வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு – எந்தெந்த இடங்களுக்கு தெரியுமா?
வார இறுதி நாட்களில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க ஏதுவாக தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி சென்னை கிளாம்பாக்கம்,கோயம்பேடு மற்றும் மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சென்னை, ஜூலை 24 : வார இறுதி நாட்களில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க ஏதுவாக தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஜூலை 24, 2026 இன்று 6487 பயணிகளும், ஜூலை 25, 2026 நாளை 2387 பயணிகளும், ஜூலை 26, 2026 ஞாயிற்றுக்கிழமை, 7099 பயணிகளும் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
வார இறுதி நாட்களின் பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்
இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூலை 24, 2026 இன்றும், ஜூலை 25, 2026 நாளையும் மற்றும் ஜூலை 26, 2026 ஞாயிற்றுக்கிழமையும் சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும். மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலாக பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : பயணிகள் கவனத்திற்கு… தாம்பரம் – தென்காசி இடையே சிறப்பு ரயில் – எப்போது தெரியுமா?




அதன்படி ஜூலை 24, 2026 இன்று 6487 பயணிகளும், ஜூலை 25, 2026 நாளை 2387 பயணிகளும் மற்றும் ஜூலை 26, 2026 ஞாயிறு அன்று 7089 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஜூலை 24, 2026 இன்று 395 பேருந்துகளும் ஜூலை 25, 2026 நாளை 330 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை,நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஜூலை 24, 2026 இன்று 120 பேருந்துகளும், ஜூலை 25, 2026 சனிக்கிழமை அன்று 120 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தலைமைச் செயலகம் இடம் மாறுகிறதா? எந்த இடம் தெரியுமா.. அதிகாரிகள் தீவிர ஆலோசனை!
இதன் ஒரு பகுதியாக சென்னை மாதவரத்திலிருந்து ஜூலை 24, 2026 மற்றும் ஜூலை 25, 2026 ஆகிய 2 நாட்கள் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 25 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 26, 2026 ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் அன்று 420 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.