Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அப்ளிகேஷன் முதல் ஆற்றல் வரை – ஏஐ வளர்ச்சியில் இந்தியாவின் 5 அடுக்கு கட்டமைப்பு

இந்தியா செயற்கை நுண்ணறிவு துறையில் உலக அளவில் முன்னணி இடத்தை பிடிக்கும் விதமாக, முழுமையான ஒரு செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. பயன்பாடுகள் முதல் ஆற்றல் வரை, ஒன்றுடன் ஒன்று இணைந்த 5 முக்கிய அடுக்குகள் மூலம், ஏஐ வளர்ச்சியை மக்கள் நலன் மற்றும் பொருளாதார முன்னேற்றத்துடன் இணைப்பதே அரசின் நோக்கமாக உள்ளது.

அப்ளிகேஷன் முதல் ஆற்றல் வரை – ஏஐ வளர்ச்சியில் இந்தியாவின் 5 அடுக்கு கட்டமைப்பு
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 21 Jan 2026 17:23 PM IST

இந்தியா செயற்கை நுண்ணறிவு துறையில் உலக அளவில் முன்னணி இடத்தை பிடிக்கும் விதமாக, முழுமையான ஒரு செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. பயன்பாடுகள் முதல் ஆற்றல் வரை, ஒன்றுடன் ஒன்று இணைந்த 5 முக்கிய அடுக்குகள் மூலம், ஏஐ வளர்ச்சியை மக்கள் நலன் மற்றும் பொருளாதார முன்னேற்றத்துடன் இணைப்பதே அரசின் நோக்கமாக உள்ளது.

1. அப்ளிகேஷன் லேயர்

ஏஐ கட்டமைப்பு என்பது பொதுமக்கள், தொழில்துறை மற்றும் அரசு அமைப்புகளுக்கு நேரடியாகத் தொடர்புடையதாகும். இந்தியாவில் சில நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், மக்கள் ஏஐ தொழில்நுட்பத்தை பரவலாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. விவசாயத்தில் பயிர்களின் நிலை குறித்து கணிப்பு, மருத்துவ துறையில் நோய் கண்டறிதல், கல்வியில் அறிவை வளர்த்தல், உற்பத்தித் துறையில் செயல்திறன் மேம்பாடு, அரசு நிர்வாகத்தில் வேகமான சேவைகள் போன்ற பல துறைகளில் ஏஐ உண்மையான மதிப்பை உருவாக்கி வருகிறது.

2. மாடல் லேயர்

ஏஐ பயன்பாடுகளின் அறிவாற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறனை இயக்குவது இந்த மாடல்கள் ஆகும். ஆரம்ப காலத்தில் இந்த மாடல்களுக்கு அதிக கணினி சக்தி மற்றும் முதலீடு தேவைப்படுவதாக இருந்தன. இதனால், சிறிய நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஏஐ வளர்ச்சியில் பங்கேற்பது கடினமாக இருந்தது. ஆனால்,ஓபன் சோர்ஸ் ஏஐ மாடல்கள் வந்ததன் மூலம் செலவுகள் குறைந்து, பயன்படுத்துவதற்கான தடைகள் நீங்கின. இந்தியா உருவாக்கும் ஏஐ மாடல்கள், இந்திய மொழிகள், உள்ளூர் தேவைகள், சட்டங்கள் மற்றும் கலாச்சாரத்திற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்படவுள்ளன. மேலும், டேட்டா பாதுகாப்பு, பண்பாட்டு அடையாளம் மற்றும் பிரைவசி உறுதி செய்யப்படும்.

3. சிப் மற்றும் கம்ப்யூட் லேயர்

ஏஐ மாடல்களை பயிற்சி செய்யவும், பயன்பாட்டில் இயக்கவும் தேவையானது கணினி சக்தி. இதற்காக GPUs, TPUs, NPUs போன்ற உயர் செயல்திறன் சிப்கள் அவசியம். ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஏஐ வளர்ச்சியில் பங்கேற்க, மலிவான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய கணினி வளங்கள் முக்கியமானவை. தேசிய செயயற்கை நுண்ணறிவு திட்டங்களின் கீழ், 38,000-க்கும் அதிகமான GPUs, உலக சராசரி செலவின் மூன்றில் ஒரு பகுதி விலையில் வழங்கப்படுகின்றன. மேலும், இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகள் (Fabs) மற்றும் ATMP யூனிட்டுகள் அமைக்கப்பட்டு, உள்நாட்டு சிப் தயாரிப்பு திறன் வளர்க்கப்படுகிறது.

4. டேட்டா சென்டர் லேயர்

ஏஐ மாடல்கள், தரவுகள் மற்றும் கணினி வளங்களை தாங்கி நிற்பது டேட்டா சென்டர்களே. இந்தியாவில், கூகுள், மைக்ரோசாஃப்ட், அமேசான் போன்ற உலகப் பெருநிறுவனங்கள் சேர்ந்து இதுவரை 70 பில்லியன் டாலருக்கு மேல் முதலீடு செய்து, டேட்டா சென்டர் திறனை விரிவுபடுத்தியுள்ளன. இதற்காக ஆற்றல் திறன் போன்ற துறைகளில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம், இந்தியாவில் டிஜிட்டல் செயல்பாடு வலுப்பெறும் அதே நேரத்தில், உயர் திறன் கொண்ட வேலைவாய்ப்புகளும் உருவாகின்றன.

5. எனர்ஜி லேயர்

ஏஐ மற்றும் டேட்டா சென்டர்களின் வளர்ச்சியால், 24×7 நம்பகமான மின்சாரம் அவசியமாகிறது. இதனால், தொடர்ச்சியான மின்சாரத்திற்காக அணு ஆற்றல் முக்கியத்துவம் பெறுகிறது. இதற்காக சிறிய மாட்யூலர் மற்றும் மைக்ரோ அணு உலைகள், பொது மற்றும் தனியார் கூட்டாண்மை, வெளிநாட்டு முதலீடு ஆகியவற்றின் மூலம், அணு ஆற்றல் அடிப்படையிலான ஏஐ கட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளது.

இந்தியாவின் ஏஐ கட்டமைப்பு அணுகுமுறை, வெறும் தொழில்நுட்ப வளர்ச்சியை மட்டும் அல்லாமல், மக்கள் நலன், பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை முன்னேற்றம் மற்றும் தேசிய தன்னாட்சி ஆகியவற்றையும் ஒருங்கிணைக்கிறது. பயன்பாடுகள் முதல் ஆற்றல் வரை, இந்த 5 அடுக்குகளும் இணைந்து செயல்படுவதன் மூலம், இந்தியா உலக AI வரைபடத்தில் ஒரு முக்கிய சக்தியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.