கமல் ஹாசன் – ரஜினிகாந்த் இணையும் படத்தின் கிளிம்ஸ் வீடியோவை பார்த்து பாராட்டிய எஸ்.ஜே.சூர்யா
SJ Suryah Praised Glimpse of KH x RK Reunion: தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குநர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. இவர் சமீபத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இணையும் படத்தின் கிளிம்ஸ் வீடியோவை பார்த்து பாராட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராக தனது பணியைத் தொடங்கி தற்போது பிரபல இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார் எஸ்.ஜே. சூர்யா. இவர் உதவி இயக்குநராக பணியாற்றியபோதே படங்களில் பெயரிப்படாத சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான வாலி என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் எஸ்.ஜே. சூர்யா. இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து படங்களை இயக்கி வந்த எஸ்.ஜே.சூர்யா பிறகு தான் இயக்கும் படங்களில் அவரே நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அப்படி இவர் இயக்கி நாயகனாக நடித்தப் படங்களும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.
பிறகு தான் இயக்கும் படங்கள் மட்டும் இன்றி மற்ற இயக்குநர்களின் இயக்கத்தில் வெளியாகும் படங்களிலும் நடிக்கத் தொடங்கினார் எஸ்.ஜே. சூர்யா. தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மோஸ்ட் வாண்டட் வில்லன் நடிகராக மாறினார் எஸ்.ஜே.சூர்யா. இப்படி பிசியான நடிகராக வலம் வரும் எஸ்.ஜே.சூர்யா கமல் ஹாசன் – ரஜினிகாந்த் இணையும் படத்தின் கிளிம்ஸ் வீடியோவை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார்.




கமல், ரஜினி படத்தின் கிளிம்ஸ் வீடியோவை பாராட்டிய எஸ்.ஜே.சூர்யா:
அதன்படி இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, ஆஹா என்ன ஒரு ஐகானிக் மொமெண்ட். ரெண்டு பேரும் ஒன்னா நடந்துவர்ரது கண்கொள்ளா காட்சியா இருக்கு. இயக்குனர் நெல்சன் தில்ப்குமார் என்ன ஒரு பிரசன்டேஷன் சார். அனிருத் நீங்க எப்பவுமே ராக்ஸ் தான். ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஒரு பெருமையான தருணத்தை உருவாக்கியுள்ளது என்று எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்
எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Wow🔥🔥what an iconic moment 🥰🥰🥰Rendu tycoons-um onna nadandhu varradhu🔥🔥kan kozha kaatchi 🥰🥰🥰🥰🥰 Dir @Nelsondilpkumar what a presentation sir 🥰🥰@anirudhofficial and you always Rocks 🥰🥰🥰🥰@RedGiantMovies_ created a proud moment 🔥🔥🔥🔥🙏sjs https://t.co/wzyT0cnMjH
— S J Suryah (@iam_SJSuryah) February 23, 2026