AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மாசி வளர்பிறை அஷ்டமி திதி.. இந்த ராசியினர் தவறாமல் செய்ய வேண்டிய வழிபாடு..

Masi Ashtami Tithi: கிருஷ்ணரைத் துதிப்பதன் மூலம் மோட்சம் கிடைப்பதுடன், கர்ம வினைகள் நீங்கிச் சூட்சம அறிவும், எல்லை இல்லாத அனுபவ அறிவும் கிடைக்கும். இந்நாளில் கிருஷ்ணருக்குச் சிறப்புப் பூஜைகள் செய்வதால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குச் சந்தான பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 23 Feb 2026 15:25 PM IST
மாசி மாதம் என்பது ஆன்மீக ரீதியாக மிகவும் புண்ணியமான மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் வளர்பிறை அஷ்டமி திதி, குறிப்பாக செவ்வாய்க்கிழமையுடன் இணைந்து வருவது மிகவும் விசேஷமானது. அதன்படி, நாளை (பிப்.24) செவ்வாய்க்கிழமை அன்று நாள் முழுவதும் அஷ்டமி திதி நீடிக்கிறது. அன்றைய தினம் பகல் 1.15 மணி வரை கிருத்திகை நட்சத்திரமும், அதன் பிறகு ரோகிணி நட்சத்திரமும் அமைகிறது. சந்திரன் ரிஷப ராசியில் (கிருத்திகை, ரோகிணி நட்சத்திர காலங்களில்) பயணம் செய்யும் போது இந்த அஷ்டமி வருகிறது.

1 / 5
அஷ்டமி திதி என்றாலே கிருஷ்ணரின் பிறந்த திதியாகும். பொதுவாகச் சிம்ம ராசியில் சந்திரன் இருக்கும்போது வரும் அஷ்டமியைக் கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடுவோம். ஆனால், மாசி மாதத்தில் வரும் இந்த வளர்பிறை அஷ்டமி அன்று ராதாகிருஷ்ணனை வழிபாடு செய்வது மிகுந்த நன்மைகளைத் தரும்.

2 / 5
கிருஷ்ணரைத் துதிப்பதன் மூலம் மோட்சம் கிடைப்பதுடன், கர்ம வினைகள் நீங்கிச் சூட்சம அறிவும், எல்லை இல்லாத அனுபவ அறிவும் கிடைக்கும். இந்நாளில் கிருஷ்ணருக்குச் சிறப்புப் பூஜைகள் செய்வதால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குச் சந்தான பாக்கியம் கிட்டும். செவ்வாய்க்கிழமையுடன் இணைந்து வரும் இந்த அஷ்டமியில் லட்சுமி தேவி அல்லது அம்பிகையை வழிபாடு செய்வதன் மூலம், இல்லத்தில் செல்வ வளம் பெருகும்.

3 / 5
தடைகள் அனைத்தும் விலகி, நிறைவான வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான மன அமைதி கிட்டும் அன்றைய தினம் மாலை வேளையில் ரோகிணி நட்சத்திரம் இருப்பதால், இதனை 'ரோகிணி பிரதோஷம்' என்றும் கருதி வழிபடலாம். சிவபெருமானை இந்நாளில் வணங்குவதன் மூலம் சிவபெருமானின் ஆசியும், கிருஷ்ணரின் துணையும் ஒருசேரக் கிடைத்து, வாழ்வில் அனைத்து நன்மைகளும் நடக்கும்.

4 / 5
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தரிசனம் அல்லது அருகில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்குச் சென்று வழிபடுவது இந்த வளர்பிறை அஷ்டமியில் உகந்தது. பக்தி மார்க்கத்தின் மூலம் இறைவனைச் சரணடைந்து, குறையற்ற நிறைவான வாழ்க்கையைப் பெற இந்த மாசி மாத வளர்பிறை அஷ்டமி ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

5 / 5