Teddy Day 2026: டெடியுடன் காதலர் தினம்.. டெடி தினத்தை எப்படி கொண்டாடுவது?
Valentine Week: அன்புக்குரியவர்களுடன் அன்பையும் நெருக்கத்தையும் வளர்ப்பதற்கு டெடி தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி, உங்கள் உணர்வுகளை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாவிட்டால், டெடி பியர் வாங்கி கொடுத்து காதலை வெளிப்படுத்தலாம். இது உங்கள் காதலை சௌகரியமாக உணர செய்யும்.
பிப்ரவரி மாதம் என்றாலே காதல் மாதமாக பார்க்கப்படுகிறது. அதன்படி பிப்ரவரி 7ம் தேதி முதல் தொடங்கும் காதலர் வாரத்தில் (Valentine Week) பிப்ரவரி 14ம் தேதியான காதலர் தினம் வரை ஒவ்வொரு நாளும் பல்வேறு வழிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கிடையில், டெடி தினம் (Teddy Day 2026) வாரத்தின் நான்காவது நாளான பிப்ரவரி 10 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், காதல் கொண்டவர்கள் தங்களது எதிர் பாலினத்தவருக்கு கரடி பொம்மை என்று அழைக்கப்படும் டெடி பியர்களை பரிசாக வழங்குவார்கள். இது அன்புக்குரியவர்களிடம் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்த ஒரு அற்புதமான வழியாகும். டெடி பியர் ஒரு மென்மையான பொம்மை மட்டுமல்ல, அன்பு மற்றும் பாசத்தின் சின்னமாகுமாகவும் பார்க்கப்படுகிறது.
அன்புக்குரியவர்களுடன் அன்பையும் நெருக்கத்தையும் வளர்ப்பதற்கு டெடி தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி, உங்கள் உணர்வுகளை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாவிட்டால், டெடி பியர் வாங்கி கொடுத்து காதலை வெளிப்படுத்தலாம். இது உங்கள் காதலை சௌகரியமாக உணர செய்யும்.
ALSO READ: காதலை போற்றும் காதலர் தினம்.. எப்படி உருவானது..? இதன் வரலாறு என்ன?




டெடி தினத்தின் வரலாறு என்ன..?
அமெரிக்காவின் 26வது அதிபரான தியோடர் ரூஸ்வெல்ட்டின் நினைவாக இந்த டெடி பியர் தினம் பெயரிடப்பட்டது. கடந்த 1902ம் ஆண்டில், ரூஸ்வெல்ட் ஒரு வேட்டைக்காக காட்டிற்குள் சென்றார். அப்போது அவருக்காக ஒரு கரடி பிடிக்கப்பட்டது, ஆனால் அவர் அதைக் கொல்ல மறுத்துவிட்டார். இந்த சம்பவத்தின் கதை செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டது. பின்னர் ஒரு பொம்மை நிறுவனம் அதன் அடிப்படையில் ஒரு அழகான கரடியை உருவாக்கியது. இது நாளடைவில் மிகவும் பிரபலமானது. அதற்கு “டெடி பியர்” என்று பெயரிடப்பட்டது. அப்போதிருந்து, அது காதல் மற்றும் பாசத்தின் அடையாளமாக மாறியுள்ளது.
டெடி தினத்தை எப்படி கொண்டாடுவது?
ஒரு டெடி பியரை பரிசளிக்கவும்:
காதலர் வாரத்தில் வரும் டெடி தினத்தில் உங்கள் துணைக்கு ஒரு டெடி பியரைப் பரிசளிக்கலாம். அதை இன்னும் சிறப்பானதாக்க, நீங்கள் அவர்களுக்கு டெடி பியருடன் சாக்லேட்டுகளையும் பரிசளிக்கலாம். இருப்பினும், பரிசு அவர்களின் விருப்பப்படி இருந்தால், அவர்கள் அதை இன்னும் அதிகமாக காதலிக்க செய்யும்.
சர்பரைஸை திட்டமிடுதல்:
சிலர் இந்த நாளில் ஒரு சிறப்பு டேட் நைட், பரிசு பொருட்கள் அல்லது சர்பரைஸை திட்டமிடுவதன் மூலம் தங்கள் அன்பை வெளிப்படுத்தலாம். அப்போது, இந்த டெடி பியரை பரிசாக வழங்கலாம்.
உங்கள் காதலை வெளிப்படுத்துதல்:
உங்கள் அன்பை வெளிப்படுத்த நீங்கள் தயங்கினால், ஒரு டெட்டி பியருடன் ஒரு இனிமையான காதல் மடலை எழுதி, உங்கள் துணையிடம் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த ஒரு சிறந்த வழியாகும்.
ALSO READ: சிவப்பு ஏன் காதலின் நிறம் தெரியுமா? உண்மையான காரணம் இதுதான்!
டெடி தினம் என்பது வெறும் பரிசுகளை வழங்குவதற்கான நாள் மட்டுமல்ல, அன்பு, பாசம் மற்றும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். நீங்கள் யாருக்காவது டெடியை பரிசளித்தாலும் சரி அல்லது ஒரு சிறப்பான சர்பரைஸை திட்டமிட்டாலும் சரி, இந்த நாள் உங்கள் உறவில் மேலும் ஆழத்தையும் நல்ல நினைவுகளையும் தரும்.