும். வறுத்த முந்திரி பருப்பில் உப்பும் உள்ளது. இது உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். அதிக கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் இரண்டும் இதய நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன.