Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வெங்காயம் விரைவில் கெட்டுவிடுகிறதா? இந்த முறையில் டிரை பண்ணுங்க!

Onion Storage Tips : இந்திய சமயலறையில் வெங்காயத்தின் பயன்பாடு தவிர்க்க முடியாதது. இது உணவுக்கு சுவை அளிப்பதுடன் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. ஆனால் வெங்காயம் விரைவிலேயே கெட்டு விடுகின்றன. இந்த கட்டுரையில் வெங்காயத்தை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வெங்காயம் விரைவில் கெட்டுவிடுகிறதா? இந்த முறையில் டிரை பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 30 Jul 2025 00:02 AM

வெங்காயம் (Onion) என்பது இந்திய சமையலறைகளில் (Kitchen) தவிர்க்க முடியாத ஒரு பொருள்.  என்ன இந்திய வகை உணவுகளை சமைத்தாலும் அதில் தவறாமல் இடம் பெறும் ஒரு பொருள் வெங்காயம். அவை உணவுக்கு சுவையை அளிப்பதுடன் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. வெங்காயத்தில் உள்ள பிரச்னை அது விரைவிலேயே கெட்டு விடும் ஆபத்து இருக்கிறது. எவ்வளவு முயற்சித்தும் அதனை பலரால் தவிர்க்க முடிவதில்லை. இருப்பினும், கொஞ்சம் கவனமாக இருந்தால், வெங்காயத்தை நீண்ட காலம் புதியதாக வைத்திருக்க முடியும். நீங்கள் சில குறிப்புகளைப் பின்பற்றினால், உங்கள் வெங்காயம் நீண்ட காலம் நீடிக்கும். வெங்காயத்தை பாதுகாக்கும் முறைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

காற்றோட்டமான இடத்தில் வைத்திருப்பது அவசியம்

வெங்காயம் சேமிக்கப்படும் இடத்தில் நல்ல காற்றோட்டம் இருப்பது மிகவும் முக்கியம். அவை காற்றுப்படாமல் இருந்தால், அவை ஈரம் பட்டு பூஞ்சைகள் உருவாகக் கூடும். இதனால் வெங்காயம் விரைவாகக் கெட்டுவிடும். வெங்காயத்தை காற்றோட்டமான கூடைகள்  சேமித்து வைப்பதன் மூலம் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க முடியும்.

இதையும் படிக்க : மழைக்காலத்தில் எந்த காய்கறிகளை வாங்கக் கூடாது..? எதை வாங்குவது, எப்படி சுத்தம் செய்வது?

ஈரப்பதம் மற்றும் வெப்பம் இல்லாத இடம் சிறந்தது

வெங்காயம் ஈரப்பதத்தை சிறிதும் பொறுத்துக்கொள்ளாது. ஈரமான இடத்தில் வைத்தால் அவை அழுகிவிடும். அதனால்தான் வெங்காயத்தை ஒருபோதும் குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. மேலும், அதிக சூரிய ஒளி அல்லது வெயில் படும்  இடங்களில் வெங்காயத்தை வைப்பது அதன் ஆயுளைக் குறைக்கும். அதை ஒரு குளிர் அறையில், வெளிச்சம் குறைவாக உள்ள ஒரு மூலையில் வைப்பது நல்லது.

தனி இடத்தில் பாதுகாக்கவும்

வெங்காயத்தை மற்ற காய்கறிகளுடன் சேர்த்து வைப்பதால் அவை விரைவில் கெட்டுவிடும். வெங்காயம் ஈரமாகி விரைவாக அழுகிவிடும், குறிப்பாக உருளைக்கிழங்கு அல்லது ஆப்பிள் போன்ற ஈரமான உணவுகளுக்கு அருகில் இருந்தால். அது மட்டுமல்லாமல், வெங்காயம் அவற்றின் வாசனையையும் பாதிக்கும். அதனால்தான் இவற்றைத் தனித்தனியாக வைத்திருப்பது நல்லது.

இதையும் படிக்க : மழைக்கால ஈரப்பதம்.. மர பர்னிச்சர்களை பாதுகாப்பது எப்படி? டிப்ஸ் இதோ!

உணவுக்கு சுவை அளிப்பதற்காக மட்டும் சமையலில் வெங்காயம் சேர்க்கப்படுவதில்லை. வெங்காயத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன.  சட்னி முதல் சாம்பார் வரை அனைத்து உணவுகளிலும் வெங்காயம் அவசியம். இந்த சின்ன சின்ன குறிப்புகளைப் பின்பற்றினால், நீங்கள் வாங்கும் வெங்காயம் பல நாட்கள் கெடாமல் இருக்கும். உணவுகள் நன்றாக ருசிக்க புதிய வெங்காயம் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே அவற்றை கவனமாக பாதுகாப்பதும் மிக மிக அவசியம்.