Pregnancy Scans: கர்ப்ப காலத்தில் மொத்தம் எத்தனை ஸ்கேன்? ஏன் எடுக்கப்படுகிறது..? மருத்துவர் சொல்வதை தெரிஞ்சுக்கோங்க!
Pregnancy Health: கர்ப்ப காலத்தில் பொதுவாக நான்கு முக்கியமான ஸ்கேன்கள் செய்யப்படுகின்றன. முதல் மூன்று மாதங்களில் டேட்டிங் ஸ்கேன், 11-14 வாரங்களில் NT ஸ்கேன், 18-22 வாரங்களில் அனோமலி ஸ்கேன், மற்றும் 28-32 வாரங்களில் க்ரோத் ஸ்கேன் போன்றவை என மொத்தம் 4 ஸ்கேன்கள் எடுக்கப்படுகிறது.

கர்ப்பம் (Pregnancy) என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் சிறப்பு வாய்ந்த மற்றும் உணர்திறன் வாய்ந்த காலமாகும். இந்த நேரத்தில், தாய் மற்றும் குழந்தை என இருவரும் ஆரோக்கியமாக இருப்பது முக்கியம். இந்த காலத்தில் அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பம் முதல் பல வகையான ஸ்கேன்கள் (Scans) குழந்தையின் வளர்ச்சியை கண்காணிப்பதில் உதவுவது மட்டுமல்லாமல், சரியான நேரத்தில் ஏற்படக்கூடிய ஏதேனும் சிக்கல்களை கண்டறிய உதவுகிறது. இந்தநிலையில், முதல் மாதம் 10வது மாதம் வரை கர்ப்ப காலத்தில் எத்தனை ஸ்கேன்கள் எடுக்கப்படுகிறது..? இது எந்த மாதிரியான ஸ்கேன்கள் என்பதை இங்கே முழுமையாக தெரிந்து கொள்வோம்.
கர்ப்ப காலத்தில் பொதுவாக எத்தனை ஸ்கேன்கள் எடுக்கப்படுகிறது..?
View this post on Instagram
கர்ப்ப காலத்தின்போது குழந்தையின் வளர்ச்சி மற்றும் தாய் வயிற்றில் உள்ள பனிக்குடத்தின் தண்ணீர் அளவு வரை ஸ்கேன்கள் ஆராய்கின்றன. அதன்படி, பிரபல மகப்பேறு மருத்துவர் டாக்டர் கவி சௌமியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்ப காலத்தில் எத்தனை ஸ்கேன் எடுக்க வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், கர்ப்ப காலத்தில் பொதுவாக 4 வழக்கமாக ஸ்கேன்கள் எடுக்கப்படுகிறது. இருப்பினும், தேவைப்பட்டால் மருத்துவரின் பரிந்துரைப்படி வேறு சில ஸ்கேன்களும் எடுக்கலாம் என தெரிவித்தார்.




ALSO READ: கங்காரு தாய் பராமரிப்பு என்றால் என்ன? இது தாய்- குழந்தையை எப்படி பிணைக்கும்..?
இயர்லி/ டேட்டிங் ஸ்கேன் அல்லது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்:
அல்ட்ராசவுண்ட் என்பது ஒரு மருத்துவ இமேஜிங் நுட்பமாகும். இது அதிக அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளை பயன்படுத்தி உடலுக்குள் உள்ள உறுப்புகள், திசுக்கள் மற்றும் பிற கட்டமைப்புகளின் படங்களை உருவாக்குகிறது. கர்ப்ப காலத்தில் முதல் 3 மாதங்களில் எடுக்கப்படும் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை கர்ப்பத்தை உறுதிப்படுத்தவும், கருவின் நிலையை அறியவும், கர்ப்பகால வயதின் துல்லியத்தை உறுதிப்படுத்தவும் எடுக்கப்படுகிறது. மேலும், குழந்தையின் இதயத்துடிப்பை உறுதிப்படுத்தவும், கருப்பையில் கரு இருப்பதையும் அதன் உயிர்வாழ்வையும் உறுதிப்படுத்துவதாகும். இது தவிர, கருவில் ஒரு குழந்தையா அல்லது இரண்டு குழந்தையா என்பதை கண்டறிவார்கள்.
NT ஸ்கேன்:
கர்ப்ப காலத்தில் இரண்டாவது ஸ்கேன் NT ஸ்கேன் ஆகும். ஒரு கர்ப்பிணிப் பெண் 11 முதல் 14 வாரங்களுக்குள் இந்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும். NT ஸ்கேன், நியூச்சல் டிரான்ஸ்லூசென்சி என்றும் அழைக்கப்படுகிறது. இதில், குழந்தையின் கழுத்துக்குப் பின்னால் இருக்கும் திரவம் அளவிடப்படுகிறது. மேலும், குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் நோய்க்குறி இருக்கிறதா என்பதையும் கண்டறியலாம்.
அனோமலி ஸ்கேன்:
கர்ப்பத்தின் 14 முதல் 24 வாரங்களுக்குள் மூன்றாவது ஸ்கேன் செய்யப்படுகிறது. இது அனோமலி ஸ்கேன் என்று அழைக்கப்படுகிறது. குழந்தையின் உறுப்புகள் மற்றும் தலை முதல் கால் வரை விரிவாக பரிசோதிக்கப்படும். அதாவது, இந்த சோதனையின் மூலம், குழந்தையின் எந்த வகையான மரபணு அசாதாரணத்தையும் எளிதாக சரிபார்க்க முடியும்.
ALSO READ: கர்ப்ப காலத்தில் டீ குடிப்பது எவ்வளவு பாதுகாப்பானது? ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ குடிக்கலாம்..?
க்ரோத் ஸ்கேன்:
கர்ப்ப காலத்தில் குழந்தையின் வளர்ச்சியை அறிந்துகொள்ள 28 முதல் 32 வாரங்களுக்குள் ஒரு ஸ்கேன் செய்யப்படுகிறதூ. இது க்ரோத் ஸ்கேன் என்று அழைக்கப்படுகிறது. இது குழந்தையின் வளர்ச்சி மற்றும் பனிக்குட நீர் அளவை கண்காணிக்கிறது. க்ரோத் ஸ்கேன் குழந்தையின் தலையின் அகலம், குழந்தையின் வயிற்றின் நீளம் மற்றும் குழந்தையின் தொடை எலும்பின் நீளம் ஆகியவற்றைக் காட்டுகிறது. இது கர்ப்பத்தின் நிலைக்கு ஏற்ப குழந்தை முழுமையாகவோ அல்லது சரியாகவோ வளர்ந்துள்ளதா என்பதைக் காட்டுகிறது. சில நேரங்களில் குழந்தையின் வளர்ச்சியைக் கண்டறிய நஞ்சுக்கொடிக்கு இரத்த ஓட்டமும் சரிபார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஸ்கேனிலும் நஞ்சுக்கொடியின் திரவம் மற்றும் நிலை ஆகியவையும் கவனிக்கப்படுகின்றன.