Health Tips: ஆரோக்கியம் நிறைந்த துளசி இலைகள்.. யார் யாருக்கு தொல்லை தரும்..?
Basil Leaves: துளசியை உட்கொள்வது சில உடல்நல கோளாறுகளுக்கு உடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இதன் காரணமாக, சிலருக்கு நன்மை பயப்பதற்கு பதிலாக தீங்கு விளைவிக்கும். அந்தவகையில், யார் யார் துளசியை எடுத்து கொள்ளக்கூடாது என்பதை இங்கே தெரிந்து கொண்டு உடல்நலத்தை பாதுகாப்போம்.
இந்தியாவில் துளசி இலைகள் (Basil Leaves) புனிதம் மற்றும் ஆரோக்கியத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. துளசியில் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு, அழற்ஜி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்கும் பண்புகளை கொண்டுள்ளது. அதன்படி, சளி மற்றும் இருமலை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துதல், மன அழுத்தத்தை குறைத்தல் என பல நன்மைகளை செய்யும். இப்படி, துளசி பல வகைகளில் பல ஆரோக்கிய நன்மைகளை கொடுத்தாலும், சிலருக்கு இது ஏற்றது அல்ல. அதாவது, துளசியை உட்கொள்வது சில உடல்நல கோளாறுகளுக்கு உடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இதன் காரணமாக, சிலருக்கு நன்மை பயப்பதற்கு பதிலாக தீங்கு விளைவிக்கும். அந்தவகையில், யார் யார் துளசியை எடுத்து கொள்ளக்கூடாது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
கர்ப்பிணி பெண்கள்:
கர்ப்ப காலத்தில் துளசியை அதிகமாக உட்கொள்வது கருப்பையை தூண்டக்கூடும். சில ஆராய்ச்சிகளின்படி, இது ஹார்மோன் சமநிலையை பாதிக்கலாம் என்று கூறுகின்றன. எனவே, மருத்துவரை அணுகாமல் தொடர்ந்து அதை எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது அல்ல.
அலர்ஜி:
அலர்ஜி பிரச்சனையை சரிசெய்யும் துளசியால் கூட சிலருக்கு அலற்ஜி ஏற்படலாம். துளசி சாப்பிட்ட பிறகு சிலருக்கு சொறி, வீக்கம், அரிப்பு அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். எனவே, துளசி சாப்பிட்டு இத்தகைய பிரச்சனையை எதிர்கொண்டவர்கள் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.




அறுவை சிகிச்சைக்கு முன்:
நீங்கள் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டிருந்தால் குறைந்தது 2 வாரங்களுக்கு முன்பே துளசி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். ஏனெனில், துளசி இரத்த உறைதலை பாதிக்க செய்யலாம். இதன் காரணமாக, இது அறுவை சிகிச்சையின்போது இரத்தப்போக்கு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
ALSO READ: சர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கு சாப்பிடுவது சரியா தவறா? மருத்துவர்கள் கூறுவது என்ன?
இரத்த மெலிக்கும் மருந்துகள்:
நீங்கள் இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் நபராக இருந்தால் துளசியை தவிர்க்க வேண்டும். துளசியானது அதிக இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கக்கூடும். எனவே, மருத்துவரை அணுகியபின் துளசியை எடுத்துக்கொள்ளலாம்.
ஹார்மோன் சமநிலையின்மை:
துளசி ஹார்மோன்களை பாதிக்கும். அதாவது நீங்கள் ஏற்கனவே ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் அல்லது தைராய்டு பிரச்சனைகள் உள்ள பெண்களாக இருந்தால், தவிர்ப்பது நல்லது.
துளசியின் நன்மைகள்:
ஆன்டி – ஆக்ஸிடண்ட்கள்:
துளசியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன, இதனால் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தைக் குறைக்கின்றன.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்:
துளசியில் கிளைசெமிக் குறியீடு குறைவாக இருப்பதால், அதை சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது . எனவே, இது சர்க்கரை அளவை நிர்வகிப்பதிலும் உதவியாக இருக்கும்.
ALSO READ: கீரையை எப்போது சாப்பிடக்கூடாது..? எவ்வளவு நேரம் சமைப்பது நல்லது..?
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்:
துளசி சாப்பிடுவது இரத்த நாளங்களை தளர்த்துகிறது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும். இரத்த அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம், இது இதயத்திற்கும் நன்மை பயக்கும் .