AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kamal Haasan: ‘தாய் கிழவி படத்தை பற்றி மக்கள் சொல்லுவாங்க’ – படத்தை பார்த்து பாராட்டிய கமல்ஹாசன்!

Kamal Haasan Praised Thaai Kizhavi Movie: தென்னிந்திய சினிமாவில் பிரபல கதாநாயகனாக இருந்துவருபவர் கமல்ஹாசன். இவர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு மற்றும் ராதிகா சரத்குமாரின் நடிப்பில் உருவாகியுள்ள தாய் கிழவி என்ற படத்தை பார்த்துள்ளார். இது குறித்து அவர் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

Kamal Haasan: ‘தாய் கிழவி படத்தை பற்றி மக்கள் சொல்லுவாங்க’ – படத்தை பார்த்து பாராட்டிய கமல்ஹாசன்!
தாய் கிழவி படத்தை பாராட்டிய கமல்ஹாசன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 20 Feb 2026 11:14 AM IST

தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ராதிகா சரத்குமார் (Radhika Sarathkumar). இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் இவரின் முன்னணி நடிப்பில் தமிழில் தயாராகியுள்ள திரைப்படம்தான் “தாய் கிழவி” (Thaai Kizhavi). இந்த படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan) இயக்க, சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படமானது தண்டட்டி கிழவியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் இளவரசு, பாலா சரவணன், முனீஷ்காந்த் போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படமானது, காமெடி, எமோஷனல் மற்றும் வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்துள்ள நிலையில், வரும் 2026 பிப்ரவரி 27ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

அந்த வகையில் இப்படத்தின் சிறப்பு காட்சியானது நேற்று 2026 பிப்ரவரி 19ம் தேதியில் திரையிடப்பட்டது. அந்த திரையிடலின்போது தாய் கிழவி திரைப்படத்தை பார்த்த கமல்ஹாசன் (Kamal Haasan), பாராட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோவை தாய் கிழவி படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: சமுத்திரக்கனியின் முதல் வெப் சீரிஸ் தடயம்… ரிலீஸ் எப்போது தெரியுமா

கமல்ஹாசன் படத்தை பார்த்தது குறித்து தாய் கிழவி படக்குழு வெளியிட்ட பதிவு:

இந்த தாய் கிழவி படத்தை சிவகார்த்திகேயன், சிவகுமார் முருகேசன், கமல்ஹாசன், சரத்குமார், ராதிகா, ஆர்த்தி சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து பார்த்துள்ளனர். இந்த படத்தை பார்த்து முடித்தவுடன் பேசிய கமல்ஹாசன், “தாய் கிழவி படத்தை நான் பார்த்து சொல்வதை விடவும் மக்கள் பார்த்து சொல்வார்கள், சிவகார்த்திகேயன் ஒரு அருமையான தயாரிப்பாளர் மற்றும் சிவகுமார் முருகேசன் ஒரு சிறப்பான இயக்குநர் என கூறுவார்கள்” என அதில் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: ஒரு சோப்பு விளம்பரத்தில் நடிக்க இத்தனை கோடியா? – எகிறும் தமன்னாவின் சம்பளம்!

தாய் கிழவி படத்தின் சென்சார் அப்டேட் :

தாய் கிழவி திரைப்படமானது மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள நிலையில், வரும் 2026 பிப்ரவரி 27ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது. அந்த விதத்தில் இப்படத்திற்கு “யு” சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தமிழில் பல படங்களுக்கு சென்சார் கிடைப்பதில் சிக்கல் இருந்துவரும் நிலையில், தாய் கிழவி படத்திற்கு “யு” சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.