AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sivakarthikeyan: எவ்வளவு பேர் எதிர்த்தாலும்.. என்னை மிதித்தாலும்.. எனது ரசிகர்கள் – சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி பேச்சு!

Sivakarthikeyan Emotional Speech: நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு, அமரன் படத்திற்காக விருது பெற்றிருந்தார். அப்போது மேடையில் பேசிய அவர், தனது ரசிகர்களின் ஆதரவு மற்றும் அன்புக் குறித்து மகிழ்ச்சியாக பேசியுள்ளார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.

Sivakarthikeyan: எவ்வளவு பேர் எதிர்த்தாலும்.. என்னை மிதித்தாலும்.. எனது ரசிகர்கள் – சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி பேச்சு!
சிவகார்த்திகேயன் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 22 Feb 2026 19:37 PM IST

கோலிவுட் சினிமாவில் அமரன் (Amaran) திரைப்படத்தைத் தொடர்ந்து பிரம்மாண்ட படங்களின் கதையை தேர்ந்தெடுத்து நடித்துவருபவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து மிக பிரம்மாண்டமான படங்கள் வெளியாகிவருகிறது. கடந்த 2024ம் ஆண்டில் அமரன் படமானது வெளியாகி, இவருக்கு சுமார் ரூ 350 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சிறப்பான வரவேற்பைக் கொடுத்திருந்தது. அதையடுத்துகாக மதராஸி (Madharaasi) மற்றும் பராசக்தி (Parasakthi) போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் இப்படம் அவருக்கு எதிர்பாராத பிரம்மாண்ட வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால் ரூ 100 கோடிகளை வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தற்போது தாய் கிழவி (Thaai Kizhavi) பட இயக்குநரின் இயக்கத்தில், சேயோன் (Seyon)என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற 70வது ஃபிலிம் ஃபேர் விருது (70th Filmfare Awards) வழங்கும் விழாவில் கலந்துகொண்டார்.

அந்த விழாவில் இவருக்கு அமரன் திரைப்படத்திற்கான சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டிருந்தது. விருதை பெற்ற சிவகார்த்திகேயன், தனது சினிமா வாழ்க்கை மற்றும் தனது ரசிகர்கள் குறித்து உணர்ச்சியாக போசியிருந்தார்.

இதையும் படிங்க: கமல்ஹாசன் – ரஜினிகாந்தின் ‘KH X RK’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

தனது ரசிகர்கள் குறித்து சிவகார்த்திகேயன் உணர்ச்சியாக பேசிய விஷயம் :

அந்த விழாவின்போது பேசிய சிவகார்த்திகேயன், “என் ரசிகர்கள், எவ்வளவோ பேர் என்னை எதிர்த்தாலும், என்னை எப்படி பேசினானும், கீழே போடு அடிச்சாலும், மிதிச்சாலும் என்னை தூக்கி தூக்கி ஸ்டேஜ்ல நிக்க வெச்சிருங்க. உங்களுக்கு பிடிச்ச சிவா நா, இன்னைக்கு ஃபிலிம் ஃபேர்அவார்ட் ஓட நிக்கிறேன். கைதட்டி கைதட்டி என்னை இன்னும் நிறைய இடத்திற்கு கூட்டிட்டு போவிங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு” என அதில் அவர் உணர்ச்சியாக பேசியிருந்தார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: 70வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் வெற்றிப் பெற்ற தமிழ் பிரபலங்கள் யார் யார்? லிஸ்ட் இதோ

தனது ரசிகர்கள் குறித்து மேடையில் சிவகார்த்திகேயன் பேசியது குறித்த பதிவு:

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், சேயோன் என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமானது தயாரிக்க உள்ள நிலையில், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துவருகிறார். இவரின் இசையமைப்பில் தெய்வீகம் மற்றும் மதுரை கிராமப்புற கதைக்களத்தில் தயாராகிவருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ள நிலையில், வரும் 2026 அக்டோபர் மாதத்தில் சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.