குஜராத்தின் Surat நகரில் கோவிலின் கழிவறையில் இரண்டு கல்லூரி மாணவிகள் மர்மமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், அவர்கள் தற்கொலை செய்யும் வழிகளை அறிய ChatGPTல் தேடியிருந்தது போலீசாரால் கண்டறியப்பட்டது. 18 முதல் 20 வயதுடைய இந்த இரு நண்பர்கள் கல்லூரிக்குச் சென்றதாக கூறி வீட்டை விட்டு வெளியேறி மாலை வரை திரும்பவில்லை. அவர்களின் மொபைல் சிக்னலைப் பின்தொடர்ந்து போலீசார் Swaminarayan Temple அருகே சென்றனர். அங்கு கோவிலின் கழிவறையில் அவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அருகில் மயக்க மருந்து பாட்டில்கள் மற்றும் சிரிஞ்சுகளும் இருந்தன.