AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எகிப்தில் 3,000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் கண்டுபிடிப்பு.. வியப்பூட்டும் தங்க சுரங்கம்!

3,000 Years Old City Of Gold Found In Egypt | எகிப்தில் சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு ஆச்சர்யமூட்டும் விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பல வியப்பூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 18 Feb 2026 15:57 PM IST
மனிதகுல வரலாற்றில் எகிப்து மிக முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், எகிப்தில் வியப்பூட்டும் கண்டுபிடிப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, அங்கு சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான தங்க சுரங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எகிப்தின் கிழக்கு பாலைவன பகுதியில் உள்ள சுகாரி மலையில் தான் இந்த தங்க நகரத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

1 / 5
பண்டைய கால தங்க நகரத்தை கண்டுபிடிக்க எகிப்தின் சுற்றுலா துறை மேற்கொண்டு வரும் நீண்ட நெடிய ஆராய்ச்சியின் ஒரு பங்காக இந்த தங்க நகரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் எகிப்தில் மிக சிறந்த தங்க சுரங்கம் செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. 

2 / 5
தங்க நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த சுகாரி மலைப்பகுதி, தற்போதும் தங்கத்திற்கு பெயர் போனதாக உள்ளது. அதுமட்டுமன்றி, தற்போதும் இந்த மலையில் இருந்து தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த சுரங்க கண்டுபிடிப்பு பண்டைய கால மற்றும் தற்போதைய தங்க சுரங்களுக்கான வித்தியாசத்தை கண்டறிய உதவியாக அமைந்துள்ளது. 

3 / 5
அந்த இடத்தில் வெறும் தங்க சுரங்க குழிகளை மட்டுமன்றி பல்வேறு சுவாரஸ்யங்களை கண்டுபிடித்துள்ளதால தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதாவது அங்கு, தங்கத்தை கண்டறிவதற்காக பாறைகளை உடைக்க கூடிய பிரத்யேக கற்கள் மற்றும் தங்கத்தை பிரித்தெடுக்கும் வடிக்கட்டிகளையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

4 / 5
அந்த தங்க சுரங்கத்தின் அமைப்பு மிகவும் திட்டமிட்டு சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தங்கத்தை உடைத்து எடுப்பது, அதனை பிரிப்பது என தனித்தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதன் மூலம் அந்த பகுதியில் சாதாரன முறையில் தங்கம் தோண்டி எடுக்கப்படவில்லை என்றும், அனைத்தும் திட்டமிட்டு நடைபெற்றுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். 

5 / 5