Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Health Tips: சர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கு சாப்பிடுவது சரியா தவறா? மருத்துவர்கள் கூறுவது என்ன?

Diabetes and Potatoes: சர்க்கரை நோய்க்கும் கார்போஹைட்ரேட்டுகளுக்கும் உள்ள தொடர்பு கிளைசெமிக் குறியீட்டு மதிப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. 70 க்கும் மேற்பட்ட கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட எந்த உணவுப் பொருளும் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது, இது இரத்தத்தில் சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கிறது.

Health Tips: சர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கு சாப்பிடுவது சரியா தவறா? மருத்துவர்கள் கூறுவது என்ன?
உருளைக்கிழங்குImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 22 Nov 2025 17:54 PM IST

உருளைக்கிழங்கு (Potatoes) நம் உணவின் ஒரு முக்கிய பகுதியாகும். உருளைக்கிழங்கு சாம்பார், பொரியல், குருமா, குழம்பு என பல வகைகளில் பயன்படுத்துகிறோம். ஆனால், கேள்வி என்னவென்றால் சர்க்கரை நோயாளிகள் (Diabetic patients) உருளைக்கிழங்கு சாப்பிடுவது பாதுகாப்பானதா இல்லையா என்பதுதான். சர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கை தவிர்க்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு பதிலாக, அவர்கள் பச்சை காய்கறிகளை எடுத்து கொள்ளலாம். அந்த வகையில், உருளைக்கிழங்கு உண்மையில் சர்க்கரை நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்குமா என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இதை சாப்பிட்டால் போதும்.. மருத்துவர் சரண் சூப்பர் டிப்ஸ்!

குறைந்த அளவில் உருளைக்கிழங்கு:

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உருளைக்கிழங்கு ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில், ஸ்டார்ச் நிறைந்துள்ளது. அரிசி மற்றும் கோதுமை போலவே சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளும் உள்ளன. உருளைக்கிழங்கு சாப்பிடுவது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட்டுகள் உடலில் நுழைந்து அவற்றை சர்க்கரையாக மாற்றுகின்றன, இது சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோய்க்கும் கார்போஹைட்ரேட்டுகளுக்கும் உள்ள தொடர்பு கிளைசெமிக் குறியீட்டு மதிப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. 70 க்கும் மேற்பட்ட கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட எந்த உணவுப் பொருளும் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது, இது இரத்தத்தில் சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கை குறைந்த அளவில் உட்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

உருளைக்கிழங்கு ஏன் ஆரோக்கியத்திற்கு அவசியம்..?

உருளைக்கிழங்கு மலிவானவை மற்றும் எண்ணற்ற வழிகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், இவை உலகளவில் பிரபாலமானவை. உருளைக்கிழங்கில் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவற்றின் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரமும் உடலுக்கு தேவையான வலிமையை அளிக்கும். மேலும், இதில் ஆக்ஸிஜனேற்றிகளும் நிறைந்துள்ளன.

ALSO READ: வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்.. இவை வாயு தொல்லை தரும்..!

உருளைக்கிழங்கை சர்க்கரை நோயாளிகள் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்..?

சர்க்கரை நோயாளிகள் காலை உணவாக உருளைக்கிழங்கு உட்கொள்வது அவர்களின் சர்க்கரை அளவை அதிகரிக்கும். உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே உருளைக்கிழங்கை சாப்பிடுங்கள், இது உங்கள் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயத்தைக் குறைக்கும். உருளைக்கிழங்கை முடிந்தவரை வேகவைத்து சாப்பிடுங்கள். பொரித்த உருளைக்கிழங்கு மேலும் ஆபத்து. மற்ற காய்கறிகளோடு உருளைக்கிழங்கை சாப்பிட்டால், உங்கள் சர்க்கரை அளவு கட்டுப்படாக இருக்கும்.