Wamiqa Gabbi: லோகேஷ் கனகராஜின் நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகை – வாமிகா கபி!
Wamiqa Gabbi praises Lokesh Kanagaraj: பாலிவுட் சினிமாவில் உச்ச நடிகையாக இருந்துவருபவர் வாமிகா கபி. இவர் தமிழில் ஏற்கனவே படத்தில் நடித்திருந்தாலும், பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ள புது படம்தான் டிசி. அண்மையில் இப்பட ஆல்பம் ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், லோகேஷ் கனகராஜ் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.
இந்தி சினிமாவில் இளம் நடிகையாக பிரபலமானவர் நடிகை வாமிகா கபி (Wamiqa Gabbi). இவர் இந்தி மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்துவருகிறார். இவர் கடந்த 2016ம் ஆண்டிலே மாலை நேரத்து மயக்கம் (Maalai Nerathu Mayakkam) என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக நுழைந்தார். இந்த படமானது அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. இப்படத்தின் வெளியீட்டிற்கு பின், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துவந்தார். இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான “மார்டன் லவ் சென்னை” (Modern Love Chennai) என்ற வெப் தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார் இந்த பிரபலத்திற்கு பின்னும், தொடர்ந்து வெப் தொடர்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார். இவர் இறுதியாக பிரியதர்ஷன் இயக்கிய பூத் பங்களா என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
கிட்டத்தட்ட 9 வருடத்திற்கு இவர் தமிழில் கதாநாயகியாக நடித்துள்ள புத்தம் புது படம்தான் டிசி (DC). இதில் லோகேஷ் கனகராஜிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் ஆல்பம் ரிலீஸ் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றிருந்த நிலையில், அதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) குறித்து நடிகை வாமிகா கபி பேசியுள்ளார்.
இதையும் படிங்க: செப்டம்பரில் தொடங்குகிறது AK 64 2படத்தின் ஷூட்டிங்? வைரலாகும் தகவல்
லோகேஷ் கனகராஜ் குறித்து நடிகை வாமிகா கபி புகழ்ந்து பேசிய விஷயம்:
அந்த நிகழ்ச்சி மேடையில் பேசிய வாமிகா கபி, “லோகேஷ் சார், நீங்கள் மிகவும் பணிவானவர் மற்றும் பேரார்வம் கொண்டவர். நான் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் மிகப்பெரிய ரசிகை, ஆனால் தற்போது அவருடன் பணியாற்றிய பிறகு, நான் நடிகர் லோகேஷின் மிகப்பெரிய ரசிகையாகிவிட்டேன்.
இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ பட முழு ஆல்பம் வெளியானது!
அடுத்த முறை அவர் இசையும் செய்வார் என்று நினைக்கிறேன். மேலும் ராக்ஸ்டார் (அனிருத்), மிகவும் தகுதியான பேச்சுலர். லட்சக்கணக்கான மக்கள் உங்கள் பாடல்களுக்கு நடனமாடியுள்ளனர், இது எனக்கு ஒரு கனவு நனவானது போன்றது” என அதில் அவர் ஓபனாக பேசியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் குறித்து நடிகை வாமிகா கபி பேசியது தொடர்பாக வைரலாகும் வீடியோ பதிவு:
#WamiqaGabbi:
“Lokesh Sirrrr…..You are so grounded and passionate. I’m a Big Fan of DIRECTOR #LokeshKanagaraj, but after working with him I’m a Big fan of ACTOR Lokesh🫶. I think next time he gonna do music also. ROCKSTARRRR, The Most eligible bachelor. Millions of people…— AmuthaBharathi (@CinemaWithAB) July 25, 2026
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க, சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ள அதிரடி ஆக்ஷன் திரைப்படம் டிசி. இப்படத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது “ஏ” தரச் சென்சார் பெற்றுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 07ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



