AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆண்களா.. பெண்களா.. வாய்ப்புற்றுநோய் அதிகம் பாதிப்பது யாருக்கு?

Oral Cancer Rising: இந்தியாவில் ஆண்களில் வாய்க்கான்சர் அதிகரித்து வருவதாக ஐசிஎம்ஆர் ஆய்வு எச்சரிக்கிறது, இதற்கு முக்கிய காரணம் புகையிலைப் பயன்பாடு என கூறப்படுகிறது. குட்கா, பான், கெய்னி போன்ற பொருட்கள் மற்றும் மதுபானம் இந்த நோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன. பெரும்பாலான நோயாளிகள் தாமதமாக கண்டறியப்படுவதால் சிகிச்சை சிக்கலாகிறது.

ஆண்களா.. பெண்களா.. வாய்ப்புற்றுநோய் அதிகம் பாதிப்பது யாருக்கு?
மாதிரி புகைப்படம் Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 29 Apr 2026 12:39 PM IST

இந்தியாவில் ஆண்களுக்கிடையே வாய்க்கான்சர் (Oral Cancer) அதிகரித்து வருவது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) வெளியிட்ட சமீபத்திய ஆய்வு முக்கியமான எச்சரிக்கையை வழங்குகிறது. உலகளாவிய தரவுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆய்வில், இந்தியா உட்பட சில G20 நாடுகளில் வாய்க்கான்சர் சம்பவங்கள் உயர்ந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, புகையிலைப் பயன்பாடு – குறிப்பாக குட்கா, பான், கெய்னி போன்ற புகையிலை கலந்த பொருட்களை மெல்வது – இந்த நோயின் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இதனுடன், மதுபானம் மற்றும் பாக்கு பயன்பாடும் ஆபத்தை அதிகரிக்கின்றன. இவ்வாறான பழக்கங்கள் இளம் வயதிலேயே தொடங்கி சமூக வழக்கமாக ஆழமாக பதிந்திருப்பதும் கவலைக்குரியது.

முன்னேற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் நிலை

இந்த ஆய்வில் இந்தியாவுடன் சேர்த்து சீனா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் இந்தியாவில் ஆண்களில் வாய்க்கான்சர் ஆண்டுதோறும் சுமார் 1.20% வீதம் அதிகரித்து வருகிறது. இதேபோல் சீனாவில் 1.10%, கனடாவில் 0.94% மற்றும் அமெரிக்காவில் 0.57% அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இதனால், இந்தியா உலகளவில் முக்கியமான கவனத்திற்கு உரிய நாடாக மாறியுள்ளது. பெரும்பாலான நோயாளிகள் நோயின் கடைசி கட்டங்களில் தான் கண்டறியப்படுவதும் சிகிச்சையை சிக்கலாக்குகிறது.

பெண்களில் மார்பக மற்றும் கர்ப்பகழி புற்றுநோய் நிலை

பெண்களிடையே மார்பக புற்றுநோய் தொடர்ந்து முதன்மையான புற்றுநோயாக உள்ளது. தென் கொரியா, துருக்கி, சீனா, இந்தியா போன்ற நாடுகளில் இதன் வளர்ச்சி வேகம் மாறுபட்டாலும், இந்தியாவில் ஆண்டுதோறும் 1.83% அளவில் அதிகரிப்பு காணப்படுகிறது. அதே சமயம், கர்ப்பகழி (Cervical) புற்றுநோய் இந்தியாவில் வருடத்திற்கு -4.19% வீதத்தில் குறைந்து வருகிறது. இது தடுப்பூசி மற்றும் பரிசோதனை வசதிகள் மேம்பட்டதின் விளைவாகக் கருதப்படுகிறது.

எதிர்காலத்தில் அதிகரிக்கும் புற்றுநோய் சுமை

ICMR கணிப்பின்படி, இந்தியாவில் 2024ஆம் ஆண்டில் சுமார் 15.6 லட்சம் புதிய புற்றுநோய் நோயாளிகள் பதிவாகியுள்ளன மற்றும் 8.7 லட்சம் மரணங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போதைய நிலை தொடர்ந்தால் 2045க்குள் ஆண்டுதோறும் 24.6 லட்சம் நோயாளிகள் வரை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதில் ஆண்களில் வாய்க்கான்சர் மட்டும் 1.13 லட்சம் புதிய நோயாளிகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் 2022ஆம் ஆண்டில் சுமார் 2 கோடி புதிய புற்றுநோய் வழக்குகள் மற்றும் 97 லட்சம் மரணங்கள் பதிவாகியுள்ளன.

தடுப்பு மற்றும் ஆரம்ப கண்டறிதல் அவசியம்

மருத்துவ நிபுணர்கள் கூறுவதாவது, வாய்க்கான்சரை கட்டுப்படுத்துவதற்கான முக்கிய வழி புகையிலைப் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்துவதாகும். ஆரம்ப கட்டத்திலேயே நோயை கண்டறிவது சிகிச்சையை எளிதாக்கி உயிரிழப்புகளை குறைக்க உதவும். அரசின் விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் தடுப்பூசி முயற்சிகள் இதனை கட்டுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கின்றன. மக்கள் தங்களது வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டு வருவது மூலம் இந்த ஆபத்தான நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

Follow Us