இந்தியாவில் என்ஜீனியர்களுக்கு குறைந்த சம்பளம்…மகேஷ்வர் பெரி விடுத்த எச்சரிக்கை!
Career 360 Founder Mahesh Peri: இந்தியாவில் என்ஜீனியரிங்க படித்த மாணவர்களுக்கு குறைந்த அளவே ஊதியமாக வழங்கப்படுவதாக கேரியர் 360 நிறுவனர் மகேஷ்வர் பெரி எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.
கேரியர் 360 நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான மகேஸ்வர் பெரி தனது எக்ஸ் தள பக்கத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ( ஜனவரி 25) வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தார். அந்த வீடியோவில் தேசிய அளவில் ஜேஇஇ தேர்வில் முதல் 5 சதவீத மதிப்பெண் பெற்றவர்களை இந்த படிப்புகளில் சேர்த்துக் கொண்டாலும், காலிகட் என்ஐடி-இல் பி.டெக் (மெக்கானிக்கல்) மாணவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ. 3 லட்சமும், பி.ஆர்க்கிடெக் பட்டதாரிகளுக்கு ரூ. 2.75 லட்சமும் சம்பளம் வழங்கப்படுவதாக பெரி தெரிவித்து இருந்தார். அந்த வீடியோவில், கண்ட தரவுகளால் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், கல்லூரிகள் வழக்கமாக அதிகபட்ச, சராசரி மற்றும் முதல் 10 சம்பளத் தொகுப்புகளை முன்னிலைப்படுத்தினாலும், உண்மையான பிரச்சினை பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகிறது. அதுதான் மாணவர்களுக்கு வழங்கப்படும் மிக குறைந்த ஊதியமாக உள்ளது.
60 ஆண்டு கால மதிப்பு மிக்க நிறுவனம்
60 ஆண்டு கால மதிப்புமிக்க நிறுவனத்தின் பாரம்பரியம் இருந்த போதிலும், காலிகட் என்ஐடி- இன் வேலை வாய்ப்பு தரவு மாணவர் தகுதிக்கும், நிதியின் வெகுமதிக்கும் இடையே ஒரு அதிர்ச்சியூட்டும் வேறுபாட்டை வெளிப்படுத்தி உள்ளது. காலிகட் என்ஐடி-இல் இடம்பெறுவதற்கு நாடு முழுவதும் உள்ள ஜேஇஇ தேர்வர்களில் முதல் 2 முதல் 5 சதவீதத்திற்குள் தரவரிசை பெற்றிருக்க வேண்டும். இருப்பினும், இந்த உயர் அடுக்கு திறமைக்கு சந்தையின் பதில் பெருக முறையில் மோசமாக உள்ளது.
மேலும் படிக்க: மத்திய பட்ஜெட் 2026: ஹல்வா விழா என்றால் என்ன? இதன் முக்கியத்துவம் என்ன?




மகேஷ்வர் பெரி எழுப்பிய கேள்வி
சிறந்த மாணவர்கள் இந்த நாட்டின் முதல் 5 சதவீதத்தினர் ஆண்டுக்கு ரூ. 2.75 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.3.75 லட்சம் ஆரம்ப சம்பளத்திற்கு தகுதியானவர்களா அல்லது முழு விஷயத்தில் நாம் ஏதும் தவறு செய்கிறோமோ என்று கேள்வி எழுப்பினார். இந்த படிப்புகளில் சேரும் மாணவர்கள் இந்த நிறுவனத்தில் சேர ஆயிரக்கணக்கான சக மாணவர்களை விட சிறப்பாக செயல்பட வேண்டி உள்ளது. இருப்பினும் பட்டப் படிப்பு முடிந்ததும் பலருக்கு முதல் நிலை நகரங்களில் அடிப்படை வாழ்க்கை செலவுகளை ஈடு கட்டும் வகையில் சம்பளம் வழங்கப்படுகிறது.
தொழில்துறை-கல்வி முறை விமர்சிப்பு
இது பெரும்பாலும் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பணவீக்கத்தால் சரி செய்யப்பட்ட ஊதியத்தை விட குறைவாகும் என்று தெரிவித்தார். மகேஷ் பெரி எழுப்பிய கேள்வியானது தொழில்துறை மற்றும் கல்வி முறை இரண்டையும் விமர்சிப்பதாக உள்ளது. 98.5 சதவீத தரவரிசை பெற்ற மாணவர்கள் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரையிலான தொடக்க சலுகைகளை எதிர்கொள்கின்றனர். இதனிடையே, 5 ஆண்டு தொழில் முறை பட்டப் படிப்பை முடித்த பி.ஆர்க் பட்டதாரிகள் வெறும் ரூ.2.75 லட்சம் மட்டுமே சம்பளமாக பெறுகின்றனர்.
மேலும் படிக்க: 2026 பட்ஜெட் கூட்டத்தொடர்.. ஜன.27ல் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு..