AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இரவோடு இரவாக ஷாக் கொடுத்த டிரம்ப்.. உலகளாவிய வரியை 10% முதல் 15% ஆக உயர்த்தியுள்ளார்!

Trump Increased Tariff On World Countries | உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த இறக்குமதி வரிகள் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து டிரம்ப் 10 சதவீதம் உலகளாவிய வரி விதித்தார். தற்போது அந்த வரியை அவர் மேலும் உயர்த்தியுள்ளார்.

இரவோடு இரவாக ஷாக் கொடுத்த டிரம்ப்.. உலகளாவிய வரியை 10% முதல் 15% ஆக உயர்த்தியுள்ளார்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 22 Feb 2026 19:08 PM IST

வாஷிங்டன், பிப்ரவரி 22 : உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) விதித்த இறக்குமதி வரிகள் செல்லாது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து 10 சதவீதம் உலகளாவிய வரியை டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து இரவோடு இரவாக 10 சதவீத வரியை 15 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக அமெரிக்கா உடன் வர்த்தகம் வைத்திருக்கும் உலக நாடுகள் 15 சதவீதம் வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இந்த நிலையில், உலகளாவிய வரியை டிரம்ப் மேலும் உயர்த்தியது குறித்து விரிவாக பார்க்கலாம்.

டிரம்பின் வரி விதிப்புகள் செல்லாது என கூறிய அமெரிக்க நீதிமன்றம்

இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக பதவி ஏற்றது முதலே டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதித்தார். இதில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் சவால்களை எதிர்கொண்டன. குறிப்பாக இந்தியா மீது முதலில் 25 சதவீதம் வரி விதித்த டிரம்ப், பிறகு கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்து அறிவித்தார்.

இதையும் படிங்க : எகிப்தில் 3,000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் கண்டுபிடிப்பு.. வியப்பூட்டும் தங்க சுரங்கம்!

இவ்வாறு டிரம்பின் வரி விதிப்பால் உலக நாடுகள் ஏற்றுமதியில் கடும் சிக்கலை சந்தித்தன. வரி விதிப்பால் தங்களது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்றுமதி நிறுவனங்கள் கூறின. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், அதனை விசாரித்த நீதிபதிகள் டிரம்பின் வரி விதிப்பு செல்லாது என தீர்ப்பு வழங்கினர். ஆனால், இறக்குமதிகளை ஒழுங்குப்படுத்த அதிபருக்கு நாடாளுமன்றம் அதிகாரம் அளித்துள்ளது. இதனை பயன்படுத்தி டிரம்ப் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு உலகளாவிய வரியை அறிவித்தார்.

10 சதவீத உலகளாவிய வரியை அறிவித்த டிரம்ப்

வர்த்தக சட்டம் 1974, பிரிவு 122-ன் கீழ் 10 சதவீத உலகளாவிய வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டார். இந்த 10 சதவீத வரி பிப்ரவரி 24, 2026 முதல் அமலுக்கு வர உள்ளதாக வெள்ளை மாளிகை நேற்று (பிப்ரவரி 21, 2026) உறுதி செய்தது. இந்த நிலையில், இரவோடு இரவாக டிரம்ப் வரியை உயர்த்தியுள்ளார். அதாவது நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு 10 சதவீத உலகளாவிய வரி விதித்த அவர், அதனை 15 சதவீதமாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

Follow Us