காதலை ஏற்றுக்கொள்ளாததால் ஸ்பெயின் பெண்ணை கொல்ல முயன்ற நபர்.. பகீர் சம்பவம்!
Man Tried To Kill Spain Woman | ஸ்பெயினை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பெங்களூரில் தங்கி யோகா கற்றுக்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில், அவரை ஒருதலையாக காதலித்த இளைஞர் ஒருவர் அந்த பெண் தனது காதலை ஏற்றுக்கொள்ளாததால் அவரை கொலை செய்ய முயன்றுள்ளார்.
பெங்களூரு, ஜனவரி 26 : ஸ்பெயின் (Spain) நாட்டை சேர்ந்தவர் மரியா சபாடீ ஹொலியூ என்ற 28 வயது இளம் பெண். இவர் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மைசூருக்கு வந்துள்ளார். அங்குள்ள யோகா பயிற்சி பள்ளி ஒன்றில் இணைந்துள்ள அவர், யோகா கற்று வருகிறார். இதற்காக அவர் மைசூர் டவுன் பகுதியில் உள்ள லட்சுமிபுரம் பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், தனது காதலை ஏற்க மறுத்ததால் மரியாவை இளைஞர் ஒருவர் கொலை செய்ய முயன்றுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலை ஏற்க மறுத்ததால் ஸ்பெயின் பெண்ணை கொலை செய்ய முயற்சி
மரியா யோகா கற்றுக்கொண்டு வரும் அதே பயிற்சி பள்ளியில் ராகுல் தத்தா என்ற இளைஞரும் யோகா கற்று வந்துள்ளார். அவர் மரியாவுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். அப்போது ஒரு கட்டத்தில் ராகுல் மரியாவிடம் தனது காதலை தெரிவித்துள்ளார். ஆனால், அவரது காதலை ஏற்க மாரியா மறுத்துள்ளார். மரியா தனது காதலை நிராகரித்த நிலையில், ராகுல் கடும் விரக்தியில் இருந்து வந்துள்ளார்.
இதையும் படிங்க : இந்தியாவில் என்ஜீனியர்களுக்கு குறைந்த சம்பளம்…மகேஷ்வர் பெரி விடுத்த எச்சரிக்கை!
இந்த நிலையில், 2025 டிசம்பர் மாதம் ராகுல் மரியாவை மீண்டும் சந்தித்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். அப்போதும் அவரது காதலை ஏற்க மரியா மறுத்துள்ளார். அதுமட்டுமன்றி ஸ்பெயினில் தனக்கு காதலன் இருப்பதாகவும் மரியாக கூறியுள்ளார். அது ராகுலை மேலும் விரக்தி அடைய செய்துள்ளது.
ஸ்கூட்டரில் மோதி கொலை செய்ய முயன்ற ராகுல்
மரியா தனது காதலை ஏற்றுக்கொள்ளாததால் அவரை கொலை செய்ய ராகுல் திட்டமிட்டுள்ளார். அதன்படி, ஜனவரி 17, 2026 ஸ்கூட்டரில் சென்றுக்கொண்டு இருந்த மரியாவை ராகுல் தனது மோட்டார் பைக் கொண்டு மோதியுள்ளார். இதனால் தூக்கி வீசப்பட்ட மரியா உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த நிலையில், அவரை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ராகுல் தலைமறைவாகியுள்ளார்.
இதையும் படிங்க : டெல்லி கடமை பாதையில் தேசிய கொடியை ஏற்றிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.. பிரம்மாண்டமாக நடந்த அணிவகுப்பு நிகழ்ச்சி
ராகுலை போலீசார் வலை வீசி தேடி வந்த நிலையில், ஜனவரி 24, 2026 அன்று போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.