Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kangaroo Mother Care: கங்காரு தாய் பராமரிப்பு என்றால் என்ன? இது தாய்- குழந்தையை எப்படி பிணைக்கும்..?

Mother Baby Bonding: இன்றைய வேலைச் சூழலில், தாய்மார்கள் குழந்தையுடன் போதுமான நேரம் செலவிட முடியாமல் போகிறது. இதனால், கங்காரு தாய் பராமரிப்பு முறை மிகவும் முக்கியம். இம்முறை மூலம், குழந்தையின் உடல்நிலை மேம்படும், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும், குழந்தை-தாய் இடையேயான பிணைப்பு வலுப்படும்.

Kangaroo Mother Care: கங்காரு தாய் பராமரிப்பு என்றால் என்ன? இது தாய்- குழந்தையை எப்படி பிணைக்கும்..?
தாய்- குழந்தை பிணைப்புImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 18 Aug 2025 14:59 PM

இன்றைய நவீன காலத்தில் குழந்தை பிறந்தவுடன் பெண்கள் வேலைக்கு செல்வதால் குழந்தையுடனான பிணைப்பு என்பது குறைந்துவிடுகிறது என்றே சொல்லலாம். குழந்தைகளை கைகளிலும், இடுப்புகளிலும் தூக்கி சுமப்பதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் வித்தியாசமான குழந்தைகளை தாங்கும் பேக் போன்றவற்றை வாங்கி சுமக்கிறார்கள். அதேநேரத்தில், குழந்தையுடன் பிணைப்பு (Baby Bonding) உண்டாக்க வேண்டுமெனில் கங்காரு தாய் பராமரிப்பு முறையை பின்பற்றலாம். கங்காரு தாய் பராமரிப்பு (Kangaroo Mother Care) என்பது பிரசவத்திற்கு பிறகு, தாய் பால் கொடுத்தல், தாய் தனது குழந்தையை கங்காருவைப் போல மார்புக்கு அருகில் வைத்திருக்கும் முறையாகும்.

கங்காரு பராமரிப்பு முறையின் கீழ், தாய் நீண்ட காலத்திற்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியும். அதே நேரத்தில், குழந்தை எப்படி தாய்ப்பால் குடிக்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொள்கிறது. இது குழந்தையின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் முழுமையான வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. இதனுடன், குழந்தை பல்வேறு வகையான நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.

ALSO READ: சர்க்கரையும், உப்பும்.. 2 வயது குழந்தைகளுக்கு ஏன் கொடுக்கக்கூடாது..?

கங்காரு தாய் பராமரிப்பு என்பது குறைப்பிரசவக் குழந்தைகள் அல்லது குறைந்த எடை கொண்ட புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு அருமருந்து. புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இந்த சிறப்பு பராமரிப்பு முறையைப் பற்றி பெரும்பாலான பெற்றோர்கள் அறிந்திருக்கவில்லை. கங்காரு தாய் பராமரிப்பு மூலம், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தாயின் இயற்கையான அரவணைப்பு வழங்கப்படுகிறது, இது அவர்களின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது மற்றும் எடையை விரைவாக அதிகரிக்கிறது.

கங்காரு பராமரிப்பின் போது என்ன நடக்கும்?

கங்காரு பராமரிப்பு என்பது குழந்தையை தாயின் மார்பில் இறுக்கமாக ஒட்டி இருக்கும்படி வைத்துவிடுவார்கள். இது ஒரு கங்காரு பையைப் போல செயல்படும். குழந்தையின் உடலை தாயின் வெற்று உடல் மீது நிமிர்ந்த நிலையில் வைக்கப்படும். அப்போது குழந்தைக்கு டயப்பர் மற்றும் தொப்பி மட்டுமே அணியப்படும். பின்னர் குழந்தை ஒரு சூடான போர்வையால் மூடப்படும். இப்படி செய்வதன்மூலம், கருப்பையில் இருந்து வெளியே வந்த குழந்தை தன் தாயுடன் மீண்டும் பிணைக்கப்படும்போது பாதுகாப்பான உணர்வுடன் வெளி உலகத்தின் சூழலுக்கு ஏற்ப பழகும்.

உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துதல், சுவாசித்தல் மற்றும் உணவளித்தல் போன்ற பல உடல்நலப் பிரச்சினைகளுடன் போராடும் குறைப்பிரசவ குழந்தைகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். கங்காரு பராமரிப்பு குழந்தைக்கு அரவணைப்பு, ஆறுதல் மற்றும் பாதுகாப்பு உணர்வை உருவாக்குகிறது.

பயன் என்ன..?

குழந்தை மற்றும் பெற்றோர் இருவருக்கும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. கங்காரு பராமரிப்பின் போது தோலுடன் தோல் தொடர்பு ஆக்ஸிடாஸின் மற்றும் புரோலாக்டின் போன்ற ஹார்மோன்களைத் தூண்டுவதன் மூலம் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. பாரம்பரிய முறைகளுடன் ஒப்பிடும்போது கங்காரு தாய் பராமரிப்பு தாய்ப்பால் கொடுப்பதை முன்கூட்டியே தொடங்குவதை ஊக்குவிக்கிறது. எனவே, குழந்தைகளுக்கு கங்காரு பராமரிப்பு மிகவும் முக்கியமானது.

ALSO READ: கர்ப்ப காலத்தில் முதுகு வலி ஏற்பட காரணம் என்ன? தடுப்பது எப்படி..?

கங்காருக்களின் வேறு என்ன நன்மைகள்?

  • குழந்தையின் இதயத் துடிப்பு, வெப்பநிலை மற்றும் சுவாசத்தை சீராக்க உதவுகிறது.
  • குழந்தை பிறந்தவுடன் ஏற்படும் தனிமை உணர்வை குறைத்து, பாதுகாப்பான உணர்வை தரும்.
  • நல்ல தூக்கத்தையும் விரைவான எடை அதிகரிப்பையும் ஊக்குவிக்கிறது
  • குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையிலான உணர்ச்சி பிணைப்பை பலப்படுத்துகிறது.
  • தொற்று ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்.
  • குழந்தையின் அழுகை குறைந்து குழந்தை அமைதியாகிறது.