AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வெறும் ரூ.355 முதல் தொடங்கும் காப்பீட்டு திட்டம்.. அஞ்சலங்கள் மூலம் அரசு வழங்கும் அட்டகாசமான சலுகைகள்!

IPPB Personal Accident Insurance | அஞ்சலங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வெறும் ரூ.355 முதல் தொடங்கும் பிரீமியம் திட்டம் மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வெறும் ரூ.355 முதல் தொடங்கும் காப்பீட்டு திட்டம்.. அஞ்சலங்கள் மூலம் அரசு வழங்கும் அட்டகாசமான சலுகைகள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Feb 2026 23:33 PM IST

பொதுமக்கள் நிதி பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக அரசு பல வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பொதுமக்கள் சுலபமாக அணுக கூடிய வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக அஞ்சலங்கள் மூலம் பல வகையான சேமிப்பு (Savings) மற்றும் முதலீட்டு (Investment) திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால், அரசு வழங்கும் இந்த அட்டகாசமான திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. இந்த நிலையில், அஞ்சலங்கள் மூலம் அரசு வழங்கும் ஒரு சிறந்த விபத்து காப்பீடு திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மூன்று திட்டங்களை வழங்கும் இபிபிபி

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB – India Post Payments Bank) புதிய தனிநபர் விபத்து காப்பீடு திட்டங்களை வழங்குகிறது. இது மிகக் குறைந்த மிரீமியத்தில் பெரிய அளவிலான பாதுகாப்பை வழங்குகிறது. ஹெல்த் பிளஸ், எக்ஸ்பிரஸ் ஹெல்த் பிளஸ் ஆகிய இரண்டு வகைகளில் மொத்தம் மூன்று திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

இதையும் படிங்க : தங்கம், வெள்ளி ETFகளில் முதலீடு செய்துள்ளீர்களா?.. செபியின் இந்த அறிவிப்பை பாருங்க!

ஹெல்த் பிளஸ் ஆப்ஷன் 1

இந்த திட்டத்தில் ரூ.5 லட்சம் காப்பீடு கிடைக்கிறது. விபத்தில் உயிரிழப்பு அல்லது நிரத்தர ஊனம் ஏற்பட்டால் குடும்பத்துக்கு மொத்த தொகையும் வழங்கப்படும். இது தவிர பிள்ளைகளின் திருமண செலவுக்கு ரூ.50,000 நிதி வழங்கப்படும். மேலும் எலும்பு முறிவு ஏதேனும் ஏற்பட்டால் ரூ.25,000 வரை பலன் பெற முடியும். இந்த திட்டத்திற்கான வருடாந்திர பிரீமியம் ரூ.355 ஆகும்.

ஹெல்த் பிளஸ் ஆப்ஷன் 2

இந்த திட்டத்தில் ரூ.10 லட்சம் காப்பீடு கிடைக்கிறது. விபத்தில் உயிரிழப்பு அல்லது நிரத்தர ஊனம் ஏற்பட்டால் குடும்பத்துக்கு மொத்த தொகையும் வழங்கப்படும். எலும்பு முறிவுக்கு ரூ.25,000 மற்றும் மருத்துவ செலவுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். அதுமட்டுமன்றி, பாலிசிதாரர் கோமா நிலைக்கு சென்றால் முதலீடு செய்த தொகையில் 1 சதவீதம் வரை கிடைக்கும்.

ஹெல்த் பிளஸ் ஆப்ஷன் 3

இந்த திட்டத்தில் ரூ.15 லட்சம் வரை காப்பீடு கிடைக்கிறது. விபத்தில் உயிரிழப்பு அல்லது நிரத்தர ஊனம் ஏற்பட்டால் குடும்பத்துக்கு மொத்த தொகையும் வழங்கப்படும். இது தவிர பிள்ளைகளின் திருமண செலவுக்கு ரூ.50,000 நிதி வழங்கப்படும். இது தவிர எலும்பு முறிவு, மருத்துவ செலவு, கோமா, இறுதி செலவு ஆகியவையும் வழங்கப்படும்.