AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தனியாக சுற்றுலா செல்லலாமா? 2026-ல் உலகின் பாதுகாப்பான நாடுகள் இதோ!

Top Safest Solo Travel Destination: 2026-ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பான தனிப் பயண நாடுகளின் பட்டியலில் சான் மரினோ முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆண்டோரா, சிங்கப்பூர், ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளும் முன்னணி இடங்களைப் பெற்றுள்ளன. குறைந்த குற்றச்செயல்கள், தரமான மருத்துவ வசதிகள் மற்றும் சிறந்த பொதுப் போக்குவரத்து இந்த நாடுகளின் முக்கிய பலமாக கருதப்படுகின்றன.

தனியாக சுற்றுலா செல்லலாமா? 2026-ல் உலகின் பாதுகாப்பான நாடுகள் இதோ!
தனியாக சுற்றுலா Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 25 Jul 2026 15:15 PM IST

சமீப ஆண்டுகளில் தனியாக சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை உலகளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்கள், இளம் தொழில்முனைவோர் மற்றும் சாகசப் பயணத்தை விரும்புவோர், பாதுகாப்பான நாடுகளை தேர்வு செய்து புதிய அனுபவங்களை நாடுகின்றனர். இதையொட்டி, மனித மேம்பாட்டு நிலை, சமூக அமைதி, சுகாதார வசதிகள், தனிநபர் பாதுகாப்பு உணர்வு, இணைய வசதி உள்ளிட்ட பல அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு உலகின் பாதுகாப்பான தனிப் பயண நாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த மதிப்பீட்டில் ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலான இடங்களைப் பிடித்திருப்பது கவனிக்கத்தக்கதாகும்.

முதலிடத்தில் சான் மரினோ

இத்தாலியைச் சுற்றி அமைந்துள்ள சிறிய நாடான சான் மரினோ, 2026-ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பான தனிப் பயண நாடுகளின் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இங்கு இரவு நேரத்திலும் மக்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல முடியும் என்ற நம்பிக்கை அதிகமாக உள்ளது. அதேசமயம் தரமான மருத்துவ வசதிகள், குறைந்த குற்றச்செயல்கள் மற்றும் அமைதியான வாழ்க்கைமுறை ஆகியவை இந்த நாட்டை தனிப் பயணிகளுக்கு சிறந்த தேர்வாக மாற்றுகின்றன. சிறிய பரப்பளவு கொண்ட நாடாக இருந்தாலும், வரலாற்று நினைவுச்சின்னங்கள், மலைப்பகுதி காட்சிகள் மற்றும் சுத்தமான சூழல் சுற்றுலாப் பயணிகளை கவர்கின்றன.

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளும் முன்னணியில்

பாதுகாப்பு பட்டியலில் ஆண்டோரா இரண்டாவது இடத்தையும், ஆசியாவின் முக்கிய நாடான சிங்கப்பூர் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரியா, செக்கியா, கத்தார், எஸ்டோனியா, புரூணை, டென்மார்க் மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகளில் திறமையான பொதுப் போக்குவரத்து, சுத்தமான நகரங்கள், சட்ட ஒழுங்கு மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற வசதிகள் இருப்பதால், முதல் முறையாக தனியாக வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கும் நம்பிக்கையளிக்கும் இடங்களாக பார்க்கப்படுகின்றன.

Also Read: வலசைப் பறவைகளைக் காக்கும் கடைசி வாய்ப்பு! ஒரு இறுதிப்பயணம்…

பாதுகாப்பு மட்டுமல்ல, திட்டமிடலும் அவசியம்

ஒரு நாடு பாதுகாப்பானதாக இருந்தாலும், பயணிகள் தங்களது திட்டமிடலில் கவனம் செலுத்துவது அவசியம். செல்லும் இடம் குறித்து முன்கூட்டியே தகவல் அறிதல், அவசர உதவி எண்களை சேமித்து வைத்திருத்தல், முக்கிய ஆவணங்களின் நகல்களை பாதுகாப்பாக வைத்திருத்தல் மற்றும் இரவு நேரங்களில் எச்சரிக்கையுடன் செயல்படுதல் போன்ற பழக்கங்கள் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும். மேலும், உள்ளூர் சட்டங்கள் மற்றும் கலாச்சாரத்தை மதித்து நடப்பது பயண அனுபவத்தை இனிமையாக்கும். பாதுகாப்பான நாடை தேர்வு செய்வதோடு, பொறுப்பான பயண அணுகுமுறையையும் கடைப்பிடித்தால், தனிப் பயணம் மறக்க முடியாத அனுபவமாக மாறும்.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

Follow Us