AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வீட்டுக்கு அருகில் பாம்புகள் இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது? எளிய வழிகள் இதோ

Snake Detection Tips : இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் பாம்புக்கடியால் உயிரிழக்கின்றனர். பாம்புகள் இருப்பதை சில அறிகுறிகள் மூலம் எளிதில் அடையாளம் காணலாம். இந்த கட்டுரையில் நம் வீட்டை சுற்றி பாம்புகள் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள பயன்படும் அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.

வீட்டுக்கு அருகில் பாம்புகள் இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது? எளிய வழிகள் இதோ
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Jun 2025 23:42 PM IST

இந்தியாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பாம்புக்கடியால் (Snake) இறக்கின்றனர். உலக அளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதித்த போதிலும், அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் ஒவ்வொரு ஆண்டும் 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாம்பு கடியினால் பாதிக்கப்படுவதாகவும், இதன் விளைவாக 55,000 க்கும் மேற்பட்டோர் இறப்பதாகவும் தெரிவிக்கிறது. அதனால்தான் உங்களுக்கு அருகில் பாம்புகள் இருப்பதைக் குறிக்கும் அறிகுறிகளை அடையாளம் காண்பது அவசியம்.  பாம்புகள் வளரும்போது அவற்றின் தோலை உரித்துவிடும். அந்தத் தோல் மெல்லியதாகவும், உலர்ந்ததாகவும் இருக்கும். பாம்பின் தோலை நீங்கள் வீட்டின் முற்றத்திலோ, தோட்டங்களிலோ (Garden) பார்த்தால், அங்கே பாம்புகளின் நடமாட்டம் இருப்பது உறுதியாகிறது.

வீட்டை சுற்றி பாம்புகள் இருப்பதற்கான அறிகுறிகள்

  • ஈரமான மண்ணில் வளைந்து, நெளிந்து காணப்படும் கோடுகள் பாம்பு சென்ற பாதையைக் குறிக்கின்றன. இத்தகைய அடையாளங்கள் பெரும்பாலும் காலையிலோ அல்லது மழைக்குப் பின்னரோ காணலாம்.  உங்கள் வீட்டின் வெளிப்புறத்திலோ அல்லது தாழ்வாரத்திற்கு அருகிலோ இதுபோன்ற அறிகுறிகளைக் கண்டால், உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
  • நாய்கள், பூனைகள் போன்ற விலங்குகள் நம்மை விட ஆபத்தை உணரும். அவை ஒரு இடத்தை சுட்டிக்காட்டி கத்தினால், கோபமான சத்தங்களை எழுப்பினால், அல்லது காரணமின்றி விசித்திரமாக நடந்து கொண்டால் அவை ஆபத்தின் அறிகுறிகளாகும். எலிகளைப் பிடிக்கும் பூனைகள் ஒரு பகுதியில் சுற்றித் திரிந்து சத்தம் எழுப்பினால், அங்கு ஏதோ ஒன்று வாழ்வதற்கான வாய்ப்பு உள்ளது.
  • வீட்டின் அருகே அடிக்கடி கேட்கும் தவளைகளின் சத்தம் திடீரெனக் குறைவதும், முன்னர் பார்த்த தவளைகள், எலிகளின் எண்ணிக்கை குறைவதும் பாம்புகள் இருப்பதற்கான அறிகுறிகளாகும். அது நேரடியாகத் தெரியாவிட்டாலும், பாம்பு அங்கே இருக்க வாய்ப்பு உள்ளது.
  • பாம்புகள் தாங்களாகவே துளைகளையோ தோண்டுவதில்லை. அவை எலிகள் மற்றும் எறும்புகள் போன்ற மற்ற விலங்குகள் உருவாக்கிய துளைகளில் ஒளிந்து கொள்கின்றன. உங்கள் வீட்டைச் சுற்றி சிறிய துளைகளைக் கண்டால், அவை காலியாக இருந்தாலும் கூட, உள்ளே ஒரு பாம்பு இருக்க வாய்ப்புள்ளது. அத்தகைய இடங்களைச் சுற்றி அதிக குப்பைகள் சேராமல் பார்த்துக்கொள்வது நல்லது.
  • பயன்படுத்தப்படாத செருப்புகள், பழைய டிரங்குகள் மற்றும் கேரேஜில் உள்ள வாகனங்கள் போன்ற இடங்களில் பாம்புகள் ஒளிந்து கொள்ள அதிக வாய்ப்புள்ளது. வெப்பமான காலநிலையில், பாம்பு குளிர்ந்த இடங்களுக்குச் செல்லும். எனவே, தினமும் பயன்படுத்தாத பொருட்களைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும்.

இந்த அறிகுறிகளின் மூலம் பாம்பு இருப்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடிந்தால், ஆபத்தைத் தவிர்க்கலாம். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவரும் இந்த விஷயங்களை அடையாளம் காண முடியும். வீட்டை சுத்தமாக வைத்திருப்பது, குப்பைகளை அகற்றுவது, வீட்டைச் சுற்றி தேவையற்ற துளைகள் இருந்தால் அவற்றை மூடுவது போன்ற எளிய பணிகளின் மூலம் பாம்புகளின் பாதிப்பில் இருந்து விடுபடலாம். பாம்புகளிடமிருந்து பாதுகாப்பதற்கான முதல் ஆயுதம் எச்சரிக்கை. சிறிய அறிகுறிகளைக் கூட குறைத்து மதிப்பிடாதீர்கள்.

Follow Us