Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Perfect Tea Brewing: சுவையான டீ எப்படி தயாரிப்பது..? இப்படி ட்ரை செய்தால் ருசி அமோகம்!

How to Make the Perfect Cup of Tea: சரியான தேநீர் தயாரிப்பதில் பலர் தவறுகள் செய்கின்றனர். மீண்டும் மீண்டும் கொதிக்க வைப்பது, அனைத்தையும் ஒன்றாகக் கொதிக்க வைப்பது, பால் மற்றும் தண்ணீரை ஒரே நேரத்தில் சேர்ப்பது போன்றவை தேநீரின் சுவையை கெடுக்கும்.

Perfect Tea Brewing: சுவையான டீ எப்படி தயாரிப்பது..? இப்படி ட்ரை செய்தால் ருசி அமோகம்!
சுவையான டீ செய்முறைImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 11 Aug 2025 14:17 PM IST

உலகத்தில் பெரும்பாலானோருக்கு டீ என்றால் பைத்தியம் என்றே சொல்லலாம். டீ இல்லாமல் அவர்களால் ஒரு நாளை கூட கடக்க முடியாது. தங்களை உற்சாகமாக வைத்திருக்க டீ, இவர்களுக்கு உற்சாக பானம் என்றே கருதுவார்கள். ஒரு விருந்தோம்பலாக இருந்தாலும் சரி, விடுமுறையை கழிப்பதாக இருந்தாலும் சரி டீ அனைத்தையும் சரி செய்யும் என்று நினைப்பார்கள். இந்தநிலையில், நீங்கள் டீ போடும்போது செய்யும் தவறுகள் உங்களது டீயின் சுவையை கெடுக்கும். அதன்படி, டீ தயாரிக்கபோது செய்யக்கூடாத தவறுகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

மீண்டும் மீண்டும் கொதிக்க விடக்கூடாது:

பெரும்பாலான மக்கள் டீ குடிக்க விரும்புகிறார்கள். அதன்படி, ஒரு பாத்திரம் நிறைய டீ போட்டு வைத்து மீண்டும் மீண்டும் கொதிக்க வைத்து குடிப்பார்கள். அப்படி செய்யும்போது அதன் சுவை மிகவும் மோசமடையக்கூடும். மீண்டும் மீண்டும் கொதிக்க வைப்பது ஆக்ஸிஜன் அளவை குறைக்கும்.

ALSO READ: சமையலறையில் வேலை சுலபமாக இருக்க வேண்டுமா..? எளிதான ரகசிய குறிப்புகள்!

எல்லாவற்றையும் ஒன்றாக கொதிக்க வைத்தல்:

நீங்கள் எல்லாவற்றையும் ஒன்றாக கொதிக்க வைத்து இதுவரை டீ தயாரித்தால் அது முற்றிலும் தவறானது. தவறுதலாக கூட இதை செய்யக்கூடாது. முதலில் டீதூளை தனியாக தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். அதன்பிறகு, பாலை கொதிக்க வைத்து அதில் கலந்து சர்க்கரை கலந்து குடித்தால் சுவையாக இருக்கும்.

பால் மற்றும் தண்ணீர்:

பாலையும் தண்ணீரையும் ஒருபோதும் ஒன்றாக கலக்கக் கூடாது. முதலில் தண்ணீரை கொதிக்க வைத்து, பின்னர் பாலை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

டீதூள் சேர்க்கும் முறை:

டீ தயாரிக்கும்போது ஒருபோதும் குழப்பமடையக்கூடாது. இல்லையெனில், சுவை மோச்மாக கெட்டுவிடும். டீத்தூளை எப்போதும் நேரடியாக பால் பாத்திரத்தில் கொட்டக்கூடாது. இதுவும் சுவையை கெடுக்கும்.

ALSO READ: வெங்காயம் விரைவில் கெட்டுவிடுகிறதா? கெடாமல் வைக்க இந்த முறையில் டிரை பண்ணுங்க!

பால் சேர்க்கும் முறை:

டீ கொதிக்க வைக்கும்போது டீத்தூளை நிறம் நல்ல நிலைக்கு மாறும்போது, பால் மட்டும் சேர்க்க வேண்டும். இது உங்கள் டீயின் சுவையை இரட்டிப்பாக்கும். இந்த சிறிய விஷயங்களை நீங்கள் சிறப்பு கவனம் செலுத்தினாலே சுவை சூப்பராக இருக்கும்.

சரியான தேநீர் தயாரிப்பதற்கான சரியான வழி

  • உங்கள் டீ ஒவ்வொரு முறையும் சரியானதாகவும், சுவையானதாகவும் இருக்க வேண்டுமென்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்:
  • முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும்.
    இப்போது அதில் தேவையான அளவு டீத்தூளை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
    இப்போது சர்க்கரையைச் சேர்த்து உருக விடவும்.
    டீத்தூளின் சாரம் தண்ணீரில் நன்கு ஊறும்போது, அதில் பால் சேர்க்கவும்.
    அதன்பிறகு, டீயை குறைந்த தீயில் 2-3 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, வடிகட்டி பரிமாறவும்.