AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புதியதாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?.. முழு விவரம் இதோ!

How To Apply New Passport | பொதுமக்கள் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் கட்டாயமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், புதியதாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

புதியதாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?.. முழு விவரம் இதோ!
கோப்பு புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 23 Feb 2026 16:25 PM IST

இந்திய குடிமக்களுக்கு எவ்வாறு ஆதார் கார்டு (Aadhaar Card), வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) ஆகியவை கட்டாயமாக உள்ளதோ அதேபோல இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் (Passport) மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இதேபோல தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் நபர்களுக்கும். பாஸ்போர்ட் இல்லாமல் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு பயணம் செய்வது சட்டப்படி குற்றமாக கருதப்படுகிறது. இதற்காக கடுமையான தண்டனைகளும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், பாஸ்போர்ட் இல்லாதவர்கள் புதியதாக பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சுலபமாக மாற்றப்பட்ட பாஸ்போர்ட் விண்ணப்பம்

இந்தியாவில் முன்பு பாஸ்போர்டுக்கு விண்ணப்பிப்பது மிகவும் சவாலான ஒன்றாக இருந்தது. பாஸ்போர்டுக்கு விண்ணப்பித்து, காவல்துறை வீட்டுக்கு வந்து சோதனை மேற்கொண்டு உறுதி செய்த பிறகு தான் பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு குறைந்தது ஒரு மாத காலம் ஆகிவிடும். ஆனால், தற்போது அப்படி அல்ல. ஆன்லைனில் சுலபமாக விண்ணப்பித்து பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதன் மூலம் ஒரு வாரத்திற்குள்ளாகவே கையில் பாஸ்போர்டை வாங்கிவிட முடிகிறது.

இதையும் படிங்க : இரவோடு இரவாக ஷாக் கொடுத்த டிரம்ப்.. உலகளாவிய வரியை 10% முதல் 15% ஆக உயர்த்தியுள்ளார்!

புதிய பாஸ்போர்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

  1. அதற்கு https://www.passportindia.gov.in/psp என்ற மத்திய அரசின் இணைய தளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அங்கு முதலில் பெயர், மின்னஞ்சல் முகவரி ஆகிய்வற்றை உள்ளிட்டு ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்.
  3. அதற்கு பிறகு உங்களது லாக் இன் ஐடி மற்றும் பாஸ்வேர்டை உள்ளீடு செய்து லாக் இன் செய்ய வேண்டும்.
  4. பிறகு Apply For New Passport என்ற அம்சத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  5. அப்போது உங்களுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதற்கான வழிமுறைகள் தோன்றும்.
  6. அதில் எப்படி லாக் இன் மற்றும் விண்ணப்பம் செய்வது தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.
  7. இதனை தொடர்ந்து உங்களது பெயர் மற்றும் அடிப்படை தகவல்கள் கேட்கப்படும்.
  8. அதன் பிறகு நீங்கள் உங்களது புகைப்படம் மற்றும் கையெழுத்து ஆகிய இரண்டையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  9. பின்னர் உங்களுடைய பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.

இதையும் படிங்க : வெறும் ரூ.355 முதல் தொடங்கும் காப்பீட்டு திட்டம்.. அஞ்சலங்கள் மூலம் அரசு வழங்கும் அட்டகாசமான சலுகைகள்!

மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றி நீங்கள் பாஸ்போர்டுக்கு விண்ணப்பித்த பிறகு உங்கள் அப்பாயின்மென்ட் தேதியை நிர்ணயம் செய்துக்கொள்ளலாம். அப்போது உங்களது அப்பாயின்மென்ட் ரெஸ்பான்ஸ் எண் தோன்றும். அதன் பிறகு உங்களுக்கான அப்பாயின்மென்ட் தேதியில் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்று உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அப்போது உங்களது கண் ரேகை, கை ரேகை உள்ளிட்ட தகவல்கள் கோரப்படும். அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் விண்ணப்பம் ஏற்கப்படும். இதன் பிறகு காவல்துறை நேரில் வந்து சோதனை மேற்கொண்ட பிறகு ஒரு வாரத்திற்குள்ளாக பாஸ்போர்ட் கைக்கு வந்துவிடும்.