Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Valentine’s Day: காதலை போற்றும் காதலர் தினம்.. எப்படி உருவானது..? இதன் வரலாறு என்ன?

Valentine's Day History: காதலர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது ரோமானிய பேரரசர் கிளாடியஸின் ஆட்சி காலத்தில் உருவானதாகவும், செயிண்ட் வேலண்டைன் என்ற ஒரு பாதிரியார் நினைவாக கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. இப்படியே காதலர் தினம் உருவானது.

Valentine’s Day: காதலை போற்றும் காதலர் தினம்.. எப்படி உருவானது..? இதன் வரலாறு என்ன?
காதலர் தின வரலாறுImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 05 Feb 2026 16:53 PM IST

காதலர் தினம் (Valentine’s Day) ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது காதல் மற்றும் காதலர்களான பண்டிகையாகும். இந்த நாளில் காதலர்கள் (Lovers) தங்களது எதிர்பாலினத்தவர்களுக்கு பரிசுகளை கொடுத்து அன்பை பரிமாறுவார்கள். இருப்பினும், உலகம் முழுவதும் வருடந்தோறும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வந்தாலும், இந்த காதலர் தினம் எப்போது, ஏன் கொண்டாடப்படுகிறது என்பதை அறிவதில்லை. அதன் பின்னணியில் உள்ள கதை என்ன என்று யோசிப்பவர்களுக்கு இந்த கட்டுரை போதுமான விளக்கத்தை தரும்.

ALSO READ: பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற ‘டாப்-10’ இந்திய நகரங்கள்.. சென்னைக்கு எத்தனையாவது இடம்?

காதலர் தினம் எப்படி தொடங்கியது..?

காதலர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது ரோமானிய பேரரசர் கிளாடியஸின் ஆட்சி காலத்தில் உருவானதாகவும், செயிண்ட் வேலண்டைன் என்ற ஒரு பாதிரியார் நினைவாக கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. அதன்படி, காதலர் தினம் செயிண்ட் வேலண்டைனின் அன்பு மற்றும் தியாகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டது. பின்நாளில், அவரது பெயரில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது.

காதலர் தின வரலாறு:

காதலர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது என்பது குறித்து பல கோட்பாடுகள் உள்ளன. ஆனால், உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. கிடைத்த தகவலின்படி, கி.பி 270 இல் ரோமானியப் பேரரசின் போது, ​​கிளாடியஸ் கோதிகஸ் II என்ற மன்னர் ஆட்சி செய்து வந்துள்ளார். அந்த மன்னருக்கு தன் ஆட்சியில் படை வீரர்கள் காதலிக்கவும், திருமணம் செய்யவும் தடை விதித்திருந்தார். இதற்கு காரணம், திருமணம் செய்யாமல் வீரர்கள் அதிக சக்தி வாய்ந்தவர்களாக மாற வேண்டும் என்று மன்னர் விரும்பினார்.

அப்போது, அந்த நாட்டில் வாழ்ந்து வந்த செயிண்ட் வேலண்டைன் மன்னரின் உத்தரவிற்கு எதிர்ப்பு எதிர்த்தார். மேலும், மன்னரை மீறி, வீரர்கள் மற்றும் குடிமக்களுக்கு காதலின் புனிதத்தையும், காதலித்தவர்களுக்கு திருமணமும் செய்து வைத்தார். இதை அறிந்து கொண்ட மன்னர், செயிண்ட் வேலண்டைனை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து கிறிஸ்தவத்தை கைவிட்டு ரோமானிய மதத்தைத் தழுவும்படி கேட்டுக் கொண்டார். செயிண்ட் வேலண்டை இதற்கு மறுப்பு தெரிவித்து, மன்னரை தனது மதத்தை மாற்றுமாறு அறிவுறுத்தினார். இதனால் மன்னர் அதிருப்தி அடைந்து, பிப்ரவரி 14, 269 அன்று அவரை தூக்கிலிட உத்தரவிட்டார்.

பிப்ரவரி 14ம் தேதி, காதலுக்காக தன்னையே தியாகம் செய்து, காதலர் தினத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அறிக்கைகளின்படி, காதலர் தினம் முதன்முதலில் 496 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. காதலர் தினம் ஒரு ரோமானிய பண்டிகையிலிருந்து தோன்றியதாக பலர் நம்புகிறார்கள். 5 ஆம் நூற்றாண்டின் இறுதியில், போப் கெலாசியஸ் பிப்ரவரி 14 ஆம் தேதியை புனித காதலர் தினமாக அறிவித்தார். அப்போதிருந்து, பிப்ரவரி 14 ஆம் தேதி காதல் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

ALSO READ: ரோஜாவுடன் தொடங்கும் காதலர் தின வாரம்.. எந்த நாளில் என்ன கொண்டாட வேண்டும்?

1969 வாக்கில், கத்தோலிக்க திருச்சபை காதலர் தினங்களை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. மேலும், செயிண்ட் வேலண்டைனை கௌரவிக்கும் வகையில் வேலண்டைனை பெயரில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடத் தொடங்கியது.