Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Home Snake Removal: மழைக்காலத்தில் வீட்டிற்குள் பாம்பா..? என்ன செய்யலாம்..? என்ன செய்யக்கூடாது..? முழு விவரம்!

Snake Safety Tips: கோடை மழைக்கால மாற்றத்தில், வீடுகளில் பாம்புகள் புகுவது அதிகரிக்கிறது. பாம்பைக் கண்டால், முதலில் அமைதியாக இருங்கள். குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். பாம்பு இருக்கும் இடத்தை மூடி, வனத்துறை அல்லது தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுங்கள். பாம்பின் வகையை அடையாளம் காண முயற்சிக்காதீர்கள்.

Home Snake Removal: மழைக்காலத்தில் வீட்டிற்குள் பாம்பா..? என்ன செய்யலாம்..? என்ன செய்யக்கூடாது..? முழு விவரம்!
பாம்புImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 24 Jul 2025 16:20 PM

கோடைக்காலம் (Summer) முடிந்து மழைக்காலம் (Rainy Season) மெல்ல மெல்ல படையெடுக்க தொடங்கிவிட்டது. வெப்பம் மறைந்து குளிர்ச்சி துளிர்க்கும் அதே வேளையில், ஊர்வன வகையை சேர்ந்த பாம்புகள் (Snake) பெரும்பாலும் மழை நீரில் இருந்து தங்களை காத்துக்கொள்ள ஈரமான இயற்கை வாழ்விடங்களை விட்டு வறண்ட பகுதிகளை நோக்கி நகர்கின்றன. இதன் காரணமாக, நாம் வசிக்கும் வீடுகளுக்கும், தேவையில்லாத பொருட்களை அடுக்கி வைத்துள்ள இடங்களிலும் பாம்புகள் தஞ்சம் புகுக்கின்றன. அதன்படி, உங்கள் வீட்டிற்குள் பாம்பை கண்டால் முதலில் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். இப்படியான சரியான முடிவுகளை எடுப்பதன் மூலம், தீங்கு அல்லது பீதிகளை தடுத்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

வீட்டிற்குள் பாம்பை கண்டால் முதலில் செய்ய வேண்டிய விஷயங்கள்:

அமைதியாக இருங்கள்:

வீட்டிற்குள் பாம்பை கண்டால் முதல் மற்றும் மிக முக்கியமான விஷயம் அமைதியாக இருப்பதுதான். பாம்புகள் பொதுவாக ஆக்ரோஷமானவை அல்ல, இவை கூச்சத்தன்மை கொண்டவை. நீங்கள் அந்த பாம்புகளை அச்சுறுத்தினால், அதாவது அதீத சத்தங்கள், அசைவுகள் அல்லது பாம்பை விரட்ட முயற்சிக்கும்போது அவை தங்களை தற்காத்துக்கொள்ள முயற்சிக்கும். இப்படியான விஷயங்களை ஒருபோதும் செய்யாதீர்கள். அதற்கு பதிலாக, சூழ்நிலையையும், குடும்பத்தாரையும் பாதுகாப்பாக இருக்க செய்து, வனத்துறை அல்லது தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுங்கள்.

ALSO READ: பிரிட்ஜின் வாழ்நாள் நீட்டிக்க வேண்டுமா..? மழைக்கால ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்கும் உப்பு..!

பாதுகாப்பாக இருங்கள்:

பாம்பின் அளவு அல்லது தோற்றம் எதுவாக இருந்தாலும், அதிலிருந்து எப்போதும் குறைந்தது 6 முதல் 8 அடி இடைவெளியில் இருந்து தள்ளி இருங்கள். பொதுவாகவே, பல விஷமற்ற பாம்புகள் விஷமுள்ள பாம்புகளை போலவே இருக்கும். விஷமற்ற பாம்புகளும் நம்மை கடிக்க கூடும். பாம்புகளை உங்கள் வீட்டிற்குள் கண்டால், முதலில் சிறு குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை வீட்டிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லுங்கள். அதேபோல், லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் போன்றவற்றிற்காக புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை தவிர்க்கவும்.

கதவை மூடுங்கள்:

பாம்பு படுக்கையறை அல்லது சமையலறை போன்ற பகுதிகளில் இருந்தால், நீங்கள் முதலில் வீட்டின் மற்ற பகுதிகளுக்குள் செல்வதை தடுக்க கதவை மூடவும். கதவின் அடிப்பகுதியில் உள்ள இடைவெளியை குறைக்க சாக்கு, துண்டு, போர்வை அல்லது துணியை கொண்டு அடைக்கவும். பாம்பின் இருப்பிடத்தை தூரத்திலிருந்து கண்காணிக்கவும், ஆனால் அதை மறைவிலிருந்து குத்தவோ அல்லது தள்ளவோ முயற்சிக்காதீர்கள். இப்படி செய்தால், அது உங்களை தாக்கக்கூடும்.

மீட்புக்குழுவை அழையுங்கள்:

பாம்பு இருக்கும் இடத்தை அடைத்ததும் உடனடியாக உங்கள் உள்ளூர், வனவிலங்கு அல்லது வனத்துறை உதவி மையத்திற்கு தகவல் கொடுங்கள்.இந்த நிபுணர்கள் பாம்புகளைப் பாதுகாப்பாக அகற்றி இடமாற்றம் செய்ய உதவி செய்வார்கள்.

ALSO READ: ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு மனநலம் பாதிக்குமா? ஆய்வு எச்சரிக்கை!

எந்த வகை பாம்பு என்று அடையாளம் காணதீர்கள்:

பாம்பின் இனத்தை யூகிக்கவோ அல்லது அது விஷமா என்பதை தீர்மானிக்கவோ தூண்டப்படுவதைத் தவிர்க்கவும். இந்தியாவில் 270 க்கும் மேற்பட்ட இனங்கள் இருப்பதால், பல பாம்புகள் ஒரே மாதிரியான வடிவங்கள் அல்லது வண்ணங்களை பெற்றிருக்கும். இவை, விஷமுள்ள அல்லது விஷமற்ற வகைகளை சார்ந்தவைகளாக இருக்கலாம். எனவே, பாம்பு பிடிக்கும் நிபுணர்கள் வரும் வரை காத்திருந்து, அவை பிடிக்கும் வரை காத்திருங்கள். இவை, உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கும்.