பழனி கோயில் நிலம் ரூ.100 கோடி என்பதே தெரியாது.. அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அதிரடி விளக்கம்!
HRCE Minister Ramesh Speech: பழனி தண்டாயுதபாணி முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலம் ரூ.100 மதிப்பு என்பதே தனக்கு தெரியாது என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியது விரிவாக பார்க்கலாம்.
திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக இந்து சமய அற நிலையத் துறை அமைச்சர் ரமேஷ் திருச்சி ஆட்சியர் பிரதிக் தாயளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதை தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருச்சி சமயபுரம் கோவிலில் பணியில் இருந்த மணியக்காரர் பழனி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணை நேர்மையாக நடத்தப்பட்டு குற்றங்கள் கண்டறியும் நிலையில், நிர்வாக ரீதியான நடவடிக்கையாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு இறுதியில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபனம் செய்யப்பட்டால் இது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மருத்துவமனைகளில் எலிகள் நடமாட்டம் தொடர்பாக வந்த புகார்களில் உரிய ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
பழனி கோயில் நிலம் ரூ.100 கோடி என தெரியாது
இதில், அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பில் உள்ள குறைகளை சரி செய்யும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலம் முறைகளாக பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் தன் மீதும், தமிழக அரசு மீதும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை ஆகும். பழனியில் ஒரு நிலம் உள்ளது. அந்த நிலத்தின் மதிப்பு ரூ.100 கோடி பெரும் என இந்த வழக்குக்கு பிறகு தான் எனக்கே தெரிய வந்தது. இதற்கு முன்பு அந்த நிலத்தின் மதிப்பு எனக்கு தெரியாது.
மேலும் படிக்க: “போலீசை மாத்தியாச்சு.. அணுகுமுறை மாறுச்சா?”.. அம்பேத்கர் சிலை சம்பவத்தை சுட்டிக்காட்டி திருமாவளவன் கொந்தளிப்பு!




நில முறைகேடு விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை
கடந்த ஜூன் 30- ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை மூலம் மேல்முறையீடு செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் மூலமாக அந்த நிலம் மீட்கப்பட்டது. இந்த நிலம் பதிவு கடந்த ஜூலை 7- ஆம் தேதி நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தை உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று முதல் அமைச்சர் ஜோசப் விஜய் இடம் கூறியது நான் தான். தற்போது, இந்த போலி நில முறைகேடு பத்திரப்பதிவு விவகாரத்தில் சிபிசிஐடி முதல் கட்ட விசாரணையை நடத்தி வருகிறது.
நீட் போராட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு
இந்த விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். சமீபகாலமாக நடைபெற்று வரும் நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டங்களுக்கு தமிழக அரசு நியாயமான ஆதரவை தெரிவித்துள்ளதாக முதல் அமைச்சர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் தெளிவாக பதிவிட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: தூத்துக்குடி லாக்அப் மரண சர்ச்சை.. இளைஞரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு.. நடந்தது என்ன?