மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருகல்யாணம்.. விழாக்கோலம் பூண்ட மதுரை..
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் இன்று காலை பக்தி பரவசத்துடன் மிகச்சிறப்பாக நடந்தது. மதுரையே விழாக்கோலம் பூண்டிருந்த இந்த நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சித்திரைத் திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் 8ஆம் நாள் நடைபெற்றது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் இன்று காலை பக்தி பரவசத்துடன் மிகச்சிறப்பாக நடந்தது. மதுரையே விழாக்கோலம் பூண்டிருந்த இந்த நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சித்திரைத் திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் 8ஆம் நாள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒன்பதாம் நாள் நிகழ்வாக, மீனாட்சி அம்மன் போரில் தேவர்களை வென்று இறுதியில் சிவபெருமானுடன் போர் புரியும் ‘திக் விஜயம்’ நிகழ்ச்சி (9ம் நாள்) விறுவிறுப்பாக நடைபெற்றது.
Follow Us
Latest Videos
