Health Tips: கேரட் சாப்பிடுவதை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்! எவ்வளவு சாப்பிடுவது நல்லது?
Carrots Side Effects: சிலருக்கு கேரட் ஜூஸ் ஒரு இயற்கை டானிக்காக செயல்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் சருமத்தை பிரகாசமாக்கி, சுருக்கங்களை குறைத்து, முகப்பருவைக் கட்டுப்படுத்த உதவுவதால், பளபளப்பான சருமத்தை விரும்புவோருக்கு இது மிகவும் நன்மை பயக்கும்.
கேரட் (Carrots) என்பது வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த ஒரு ஆரோக்கியம் நிறைந்த காய்கறியாகும். நம் வீடுகளில் கேரட்டை சாம்பார், பொரியல், சூப் அல்லது ஜூஸ் என பல்வேறு வடிவில் எடுத்து கொள்கிறோம். இது ஆரோக்கியத்திற்கு பல்வேறு வகையில் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. குறிப்பாக வைட்டமின் ஏ (Vitamin A) மற்றும் பீட்டா கரோட்டின் நல்ல அளவு காரணமாக, இது கண்கள், தோல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் மருத்துவர்களின் கூற்றுப்படி, கேரட் அனைவருக்கும் சமமாக நன்மை பயக்குமா என்றால் இல்லை என்றும், சிலருக்கு இது தீங்கு விளைவிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
யார் யார் கேரட் சாப்பிடக்கூடாது..?
சர்க்கரை நோயாளிகள், கேரட்டை குறைந்த அளவே சாப்பிட வேண்டும். கேரட்டில் இயற்கையான சர்க்கரை இருப்பதால், பச்சையாக கேரட் சாப்பிட்டால் பரவாயில்லை, ஆனால் அதிக அளவு கேரட் சாப்பிடுவது அல்லது கேரட் சாறு உட்கொள்வது உடனடியாக சர்க்கரை அளவை அதிகரிக்கும். அதேபோல், ஃபுட் அலர்ஜி பிரச்சனைகள் உள்ளவர்களும் கேரட்டைத் தவிர்க்க வேண்டும். கேரட் சாப்பிட்ட பிறகு அரிப்பு, வீக்கம், தொண்டையில் அரிப்பு அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், இதை சாப்பிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
ALSO READ: பப்பாளியை இவர்கள் சாப்பிட வேண்டாம்..! அடுக்கடுக்கான பிரச்சனையை தரும்..!




வயிற்றில் வாயு, கனத்தன்மை அல்லது வீக்கம் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் கேரட்டை எச்சரிக்கையுடன் சாப்பிடுவது நல்லது. கேரட்டில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அதிக அளவில் சாப்பிடுவது வாயு, அஜீரணம் மற்றும் வயிற்று உபாதைகளை அதிகரிக்கும். அதேபோல், பலவீனமான கல்லீரல் உள்ளவர்கள் அல்லது மஞ்சள் காமாலை உள்ளவர்கள் கேரட்டை குறைந்த அளவே சாப்பிட வேண்டும். அதிகமாக கேரட் சாப்பிடுவது பீட்டா கரோட்டின் சேர காரணமாகிறது. இது சருமத்தை சற்று மஞ்சள் நிறமாக (கரோட்டினீமியா) மாற்றும். எனவே மிதமான அளவில் உட்கொள்வது நல்லது.
சிறுநீரக கற்கள், குறிப்பாக கால்சியம் ஆக்சலேட் கற்கள் உள்ளவர்கள், கேரட்டை எச்சரிக்கையுடன் சாப்பிட வேண்டும். கேரட்டில் ஆக்சலேட் உள்ளது. இது கல் உருவாகும் அல்லது வளரும் அபாயத்தை அதிகரிக்கும். எனவே, இத்தகைய நோயாளிகள் கேரட்டை சிறிய அளவிலும் குறைந்த அளவிலும் உட்கொள்வது நல்லது.
கேரட்டின் நன்மைகள்:
சிலருக்கு கேரட் ஜூஸ் ஒரு இயற்கை டானிக்காக செயல்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் சருமத்தை பிரகாசமாக்கி, சுருக்கங்களை குறைத்து, முகப்பருவைக் கட்டுப்படுத்த உதவுவதால், பளபளப்பான சருமத்தை விரும்புவோருக்கு இது மிகவும் நன்மை பயக்கும். இந்த ஜூஸ் பார்வையை வலுப்படுத்தி, வறண்ட கண்களிலிருந்து பாதுகாக்கும் என்பதால், பலவீனமான கண்கள் உள்ளவர்களுக்கும் நன்மை பயக்கும். இது தவிர, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உடலை வலுப்படுத்துவதால், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு கேரட் சாறு ஒரு நல்ல தேர்வாகும்.
ALSO READ: கார்போஹைட்ரேட்டுகளை முற்றிலுமாக தவிர்க்கிறீர்களா? இந்த பிரச்சனைகள் உருவாகும்!
கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் கேரட் எடுத்து கொள்வது, தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் ஊட்டமளிக்கிறது. ஆனால் அளவு அதிகமாக எடுத்து கொள்ளக்கூடாது. இதய நோயாளிகளுக்கு, கேரட் சாறு கெட்ட கொழுப்பை (LDL) குறைத்து நல்ல கொழுப்பை (HDL) அதிகரிக்கிறது. அதே போல் தமனிகளையும் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. எடை இழக்கும் நபர்களுக்கும் இது நன்மை பயக்கும், ஏனெனில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், வயிறு நிரம்பியிருக்கும் மற்றும் உணவுக்கான பசி குறைகிறது.