Female Infertility: பெண் கருவுறாமைக்கு இதுதான் முக்கிய காரணங்களா..? அதை எவ்வாறு தடுப்பது?
Infertility in Women: பெண்களின் கருவுறாமை பல காரணங்களால் ஏற்படலாம். வயது, ஹார்மோன் கோளாறுகள், வாழ்க்கை முறை, மற்றும் மன அழுத்தம் போன்றவை முக்கிய காரணங்கள். ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக வலி, ஹார்மோன் சமநிலையின்மை, மற்றும் கருச்சிதைவு போன்றவை அறிகுறிகள் ஆகும்.

ஆண்களுக்கு எப்படி விந்தணு எண்ணிக்கை, ஆண்மை குறைவு பிரச்சனை உள்ளதோ, அதேபோல் கருவுறாமை என்பது ஒரு பெண்ணை கருத்தரிப்பதில் (Female Infertility) உள்ள சிரமத்தைக் குறிக்கிறது. இது ஒரு பெண்ணின் வயது அல்லது இனப்பெருக்க உறுப்புகளில் மட்டும் ஏற்படும் பிரச்சனை அல்ல. மாறாக, இது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், சுகாதார சூழல், வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தம் (Mental Pressure) போன்ற காரணங்களும் காரணமாக இருக்கலாம். இன்றைய நவீன காலத்தில் கருவுறாமை இப்போதெல்லாம் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இதை சரியான நேரத்தில் கண்டறிந்து சரியான சிகிச்சையைப் பெறுவதன்மூலம், இந்த பிரச்சனையை சரி செய்யலாம். இதற்கு ஆரம்ப கட்டங்களிலேயே கவனம் மற்றும் சிகிச்சையை மேற்கொள்வதன்மூலம், பெண்கள் கர்ப்பம் என்ற புனிதத்தை பெற முடியும்.
வயது முதிர்வு ஒரு காரணமா..?
30 ஆண்டுகளுக்குப் பிறகு கருவுறுதல் படிப்படியாகக் குறைவதற்கு வயதானதே மிகப்பெரிய காரணம். பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS), தைராய்டு கோளாறுகள் அல்லது புரோலாக்டின் ஏற்றத்தாழ்வு போன்ற ஹார்மோன் பிரச்சனைகள் கருவுறாமைக்கு முக்கிய காரணங்களாக அமைகிறது. அதேபோல் உடல் பருமன், அதிகப்படியான மன அழுத்தம், புகைபிடித்தல், மது மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறை ஆகியவையும் இந்த ஆபத்தை அதிகரிக்கின்றன. இதேநேரத்தில், கருப்பைகள் அல்லது ஃபலோபியன் குழாய்களில் அடைப்புகள் அல்லது தொற்றுகள் போன்ற பிரச்சனைகளும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். கடந்த காலத்தில் பிற தொற்று அல்லது கருச்சிதைவு ஏற்பட்ட பெண்களிலும் இந்த ஆபத்து அதிகரிக்கிறது.
ALSO READ: உங்கள் சிறுநீர் நிறம் மாறுகிறதா? கவனம்! இது பித்தப்பை கற்களின் அறிகுறியா..?




குழந்தையின்மைக்கான 5 முக்கிய அறிகுறிகள் என்ன..?
மலட்டுத்தன்மையின் ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காண்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், இதற்கு சில அறிகுறிகள் மூலம் அடையாளம் காணலாம். இவை பின்வருமாறு..
- மாதவிடாய் ஒழுங்கற்றதாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ/மிக அதிகமாகவோ இருக்கும்.
- அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கும் அதிகப்படியான அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் வலி.
- அதிகப்படியான முகம் அல்லது உடல் முடி வளர்ச்சி, முகப்பரு அல்லது முடி உதிர்தல் போன்ற ஹார்மோன் சமநிலையின்மையின் அறிகுறிகள்.
- அடிக்கடி கருச்சிதைவுகள் அல்லது கருத்தரிப்பதில் சிரமம்.
- கருவுறுதலை பாதிக்கக்கூடிய உடல் ஆரோக்கியம் அல்லது எடையில் திடீர் மாற்றங்கள்.
இந்த அறிகுறிகள் அடிக்கடி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுவது முக்கியம்.
ALSO READ: கர்ப்ப காலத்தில் மொத்தம் எத்தனை ஸ்கேன்? ஏன் எடுக்கப்படுகிறது..? மருத்துவர் சொல்வதை தெரிஞ்சுக்கோங்க!
இவற்றை எவ்வாறு தடுப்பது..?
- ஆரோக்கியமான உணவு உள்ளிட்ட வாழ்க்கை முறையை பின்பற்றுதல்
- தினமும் உடற்பயிற்சி செய்து உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமானது.
- உங்களுக்கு புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்கள் இருந்தால் கைவிடுவது நல்லது.
- மன அழுத்தத்தைக் குறைக்க தியானம், யோகா செய்யுங்கள், போதுமான தூக்கம் பெறுங்கள்.
- மாதவிடாய் சுழற்சி முறைகள் மற்றும் ஹார்மோன் மாற்றங்களை மாதந்தோறும் கவனியுங்கள். தவறினால் மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள்.
- அவ்வப்போது உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள். இதில், ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும்.