Pregnancy Advice: கர்ப்ப காலத்தில் குங்குமப்பூ சாப்பிடுவதால் குழந்தை வெள்ளையாக பிறக்குமா? பிரபல மருத்துவர் விளக்கம்!
Drinking Saffron Milk During Pregnancy: கர்ப்ப காலத்தில் குங்குமப்பூ பால் குடிப்பதால் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்று நம்பப்படுகிறது. உண்மையில், இது உண்மைதானா..? பிரபல குழந்தை நல மருத்துவர் அருண் குமார் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசியுள்ளார். அதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.

கர்ப்பம் (Pregnancy) என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையில் நிகழும் முக்கியமான தருணமாகும். இந்த காலத்தில் கர்ப்பிணி பெண்கள் எடுத்துகொள்ளும் உணவு, பிறக்கப்போகும் குழந்தைக்கு ஆரோக்கியத்தை தரும். இதன் காரணமாகவே, பழங்கள், காய்கறிகள், கீரைகள் மற்றும் முட்டை போன்றவற்றை பெரியவர்களும், மருத்துவர்களும் கர்ப்ப காலத்தில் அதிகளவில் சாப்பிட அறிவுறுத்துகிறார்கள். இந்த நேரத்தில், கர்ப்பிணி பெண்கள் தனது உணவு முறை பற்றி பல வதந்திகளை கேள்வி படுகிறார்கள். தனக்கு பிறக்கப்போகும் குழந்தை (New Born Baby) அழகாக பிறக்க வேண்டும் என்பதற்காக பலரும் பல அறிவுரைகளை கூறுகிறார்கள். அதில் ஒன்று, கர்ப்ப காலத்தில் குங்குமப்பூ பால் குடிப்பதால் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்று நம்பப்படுகிறது. உண்மையில், இது உண்மைதானா..? பிரபல குழந்தை நல மருத்துவர் அருண் குமார் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசியுள்ளார். அதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.
குங்குமப்பூ குழந்தையை வெள்ளையாக்குமா..?
View this post on Instagram
கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் குங்குமப்பூ பால் உட்கொள்வது குழந்தைக்கு வெள்ளை நிறத்தை கொடுக்கும் என்று பலரும் கூறுகின்றனர். இருப்பினும், கர்ப்ப காலத்தில் குங்குமப்பூ உட்கொள்வது அத்தகைய விளைவைக் கொண்டிருப்பதை நிரூபிக்க எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. பாலில் புரதம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது, இவை கர்ப்ப காலத்தில் அவசியமானவை. கர்ப்ப காலத்தில் குங்குமப்பூ பால் குடிப்பது வயிற்று உப்புசத்தை போக்கவும், பசியை மேம்படுத்தவும் உதவும்.




ALSO READ: பெண் கருவுறாமைக்கு இதுதான் முக்கிய காரணங்களா..? அதை எவ்வாறு தடுப்பது?
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மூட் ஸ்விங் மற்றும் மனச்சோர்வு ஏற்படும். அதன்படி, குங்குமப்பூவில் உள்ள சாப்ரன் என்ற பொருள் மனச்சோர்வை குறைக்க உதவும். மேலும், கர்ப்பிணிப் பெண்களின் அமிலத்தன்மை மற்றும் செரிமானப் பிரச்சினைகளைப் போக்கவும் குங்குமப்பூ பால் உதவுகிறது.
எந்த அளவிற்கு குங்குமப்பூ எடுத்துக்கொள்ளலாம்..?
கர்ப்ப காலத்தில் குங்குமப்பூவை உட்கொள்ளும்போது எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். அதிகமாக குங்குமப்பூவை உட்கொள்வது கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கும். கர்ப்ப காலத்தில் ஒரு நாளைக்கு 5 கிராமுக்கு மேல் குங்குமப்பூவை உட்கொள்ளக்கூடாது.
குங்குமப்பூவில் உள்ள நல்ல பண்புகள் என்ன..?
குங்குமப்பூவில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, இரும்புச்சத்து, மாங்கனீசு, தியாமின் மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவை உள்ளன. குங்குமப்பூ வாயு மற்றும் அமிலத்தன்மையைக் குறைப்பதன் மூலம் செரிமானத்தை ஊக்குவிக்கிறது. குங்குமப்பூ கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிடிப்புகளைக் குறைக்க உதவுகிறது. குங்குமப்பூவில் சுவாச நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது காற்றுப்பாதைகளை விரிவுபடுத்துகிறது மற்றும் நுரையீரலில் வீக்கத்தைக் குறைக்கிறது.
ALSO READ: கர்ப்ப காலத்தில் ஏன் இந்த 8 பழங்களை தவிர்க்கக்கூடாது..? பிரபல மருத்துவர் விளக்கம்!
குங்குமப்பூ இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்கும் திறன் கொண்டது. தினமும் பாலில் குங்குமப்பூவைச் சேர்த்து உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.