AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மாசி வளர்பிறை வெள்ளி.. பணக் கஷ்டம் தீர்ந்து, செல்வச் செழிப்புடன் வாழ எளிய வழிபாடு..

Sukra Horai Friday | இந்த வழிபாட்டை ஒரு வெள்ளிக்கிழமை நாளில் தொடங்குவது அவசியம். சுக்கிர ஹோரை என்று சொல்லப்படக்கூடிய காலை 6-7, மதியம் 1-2 அல்லது இரவு 8-9 மணி ஆகிய நேரங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது பரிகாரத்தின் சக்தியை அதிகரிக்கும்.

esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 20 Feb 2026 15:08 PM IST
மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய பொருட்களில் முதன்மையானது கல் உப்பு. நம் வீட்டில் நிலவும் பணக்கஷ்டம் நீங்கவும், கைவிட்டுப் போன சொத்துக்கள் மற்றும் நகைகளை மீண்டும் பெறவும் இந்தத் தாந்த்ரீக பரிகாரம் ஒரு எளிய தீர்வாக அமைகிறது. குறிப்பாக மாசி மாத வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் இதனைத் தொடங்குவது மிகுந்த பலனைத் தரும்.

1 / 5
சுக்கிர ஹோரை: இந்த வழிபாட்டை ஒரு வெள்ளிக்கிழமை நாளில் தொடங்குவது அவசியம். காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை எந்த நேரத்திலும் இதைச் செய்யலாம். இருப்பினும், சுக்கிர ஹோரை என்று சொல்லப்படக்கூடிய காலை 6-7, மதியம் 1-2 அல்லது இரவு 8-9 மணி ஆகிய நேரங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது பரிகாரத்தின் சக்தியை அதிகரிக்கும். ராகு காலம் மற்றும் எமகண்ட நேரங்களைத் தவிர்ப்பது நல்லது.

2 / 5
தேவையான பொருட்கள்: கண்ணாடி கிண்ணம், கல் உப்பு சமையலறையில் ஏற்கனவே உபயோகத்தில் இருக்கும் உப்பைத் தவிர்த்து, இதற்கெனப் புதிய பாக்கெட் கல் உப்பை வாங்குவது சிறந்தது. நாணயம்: மொத்தம் 33 ரூபாய் தேவை. இதனை 11, 11, 11 என்ற வீதத்தில் பிரிக்க வேண்டும். உதாரணமாக, மூன்று 10 ரூபாய் நோட்டுகள் மற்றும் மூன்று ஒரு ரூபாய் நாணயங்கள் என எடுத்துக் கொள்ள வேண்டும்.

3 / 5
பரிகாரம் செய்யும் முறை: தேர்வு செய்த கிண்ணத்தைச் சுத்தம் செய்து, மஞ்சள் மற்றும் குங்குமம் இட்டு அலங்கரிக்கவும். வலது கையால் கைப்பிடி உப்பை எடுத்து கிண்ணத்தில் போடவும். அதன் மேல் 33 ரூபாயை (11 ரூபாயாகப் பிரித்து) வைக்கவும். இதை உங்கள் வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமி படத்தின் முன் வைத்து நெய் தீபம் ஏற்றவும்."ஓம் மகாலட்சுமியை நமஹ" அல்லது "ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமஹ" போன்ற மந்திரங்களை 11 முறை கூறி மனதார வேண்டிக் கொள்ளவும்.

4 / 5
இதேபோல தொடர்ந்து 6 வெள்ளிக்கிழமைகள் செய்ய வேண்டும். ஒவ்வொரு வாரமும் புதிதாக 33 ரூபாய் வைக்க வேண்டும். சுக்கிர ஹோரையில் செய்பவர்கள், ஒவ்வொரு வாரமும் அதே சுக்கிர ஓரை நேரத்தையே பின்பற்ற வேண்டும். 6 வாரங்கள் முடிந்ததும், சேர்ந்த தொகையை (சுமார் 198 ரூபாய்) கொண்டு மாதுளம் பழங்களை வாங்கி, வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி அல்லது பெருமாள் கோவிலில் சமர்ப்பிக்கவும்.

5 / 5