தளபதி விஜயிடம் ஒரு கதை கூறினேன்… ஆனால் – இயக்குநர் பா ரஞ்சித் சொன்ன விசயம்!
Pa Ranjith about narrated a story to Thalapathy Vijay: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பா ரஞ்சித். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தளபதி விஜயிடம் கதை கூறியது குறித்து பேசியது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக தனது பணியைத் தொடங்கினார் இயக்குநர் பா ரஞ்சித். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெளியான அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் பா ரஞ்சித். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் மட்டும் மிகவும் ஜாலியாகவும் கலகலப்பாகவும் இருந்தது. இது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் மிகவும் ஆழமான அரசியலை மையமாக வைத்து வெளியானது. இது முதல் படத்திற்கு எந்த சம்மந்தமும் இல்லாமல் இருக்கிறது என்றே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களும் ஏதேனும் ஒரு அரசியலைப் பேசும் விதமாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இறுதியாக பா ரஞ்சித் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான படம் தங்கலான். இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து பா ரஞ்சித் தற்போது வேட்டுவம் படத்தை இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக அந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் பா ரஞ்சித் சமீபத்தில் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தளபதி விஜயிடம் ஒரு கதை கூறினேன்… ஆனால் – பா ரஞ்சித்:
நான் தமிழ் பிரபாவுடன் சேர்ந்து சர்ப்பட்ட பரம்பரை2 எழுதி வருகிறேன். அதற்கான படிவம் ஏற்கனவே எங்களிடம் உள்ளது, மார்ச்/ஏப்ரல் மாதத்திற்குள் படப்பிடிப்புக்குச் செல்ல திட்டமிட்டுள்ளோம். ஆரம்பத்தில் தளபதி விஜய்யிடம் ஒரு கதையைச் சொன்னேன்; அவருக்கு அது மிகவும் பிடித்திருந்தது, ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் மீண்டும் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன், ஆனால் எனது கதையும் அவர் விரும்பும் கதை உலகமும் ஒன்றிணைந்து ஒரு படம் எடுக்க முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும் என்றும் பா ரஞ்சித் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் பா ரஞ்சித் பேச்சு:
I’m writing #SarpattaParambarai2 with Tamil Prabha. We’ve already got a form for it, and we’re hopefully planning to go for shoot by March/April. I initially narrated a story to #ThalapathyVijay; he really liked it, but for some reasons, it couldn’t happen.
I would like to work… pic.twitter.com/SknQhhdG5V
— Movies Singapore (@MoviesSingapore) February 22, 2026
Also Read… சீரியல் ரசிகர்களே தயாரா? விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பழைய சீரியல்கள்.. என்னென்ன தெரியுமா?



