AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“போலீசை மாத்தியாச்சு.. அணுகுமுறை மாறுச்சா?”.. அம்பேத்கர் சிலை சம்பவத்தை சுட்டிக்காட்டி திருமாவளவன் கொந்தளிப்பு!

திருமாவளவன் நீட் விவகாரம் காவல்துறை விமர்சனம் குறித்துப் பேசுகையில், 152 முறை வினாத்தாள்கள் கசிந்துள்ளதைச் சுட்டிக்காட்டி நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியதுடன், தமிழக காவல்துறையின் செயல்பாட்டையும் காரசாரமாக விமர்சித்துள்ளார். ஒட்டுமொத்தக் கொள்கை மற்றும் நிர்வாக அமைப்பில் மாற்றம் வந்தால் மட்டுமே அடித்தட்டு மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“போலீசை மாத்தியாச்சு.. அணுகுமுறை மாறுச்சா?”.. அம்பேத்கர் சிலை சம்பவத்தை சுட்டிக்காட்டி திருமாவளவன் கொந்தளிப்பு!
திருமாவளவன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 25 Jul 2026 07:32 AM IST

சென்னை, ஜூலை 25: நாடு முழுவதும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள போட்டித் தேர்வு முறைகேடுகள் மற்றும் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், தனிநபரையோ அல்லது ஒரு சில அதிகாரிகளையோ மாற்றுவது எவ்விதத் தீர்வையும் தராது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. அதிரடியாகத் தெரிவித்துள்ளார். அதேவேளையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் காவல்துறையின் ஒடுக்குமுறை அணுகுமுறையில் எவ்வித மாற்றமும் நிகழவில்லை எனத் தமிழக அரசுக்கும் அவர் தனது ஆவேசமான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க: வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு – எந்தெந்த இடங்களுக்கு தெரியுமா?

“152 முறை கொஸ்டின் பேப்பர் லீக்!”:

இந்திய அளவில் போட்டித் தேர்வுகளை நடத்தும் கட்டமைப்புகள் முற்றிலும் சீரழிந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய திருமாவளவன், ஓட்டை உடைசலான கட்டமைப்பு: “கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு போட்டித் தேர்வுகளில் சுமார் 152 முறை வினாத்தாள்கள் கசிந்துள்ளன. தற்போதைய தேர்வு நடத்தும் முறை ஓட்டையும் உடைசலுமாக உள்ளது என்பதை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

அமைச்சரை மாற்றுவது தீர்வாகாது:

நீட் முறைகேட்டிற்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கூறுவது ஒரு தற்காலிகமான நகர்வே தவிர, முழுமையான தீர்வைத் தராது. அவருக்குப் பதிலாக வேறு ஒருவர் வந்தாலும் அதே சூழல்தான் தொடரும்.”

“ஒரு அதிகாரியை தூக்கிவிட்டு வேறொரு அதிகாரியைப் போடுவதாலோ அல்லது அமைச்சரை மாற்றுவதாலோ எந்தப் பலனும் இல்லை. நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் மாற வேண்டுமென்றால், நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில், இந்த முழு அவலத்திற்கும் பொறுப்பேற்றுப் பிரதமர் நரேந்திர மோடியே பதவி விலக வேண்டும்” – தொல். திருமாவளவன்

“ஆட்சி மாறுச்சு… போலீஸ் அணுகுமுறை மாறுச்சா?”:

நீட் விவகாரத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் நிலவும் கள நிலவரம் மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்துத் திருமாவளவன் காரசாரமான கருத்துக்களை முன்வைத்தார். “முந்தைய ஆட்சியில் இருந்த காவல்துறையினரை மாற்றிவிட்டு, தற்போது புதிய காவல்துறை வந்துவிட்டது. ஆனால், செயல்முறையில் என்ன மாற்றம் நடந்துள்ளது? முந்தைய ஆட்சியில் அம்பேத்கர் சிலையைத் திறந்து வைத்தபோது, அப்போதைய காவல்துறை எப்படி தகரச் சீட்டுகளைக் கொண்டு சிலையை மூடி மறைத்ததோ, அதேபோல்தான் தற்போதைய காவல்துறையும் தகரம் அடித்து மூடுகிறது.

மேலும் படிக்க: 200-க்கும் மேற்பட்ட காவலர் குடும்பங்களிடம் ரூ.20 கோடி மோசடி.. பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு சிறை!!

காவல்துறையின் சிந்தனையிலும் அணுகுமுறையிலும் எந்த மாற்றமும் வரவில்லை.” தனிநபர்களையோ அல்லது ஆட்சியாளர்களையோ மட்டுமே மாற்றுவது உண்மையான சமூக மாற்றத்தைத் தராது என்றும், ஒட்டுமொத்தக் கொள்கை மற்றும் நிர்வாக அமைப்பில் மாற்றம் வந்தால் மட்டுமே அடித்தட்டு மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Follow Us