Food Safety Tips: முளைத்த உருளை, வெங்காயத்தை சாப்பிடலாமா..? இதனால் இவ்வளவு ஆபத்தா?
Sprouts on Potatoes and Onions: முளைத்த உருளைக்கிழங்கில் சோலனைன் என்ற நச்சு அதிகரிக்கும், இதனால் வயிற்றுப் பிரச்னைகள் ஏற்படும். சிறிய முளைகள் இருந்தால் வெட்டி பயன்படுத்தலாம், ஆனால் அதிகமாக முளைத்தால் தூக்கி எறிய வேண்டும். முளைத்த வெங்காயம் குறைவான ஆபத்து, ஆனால் அழுகியதாக இருந்தால் தவிர்க்கவும்.

மார்க்கெட்களில் (Market) குறைந்த விலைகளில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் கிடைக்கும்போது நாம் மொத்தமாக கட்டை பைகளில் வாங்கி வந்து கொட்டி வைப்போம். இவற்றை வாங்கி வந்த சில நாட்களில் ஈரப்பதம் காரணமாக, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குகளில் (Potato and Onion Sprouting) முளைக்க தொடங்கும். இவற்றை கட் செய்து எறிந்துவிட்டு பெரும்பாலான வீடுகளில் சமைக்கப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், இவை சாப்பிட பாதுகாப்பானதா அல்லது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்குமா உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கு முளைக்க தொடங்கும்போதோ அல்லது பச்சை நிறமாக மாற தொடங்கும் போதோ, அவற்றில் கிளைகோல்கலாய்டுகள் எனப்படும் நச்சு சேர்மங்களின் அளவு அதிகரிக்கும். இவை சோலனைன் மற்றும் சாகோனைன் சேர்ந்த கலவையாகும். இவை உருளைக்கிழங்கில் பூச்சிகள் மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்க இவை உதவும். ஆனால், இவற்றின் அளவு அதிகரிக்கும்போது, இவை மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
ALSO READ: செரிமான ஆரோக்கியத்தைப் பாதிக்கும் 5 மோசமான பழக்கங்கள்…
உருளைக்கிழங்கில் உள்ள சோலனைகளை மனித உடலுக்குள் செல்லும்போது வயிற்று வலி, குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மேலும் தலைவலி, தலைச்சுற்றல், காய்ச்சல் விரைவான இதயத் துடிப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். மிக அதிக அளவில் உட்கொண்டால், அது தசை பலவீனம் மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தையும் ஏற்படுத்தும். சில சமயங்களில் இவை கோமாவுக்கு கொண்டு செல்லலாம்.
முளைத்த உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் சர்க்கரையாக மாறும். இதனால், கிளைசெமிக் குறியீட்டை அதிகரிக்கும். இது சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கும். கடைகளில் வாங்கி வந்த உருளைக்கிழங்கில் லேசான அளவில் முளைகள் இருந்து, பச்சை நிறமாகவோ மாறவில்லை என்றால், நீங்கள் முளைகளையும் பச்சை பகுதியையும் வெட்டி, அதன் தோலை உரித்து நன்கு சமைப்பதன் மூலம் அதன் தீங்கு விளைவிக்கும் சேர்மங்களின் அளவை ஓரளவு குறைக்கலாம். உருளைக்கிழங்கு அதிகமாக முளைத்து அதிக பச்சை நிறமாகவோ இருந்தால், அதைத் தூக்கி எறிவது சரியான வழி.
வெங்காயம்:
முளைத்த வெங்காயம் உருளைக்கிழங்கை போல அவ்வளவு நச்சுத்தன்மை வாய்ந்தது அல்ல. அதாவது, வெங்காயத்தில் சோலனைன் இல்லை, ஆனால் அவற்றில் சல்பர் சேர்மங்கள் உள்ளன. அதிகமாக முளைத்த வெங்காயத்தை சாப்பிடுவது சிலருக்கு வாயு அல்லது லேசான வயிற்று வலி போன்ற லேசான செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். வெங்காயம் நீண்ட காலமாக சேமித்து வைக்கப்பட்டு முளைத்திருந்தால், அவை பூஞ்சை அல்லது அழுகும் வாய்ப்புகள் அதிகரிக்கும். பூஞ்சை அல்லது அழுகிய வெங்காயத்தை சாப்பிடுவது புட் பாய்சனை ஏற்படுத்தும்.
ALSO READ: எலுமிச்சையை நீண்ட நாட்கள் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும் வழிகள்!
வெங்காயத்தில் சிறிய முளைகள் இருந்தால், அதை வெட்டி பயன்படுத்தலாம். இருப்பினும், வெங்காயம் மிகவும் மென்மையாகவோ, அழுகியதாகவோ அல்லது பூஞ்சை காளான் இருந்தாலோ, அதை தூக்கி எறிய வேண்டும்.
உருளைக்கிழங்கையும் வெங்காயத்தையும் ஒருபோதும் ஒன்றாக வைக்கக்கூடாது. வெங்காயத்திலிருந்து வெளிப்படும் எத்திலீன் வாயு உருளைக்கிழங்கின் முளைக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது, இதனால் உருளைக்கிழங்கு விரைவாக கெட்டுவிடும். எனவே, இவை இரண்டையும் தனித்தனியாக வைப்பது நல்லது.