AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முடி உதிர்வை கட்டுப்படுத்தி வளர்ச்சியை அதிகப்படுத்தணுமா?

Control Hair Fall and Boost Hair Growth: வெங்காயத் தோல், கருஞ்சீரகம், வெந்தயம் போன்ற இயற்கை பொருட்களால் ஹேர்டானிக் தயாரிக்கலாம். ஸ்கால்ப்பில் ஸ்பிரே செய்து மசாஜ் செய்தால் முடி உதிர்வை குறைத்து வளர்ச்சியை மேம்படுத்த உதவலாம். வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

முடி உதிர்வை கட்டுப்படுத்தி வளர்ச்சியை அதிகப்படுத்தணுமா?
முடி வளர்ச்சிக்கான இயற்கை தீர்வு Image Source: freepik
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 09 Mar 2026 17:26 PM IST

வீடு, பாத்ரூம்னு எங்கு பார்த்தாலும் உங்க முடியாவே இருக்கா? கொத்து கொத்தா, வேர் வேரா கொட்டுதா? ஸ்கால்ப் வெளில தெரியுது, இப்படியே போனா கொஞ்ச நாள்ல சொட்டையே விழுந்துடும்னு பயமா இருக்கா? அப்போ உங்களுக்குத் தான் இந்த பதிவு. இதில் சொல்லப்போற ஒரு ஹேர்டானிக் போதும். உங்க முடி கொட்டறதை நிறுத்தி நல்லா இரண்டு மடங்கு வளர வைக்கும். இன்றைய வாழ்க்கை முறையில் பலருக்கும் முடி உதிர்வு ஒரு பொதுவான பிரச்சினையாக மாறியுள்ளது. அதிக மன அழுத்தம், உணவு பழக்கங்களில் மாற்றம், மாசு, ஹார்மோன் மாற்றங்கள் போன்ற காரணங்களால் இளம் வயதிலேயே முடி கொட்டுதல் அதிகரித்து வருகிறது. இதனால் பலரும் தங்களின் தலைமுடி மெல்ல மெல்ல குறைந்து விடுமோ என்ற பயத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் வீட்டிலேயே எளிதாக தயாரிக்கக்கூடிய இயற்கை ஹேர்டானிக் பலருக்கும் உதவியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

முடி வளர்ச்சிக்கான இயற்கை தீர்வு

முடி வளர வேண்டும் என்று ஆசைதான். அது வளரவில்லை என்றால் கூட பரவாயில்லை. கொட்டாம இருந்தாலே போதும் என்று நினைப்பவர்கள் தான் அதிகம். அந்த பிரச்சினை உங்களுக்கும் இருக்குனா இந்த ஹேர்டானிக் உங்களுக்கு உதவி செய்யும். முடியை வளர வைக்கவும் செய்யும்.

பலருக்கும் முக்கியமான கவலை முடி வேகமாக உதிர்வதுதான். அதனால் முதலில் முடி உதிர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது பொதுவான எண்ணமாக உள்ளது. இயற்கை பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த ஹேர்டானிக் முடியின் வேர் பகுதியை வலுப்படுத்தி, தலைமுடி வளர்ச்சியை மேம்படுத்த உதவலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து பயன்படுத்தும் போது முடி ஆரோக்கியம் மேம்படும் வாய்ப்பும் உள்ளது.

ஹேர்டானிக் தயாரிக்க தேவையான பொருட்கள்

வெங்காயத் தோல் – ஒரு கைப்பிடி,
கருஞ்சீரகம் – 1 ஸ்பூன்,
வெந்தயம் – 1 ஸ்பூன்,
கிராம்பு – 10,
டீ தூள் – 1 ஸ்பூன்,

இந்த ஹேர்டானிக்கை தயாரிக்க மிகவும் எளிமையான பொருட்களே போதுமானது. வீட்டில் எளிதாக கிடைக்கும் வெங்காயத் தோல், கருஞ்சீரகம், வெந்தயம், கிராம்பு மற்றும் டீ தூள் ஆகியவை தலைமுடி ஆரோக்கியத்திற்கு உதவக்கூடியவை என பலர் கூறுகின்றனர். இவை அனைத்தும் சேர்ந்து தலைமுடியின் வேர் பகுதியை வலுப்படுத்தவும், தலைமுடி உதிர்வை குறைக்கவும் உதவலாம் என நம்பப்படுகிறது.

Also Read: சாப்பிடும்போது மொபைல் போன் பயன்படுத்துவதால் என்ன பிரச்னை வரும்?

ஹேர்டானிக் தயாரிக்கும் முறை

ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடுங்கள்.

மேலே குறிப்பிட்டு இருக்கும் வெங்காயத் தோல், கருஞ்சீரகம், வெந்தயம், டீதூள் ஆகியவற்றை உள்ளே சேருங்கள்.

நன்கு கொதிக்க விட வேண்டும். அரை லிட்டர் தண்ணீர் 125 மில்லியாக (நான்கில் ஒரு பங்கு) ஆகும்வரை கொதிக்க விடவும்.

பின்பு அதை அப்படியே ஆறவிடுங்கள். ஆறியபின் வடிகட்டி எடுத்தால் ஹேர்லாஸ் கண்ட்ரோலுக்கான ஹேர் டானிக் ரெடி.

இந்த முறையில் தயாரிக்கப்படும் ஹேர்டானிக் மிகவும் செறிவானதாக இருக்கும். கொதிக்க வைத்து தண்ணீரை குறைத்ததால் அதில் உள்ள இயற்கை சத்துகள் அதிகமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குளிர்ந்த பிறகு அதை வடிகட்டி பயன்படுத்த தயாராக வைத்துக்கொள்ளலாம்.

ஹேர்டானிக் பயன்படுத்தும் முறை

வடிகட்டி வைத்திருக்கும் ஹேர் டானிக்கை ஒரு ஸ்பிரே பாட்டில் ஊற்றிக் கொள்ளுங்கள்.

முடியை கொஞ்சம் கொஞ்சம் எடுத்து ஸ்கால்ப்பில் நன்கு இறங்கும்படி இதை ஸ்பிரே செய்ய வேண்டும்.

ஸ்பிரே செய்த பின் விரல்களால் நன்கு 10 நிமிடங்களுக்கு மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.

இரவு முழுவதும் கூட அப்படியே விடலாம் அல்லது ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளித்துக் கொள்ளலாம்.

இந்த ஹேர் ஸ்பிரே பயன்படுத்தும் போது தலையில் எண்ணெய் எதுவும் இருக்கக் கூடாது.

இந்த ஹேர்டானிக்கை சரியான முறையில் பயன்படுத்தினால் அதன் பலன் அதிகமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஸ்கால்ப்பில் நன்கு ஊடுருவும் வகையில் ஸ்பிரே செய்து மென்மையாக மசாஜ் செய்வது முக்கியம். இதனால் தலைமுடியின் வேர் பகுதிக்கு ஊட்டச்சத்து கிடைக்க உதவலாம்.

வேறு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

உங்களுக்கு இன்னும் அதிக நன்மைகள் வேண்டும் என்றால் இந்த ஹேர் டானிக்கை ஒரு பௌலில் சிறிதளவு எடுத்துக் கொண்டு அதோடு நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் ஷாம்புவை மிக்ஸ் செய்து குளிக்கும்போது பயன்படுத்தலாம்.

முடி வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்றால் இந்த நீரை ரைஸ் வாட்டருடன் கலந்து ஷாம்புவுக்கு பின்னும் கன்டிஷ்னருக்கு முன்னும் தலையை அலசி வரலாம்.

இந்த ஹேர்டானிக்கை வெவ்வேறு முறைகளில் பயன்படுத்துவதன் மூலம் அதன் பயன் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ரைஸ் வாட்டருடன் சேர்த்து பயன்படுத்தும் போது தலைமுடி மென்மையாகவும் வலுவாகவும் மாற உதவலாம்.

ஹேர் டானிக் பயன்படுத்துவதன் நன்மைகள்

இந்த ஹேர் டானிக்கை தொடர்ந்து நீங்கள் தலைமுடிக்குப் பயன்படுத்தி வரும்போது முடி உதிர்தல் வேகமாக நிற்கும்.

15 நாளில் முடி வளர்ச்சி தொடங்கும். ஸ்கால்ப்பில் இருக்கும் அரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தீரும்.

ஸ்கால்ப்பில் ஏதேனும் பூஞ்சை தொற்றுக்கள் இருந்தால் அதை குறைக்கும். பொடுகுத் தொல்லையைத் தீர்க்கும்.

முடி வறட்சியாகவும் frizzy ஆகவும் இருந்தால் அதைக் குறைத்து பளபளப்பாகவும் பொலிவாகவும் மாற்றும்.

இந்த இயற்கை ஹேர்டானிக்கை தொடர்ந்து பயன்படுத்தும் போது தலைமுடி ஆரோக்கியம் மேம்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக முடி உதிர்வை குறைத்து, புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவலாம் என்று கூறப்படுகிறது.

Follow Us