Safe Pregnancy Drinks: கர்ப்ப காலத்தில் டீ குடிப்பது எவ்வளவு பாதுகாப்பானது? ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ குடிக்கலாம்..?
Tea During Pregnancy: கர்ப்ப காலத்தில் டீ அருந்துவது குறித்த சந்தேகங்கள் பலருக்கு உள்ளன. அதிக காஃபின் உட்கொள்ளுதல் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும். இரும்பு உறிஞ்சுதலை பாதிக்கும் டானின்களும் டீயில் உள்ளன. ஆனால் இஞ்சி டீ, மிளகுக்கீரை சூப், முருங்கை இலை சூப் போன்ற ஆரோக்கியமான மாற்று பானங்கள் உள்ளன.

கர்ப்ப காலத்தில் (Pregnancy) பல விஷயங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இந்தக் காலகட்டத்தில், தாய் மற்றும் குழந்தை இருவரும் பாதுகாப்பாக இருக்க வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். சில பெண்களுக்கு டீ (Tea) என்றால் மிகவும் பிடிக்கும். இதனால், கர்ப்ப காலத்தில் டீ பிரியராக கருதப்படும் பெண்கள் ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை டீயை அருந்துகிறார்கள். ஆனால் கர்ப்ப காலத்தில், டீயை குறைந்த அளவே உட்கொள்ள வேண்டும் என்று பலருக்கும் தெரியாது. அதன்படி, கர்ப்ப காலத்தில் டீ மற்றும் காபி போன்றவற்றை குறைந்த அளவே உட்கொள்ள வேண்டும்.
டீ மற்றும் காபி:
டீ மற்றும் காபி என இவை இரண்டிலும் காஃபின் உள்ளது. இந்த நேரத்தில், கர்ப்ப காலத்தின்போது பெண்கள் 200 மில்லிகிராமுக்கு மேல், அதாவது ஒரு நாளைக்கு இரண்டு கப் டீ குடிக்கக் கூடாது. கர்ப்ப காலத்தில் சிறிய அளவில் காஃபின் உட்கொள்வது நல்லது. ஏனெனில், கர்ப்ப காலத்தின்போது அதிகளவில் காஃபின் எடுத்துகொள்வது பிறக்கும் குழந்தையின் வளர்ச்சி குன்றிய நிலை, முன்கூட்டிய பிரசவம் அல்லது கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
ALSO READ: கர்ப்ப காலத்தில் முதுகு வலி ஏற்பட காரணம் என்ன? தடுப்பது எப்படி..?




கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒவ்வொருவரின் மருத்துவ நிலையும் வேறுபட்டது. இதுபோன்ற சூழ்நிலையில், சில பெண்கள் கர்ப்ப காலத்தில் டீ அருந்தவே கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். கர்ப்ப காலத்தில் ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ குடிக்க வேண்டும் என்பது குறித்து உங்கள் நிபுணரை அணுகவும்.
இரத்த சோகையை ஏற்படும்:
டீயில் டானின்கள் உள்ளன, அவை இரும்பு உறிஞ்சுதலை பாதிக்கலாம். இது இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகைக்கு வழிவகுக்கும், இது கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் ஆபத்தானது. இதைக் குறைக்க, உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் அல்லது பின் டீ குடிப்பது நன்மை பயக்கும். முடிந்தவரை வெறும் வயிற்றில் குடிப்பதை தவிருங்கள்.
கர்ப்ப காலத்தின்போது பெண்கள் எவற்றை குடிப்பது பாதுகாப்பானது..?
இஞ்சி டீ
இஞ்சி, குறிப்பாக முதல் மூன்று மாதங்களில், குமட்டல் மற்றும் காலை குமட்டலைத் தணிப்பதாக நன்கு அறியப்படுகிறது. ஒரு கப் சூடான இஞ்சி தேநீர் செரிமானத்தை மேம்படுத்தி, வயிற்று உப்புசத்தை நீக்கும்.
மிளகுக்கீரை சூப்:
கர்ப்ப காலத்தில் ஏற்படும் அசௌகரியங்களுக்கு மிளகுக்கீரை மற்றொரு மருந்து. இது வாயு, அஜீரணம் மற்றும் வயிற்று வலியைப் போக்கும். இது தலைவலியைப் போக்கவும் உடலை அமைதிப்படுத்தவும் உதவும்.
ALSO READ: கங்காரு தாய் பராமரிப்பு என்றால் என்ன? இது தாய்- குழந்தையை எப்படி பிணைக்கும்..?
முருங்கை இலை சூப்:
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஏதாவது குடிக்க விரும்பினால் முருங்கை இலை சூப் சிறந்தவை. இதை குடிப்பதன்மூலம் குழந்தைக்கு தேவையான இரும்புச்சத்து கிடைப்பது மட்டுமின்றி, தாய்க்கு தேவையான ஆற்றலும் கிடைக்கிறது. மேலும், இவை மிகவும் பாதுகாப்பானது.