கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தில் இருந்து வந்த நிலையில், இன்று மீண்டும் கடுமையான உயர்வை சந்தித்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூபாய் 230 உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூபாய் 14,650 ஆகவும், ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூபாய் 1,17,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூபாய் 15,982 ஆகவும், ஒரு சவரன் 24 கேரட் தங்கம் ரூபாய் 1,27,856 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய நிலவரப்படி, தங்கம் ஒரு சவரனுக்கு ரூபாய் 1,840 உயர்ந்துள்ளது. இது நடுத்தர மக்கள் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.