Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருவனந்தபுரம்-தாம்பரம் அம்ரித் பாரத் ரயில்…பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Thiruvananthapuram to Tambaram Amrit Bharat Train: திருவனந்தபுரம் டூ தாம்பரம அம்ரித் பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கேரள மாநிலத்தில் கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார். இந்த ரயிலானது தமிழகத்தின் தென் மாவட்டங்கள் வழியாக சென்னையை வந்தடையும்.

திருவனந்தபுரம்-தாம்பரம் அம்ரித் பாரத் ரயில்…பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
அம்ரித் பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 23 Jan 2026 12:15 PM IST

கேரள மாநிலம், திருவனந்தபுரத்திலிருந்து, சென்னை தாம்பரத்திற்கு தென் மாவட்டங்கள் வழியாக அம்ரித் பாரத் ரயில் சேவை தொடங்க உள்ளதாக ரயில்வே வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை ( ஜனவரி 23) திருவனந்தபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பச்சை நிற கொடியை அசைத்து தொடங்கி வைத்தார். அதன்படி, இந்த ரயிலானது ( வண்டி எண்-16121-16122) திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு, குளித்துறை, நாகர்கோவில் டவுண், வள்ளியூர் வழியாக திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு இன்று பிற்பகல் 1:20 மணிக்கு வந்து சேரும். பிறகு, 1:25 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்துக்கு இன்று இரவு 11:45 மணிக்கு வந்தடைகிறது.

அம்ரித் பாரத் ரயிலில் எத்தனை பெட்டகள் உள்ளன

இந்த ரயிலில் படுக்கை வசதி கொண்ட 2- ஆம் வகுப்பு பெட்டிகள் 11  எண்ணம், இருக்கை வசதி உடைய முன்பதிவு செய்யப்படாத 8 பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 2 பெட்டிகள், ஒரு உணவு தயாரிக்கும் பெட்டி என 22 பெட்டிகள் இந்த அம்ரித் பாரத் ரயிலில் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் பயண நேரம் மற்றும் தேதி ஆகியவை இறுதி செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பட்ஜெட் 2026: எப்போது தாக்கல் செய்யப்படும்? பொருளாதார ஆய்வு அட்டவணை.. எப்படி நேரலையில் பார்ப்பது? முழு விவரம் இதோ..

கேரளா – தமிழகத்தை இணைக்கும் வகையில்

தமிழகத்தில் ஏற்கெனவே ஈரோடு மார்க்கத்தில் அம்ரித் பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதில், 2- ஆம் கட்டமாக மேற்குவங்க மாநிலம் மற்றும் தமிழகம் இடையே 4 அம்ரித் பாரத் ரயில்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்கப்பட்டன. இந்த ரயில்களுக்கான நேர அட்டவணை உள்ளிட்டவை அண்மையில் வெளியிடப்பட்டது. தற்போது, தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், கேரளா மற்றும் தமிழகத்தை இணைக்கும் வகையில் மேலும், ஒரு அமிர்த பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

அம்ரித் பாரத் ரயிலில் உள்ள அம்சங்கள்

சாதாரண நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் இந்த அம்ரித் பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் ஏசி வசதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகளின் பாதுகாப்பு வசதிக்காக கண்காணிப்பு கேமராக்கள், அவசர அழைப்பை மேற்கொள்வதற்கான வசதி, ரயில் நிலையங்களின் பெயர்களை தெரிவிக்கும் டிஜிட்டல் போர்டு, ரயில் நிலையங்களின் பெயர்களை அறிவிக்கும் ஒலிபெருக்கிகள், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.

மேலும் படிக்க: காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து.. 10 வீரர்கள் பலி; 11 பேர் படுகாயம்..