AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சொந்த வீடு அமைய.. இந்த வழிபாட்டு முறைகளை தவறாமல் பின்பற்றவும்..

பக்தி என்பது வெறும் வேண்டுதல் மட்டுமல்ல, அது ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை. விடாமுயற்சியுடன் இறைவனின் அருளையும் துணைக்கு அழைக்கும்போது, உங்களின் சொந்த வீட்டுக் கனவு நிச்சயம் நனவாகும். அவ்வாறு சொந்த வீடு அமையச் செய்ய வேண்டிய ஆன்மீக வழிகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 19 Feb 2026 15:07 PM IST
சொந்த வீடு என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் கனவாகும். அந்தக் கனவை நனவாக்க ஆன்மீக ரீதியாகச் செய்ய வேண்டிய வழிபாடுகளை அறியலாம். வாழ்க்கையில் ஒருவருடைய அடிப்படைத் தேவைகளில் மிக முக்கியமானது உறைவிடம். பலருக்குச் சொந்தமாக நிலம் இருந்தும் வீடு கட்ட முடியாமல் இருக்கலாம், அல்லது பல ஆண்டுகளாக வாடகை வீட்டிலேயே வசிக்கும் சூழல் இருக்கலாம். இத்தகைய தடைகளை நீக்கி, சொந்த வீடு அமையச் செய்ய வேண்டிய ஆன்மீக வழிகள்.

1 / 5
பூமி தேவி மற்றும் வராஹ மூர்த்தி வழிபாடு: பூமிக்கு அதிபதியாகத் திகழ்பவர் பூமி தேவி. அவரை வழிபட வேண்டியது மிக அவசியம். நிலம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கவும், புதிய நிலம் வாங்கவும் மகாவிஷ்ணுவின் அவதாரமான வராஹ மூர்த்தியை வணங்க வேண்டும். இரணியாட்சன் பூமியைப் பாதாளத்தில் ஒளித்து வைத்தபோது, வராஹ அவதாரம் எடுத்து பூமியை மீட்டவர் அவர். எனவே, வராஹ மூர்த்தி வீற்றிருக்கும் கோவில்களுக்குச் சென்று வழிபடுவது நிலம் மற்றும் வீடு தொடர்பான தடைகளை நீக்கும்.

2 / 5
பஞ்சபூதத் தலங்கள் மற்றும் சிவ வழிபாடு: நிலம் (மண்) பஞ்சபூதங்களில் ஒன்று. மண்ணிற்கு அதிபதியாகத் திகழும் சிவபெருமானை வழிபடுவது சிறந்தது. காஞ்சிபுரம்: ஏகாம்பரேஸ்வரர் கோவில் நிலத் தத்துவத்திற்கு உரியது. திருவாரூர்: இங்குள்ள இறைவன் பூமிநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். நிலம் தொடர்பான தோஷங்களை நீக்க இவர் அருள் புரிகிறார். மதுரை: மண்ணால் ஆன லிங்கமாகச் சிவபெருமான் அருள்பாலிக்கும் தலங்களை வழிபடுவது பலன் தரும்.

3 / 5
செங்கல் வைத்து வழிபாடு செய்யும் திருப்புகலூர்: வீடு கட்ட விரும்புபவர்கள் செல்ல வேண்டிய மிக முக்கியமான தலம் திருப்புகலூர். இங்குள்ள கோவிலில் பக்தர்கள் தங்களுடைய வீட்டின் வரைபடம் அல்லது செங்கற்களை வைத்துப் பூஜை செய்யும் வழக்கம் உள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் வீடு கட்டும் பணியில் உள்ள தடைகள் விலகி, விரைவில் கிரகப்பிரவேசம் செய்யும் யோகம் கிட்டும் என்பது நம்பிக்கை.

4 / 5
படிக்க வேண்டிய பதிகம் மற்றும் முறைகள்: இந்த வழிபாடுகளுடன் திருப்புகலூர் பதிகத்தை தினமும் பாராயணம் செய்வது சிறப்பு. நேரம்: தினமும் காலையிலும் மாலையிலும் விளக்கேற்றி இந்தப் பதிகத்தைப் படிக்க வேண்டும். முறை: மனதார இறைவனிடம் உங்கள் கோரிக்கையை வைத்து, முழு நம்பிக்கையுடன் ஓத வேண்டும்.

5 / 5