விஷ்வக் சென் மற்றும் கயாடு லோஹர் நடித்துள்ள காமெடி டிராமா படமான ஃபங்கி தற்போது ஓடிடிக்கு வர தயாராகியுள்ளது. அனுதீப் இயக்கிய இந்த படம் முதலில் 2026 பிப்ரவரி 13 அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் மார்ச் 13, 2026 முதல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆக இருக்கிறது. மேலும் இந்த படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஷ்வக் சென் ஒரு திரைப்பட இயக்குநராக நடித்துள்ளார். அவர் இயக்கும் முதல் படம் தான் ஃபங்கி. ஆனால் படப்பிடிப்பின் போது செலவு கட்டுப்பாட்டை மீறி அதிகரிக்கிறது.