ஆண்களுக்கு தலைமுடி உதிர்வுக்கு குடல் ஆரோக்கியமா காரணம்?
Gut Health Linked to Male Baldness: இந்தியாவின் 10 பகுதிகளில் இருந்து 1.6 லட்சம் ஆண்களின் உடல்நிலை தகவல்களை ஆய்வு செய்ததில், குடல் ஆரோக்கியம் குறைவது தலைமுடி உதிர்வுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஒழுங்கற்ற உணவு நேரம், அதிக அளவில் ப்ராசஸ்ட் உணவுகள், தண்ணீர் குறைவாக குடித்தல் மற்றும் மன அழுத்தம் போன்ற நகர வாழ்க்கை முறைகள் முக்கிய காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன.
உலகம் முழுவதும் பலருக்கும் தலைமுடி உதிர்வு பெரும் கவலையாக மாறி வருகிறது. தலைமுடி மெல்லிதல், முன்புற முடி குறைவு போன்ற பிரச்சினைகள் அனைத்து பாலினத்தினரிடமும் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக ஆண்களுக்கு இது உடல் தோற்றம் மட்டுமல்லாமல் நம்பிக்கையையும் பாதிக்கும் பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. சிலர் புகைப்படம் எடுக்கத் தவிர்க்கும் நிலையும், சிலர் அலுவலகத்திற்கே தொப்பி அணிந்து செல்லும் நிலையும் உருவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. பெரும்பாலான சிகிச்சைகள் தலையோட்டத்தை மட்டும் கவனிக்கும் நிலையில், உடலின் அடிப்படை காரணங்களை அணுகுவதில்லை என்ற கருத்தும் எழுகிறது.
1.6 லட்சம் இந்திய ஆண்கள் தரவுகள் ஆய்வு
தலைமுடி உதிர்வின் அடிப்படை காரணங்களை கண்டறிய முயன்றதாக ட்ராயா ஹெல்த் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2024 டிசம்பர் முதல் 2025 டிசம்பர் வரை இந்தியாவின் 10 முக்கிய பகுதிகளில் இருந்து 1.6 லட்சம் ஆண்களின் சுய அறிக்கை அடிப்படையிலான உடல்நிலை தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், டெல்லி NCR, தெலங்கானா, பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், குஜராத் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது. இதில், குடல் ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கான முக்கிய குறியீடாக மலச்சிக்கல் நிலை பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குடல் ஆரோக்கியத்தில் சரிவு கவனிப்பு
2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில் குடல் ஆரோக்கியம் மேம்பட்டதாக கூறிய ஆண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததாக ஆய்வு தெரிவிக்கிறது. குறிப்பாக நகர்ப்புற மற்றும் பொருளாதார ரீதியாக செயலில் உள்ள மாநிலங்களில் குடல் செயல்பாட்டில் சரிவு அதிகமாக இருப்பது கவனிக்கப்படுகிறது. பகுதி வாரியாக பார்க்கும்போது, மலச்சிக்கல் இல்லையென தெரிவித்தவர்களின் சதவீதம் தெலங்கானாவில் சுமார் 4.10 புள்ளிகள் குறைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் 3.30 புள்ளிகள் மற்றும் டெல்லி NCR 2.97 புள்ளிகள் சரிவைக் கண்டதாக கூறப்படுகிறது. மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் பீகார் மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க குறைவு பதிவாகியுள்ளது.
Also Read: நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்தால் கால்களில் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுமா?
நகர வாழ்க்கை முறையே காரணமா?
இந்த மாற்றங்கள் ஊட்டச்சத்து குறைபாடு அல்லது கிராமப்புற வாழ்க்கை காரணமாக அல்ல என ஆய்வு குறிப்படுகிறது. மாறாக, நகரங்களில் வாழும் கல்வியறிவு கொண்ட மற்றும் வேலைப்பளு அதிகமான மக்களிடையே இந்த நிலை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. உடனடி உணவு விநியோக செயலிகள் மூலம் அதிக அளவில் அல்ட்ரா-ப்ராசஸ்ட் உணவுகள் பயன்படுத்தப்படுவது, ஒழுங்கற்ற உணவு நேரம், தண்ணீர் குறைவாக குடிக்கும் பழக்கம் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் உணவு பழக்கங்கள் போன்றவை முக்கிய காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றன.
குடல் பிரச்சினை – தலைமுடி வளர்ச்சிக்கு பாதிப்பு
குடல் செயல்பாடு பாதிக்கப்படும் போது உடலுக்கு தேவையான புரதம், இரும்புச்சத்து, சிங்க் மற்றும் பி வகை வைட்டமின்கள் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் சரியாக உறிஞ்சப்படாமல் போகும் என்று ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது. தலைமுடியின் அமைப்பில் சுமார் 90 சதவீதம் கேரட்டின் புரதம் இருப்பதால், இந்த ஊட்டச்சத்துக்கள் குறைந்தால் தலைமுடி பலவீனமாகி அதிக உதிர்வு ஏற்படலாம் என கூறப்படுகிறது. மேலும், குடல் செயல்பாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகள் உடலில் மெதுவான அழற்சி நிலையை உருவாக்கி தலைமுடி வளர்ச்சி சுற்றத்தை பாதிக்கக்கூடும் என்றும் ஆய்வு குறிப்படுகிறது.
“முடி உதிர்வு உடலின் ஆரம்ப எச்சரிக்கை”
ட்ராயா ஹெல்த் இணை நிறுவனர் சலோனி ஆனந்த் கூறுகையில், தலைமுடி உதிர்வு ஒரு அழகியல் பிரச்சினை மட்டும் அல்ல; அது உடலின் உள்நிலை மாற்றங்களை முதலில் காட்டும் அறிகுறி என கூறப்படுகிறது. குடல் ஆரோக்கியம், ஊட்டச்சத்து, ஹார்மோன் நிலை மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து கவனித்தால்தான் தலைமுடி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் தலைமுடி உதிர்வை வெளிப்புற சிகிச்சை மட்டுமின்றி உடலின் முழுமையான ஆரோக்கியத்துடன் இணைத்து பார்க்க வேண்டும் என்பதும் முக்கியத்துவம் பெறுகிறது.