AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் – வைரலாகும் தகவல்

Jason Sanjay Sigma Movie Update: தமிழ் சினிமாவில் உச்ச நடிகரின் மகனாக ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் சிக்மா. இந்தப் படத்தில் ரசிகர்களுக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் காத்திருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் – வைரலாகும் தகவல்
சிக்மாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Feb 2026 19:34 PM IST

சினிமாவில் பொதுவாக வாரிசுகளின் வரவு என்பது ஒவ்வொரு காலத்திலும் தொடர்ந்து வருகின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உச்ச நடிகாரக வலம் வரும் நடிகர் தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சயும் சினிமாவில் தற்போது எண்ட்ரி கொடுத்துள்ளார். இவர் நடிகராக வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர் மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இயக்குநராக அறிமுகம் ஆவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரடெக்‌ஷன் சார்பாக தயாரிப்பாளர் சுபாஸ்கரன் இந்தப் படத்தை தயாரிக்கிறார். படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

மேலும் சிக்மா படத்தின் டீசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ள நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் ஃபரியா அப்துல்லா, சம்பத் ராஜ், ராஜு சுந்தரம், ஷிவ் பண்டிட், யோக் ஜபே, அன்புதாசன், மகலட்சுமி, கமலேஷ், ஷீலா ராஜ்குமார், கிரண் கொண்டா உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

ஜேசனின் சிக்மா படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்:

இந்த நிலையில் சிக்மா படத்தின் அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வரும் நிலையில் தற்போது சினிமா வட்டாரங்களில் தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகம் ஆகி உள்ள நிலையில் இதில் ஒரு பாடலுக்கு அவர் சிறப்பு நடனம் ஆடியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இவர் முன்னதாக வேட்டைக்காரன் படத்தில் அவரது தந்தை தளபதி விஜயுடன் இணைந்து நான் அடிச்சா தாங்க மாட்ட பாடலுக்கு ஜேசன் நடனம் ஆடி இருந்தார். சிறுவனாம அவர் அந்தப் படத்தில் நடனம் ஆடியபோதே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read… Toxic Movie: ரத்தம் தெறிக்க.. வெளியானது யாஷின் ‘டாக்சிக்’ படத்தின் அதிரடி டீசர்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Kamal Haasan: ‘தாய் கிழவி படத்தை பற்றி மக்கள் சொல்லுவாங்க’ – படத்தை பார்த்து பாராட்டிய கமல்ஹாசன்!